Wednesday, November 11, 2015

பிகார் தேர்தல்: பார்ப்பன ஆதிக்கம் தகர்ந்தது!



பாட்னா, நவ.11_ நடந்து முடிந்த பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர் தலில் - பார்ப்பன ஆதிக் கம் தகர்க்கப்பட்டது.
பிகார் சட்டமன்றத் தில் புதிதாக தேர்வாகி யுள்ளவர்களில் நான்கில் ஒருவர் பிற்படுத்தப்பட்ட யாதவராக உள்ளார்.
'மகாத்பந்தன்' கூட்ட ணியின் குறிப்பிடத்தக்க வெற்றிக்கு முக்கிய பங் களிப்பை வழங்கியுள்ளவர் லாலு ஆவார்.
2015 ஆம் ஆண்டு பிகார் சட்டமன்றத் தேர் தலில் தேர்ந்தெடுக்கப்பட் டவர்களில் பார்ப்பனர்கள் எண்ணிக்கையில் குறைந் துள்ளனர். முதல்முறை யாக பிற்படுத்தப்பட்ட வர்கள், தாழ்த்தப்பட்ட வர்கள், பழங்குடியினர் உள்ளிட்ட பிற வகுப்பி னர் எண்ணிக்கை விழுக் காட்டில் அதிகரித்து வர லாறு படைத்துள்ளனர்.
தேர்வு செய்யப்பட்டுள் ளவர்களில் 61 பேர் யாதவ வகுப்பினர். அவர்களில் 1990 ஆம் ஆண்டுமுதல் 2005 முடிய 15 ஆண்டுகள் பிகாரில் ஆட்சிபுரிந்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தோர் 42 பேர் ஆவர். அய்க்கிய ஜனதா தளத்திலிருந்து 11 யாதவ வகுப்பினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் காங்கிரசு கட்சி யிலிருந்து  இருவரும், பாஜகவிலிருந்து அறு வரும் தேர்வு செய்யப்பட் டுள்ள யாதவ வகுப்பினர் ஆவார்கள்.
புதிய சட்டமன்றத்தில் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களில் 10 பேர் மட்டுமே பார்ப்பனர்கள்.
பல்வேறு கட்சிகளி லிருந்தும் தாழ்த்ப்பட்ட வர்கள் 38 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ராஷ்டிரிய ஜனதா தளத் திலிருந்து 13 பேரும், அய்க் கிய ஜனதா தளத்திலி ருந்து 10 பேரும், பாஜக கூட்டணியிலிருந்து 9 பேரும், காங்கிரசிலிருந்து 5 பேரும், இந்திய கம்யூ னிஸ்ட் (மார்க்சிஸ்ட்_ லெனினிஸ்ட் விடுதலை) கட்சியிலிருந்து ஒருவரும் ஆக 38 தாழ்த்தப்பட்டவர் கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சட்டமன்ற உறுப்பி னர்களாக தேர்வு செய்யப் பட்டுள்ளவர்களில் மூன் றாமிடத்தில் முசுலிம்கள் உள்ளனர். ராஷ்டிரிய ஜனதா தளத்திலிருந்து 12 பேரும், அய்க்கிய ஜனதா தளத்திலிருந்து 5 பேரும், காங்கிரசு கட்சியிலிருந்து 6 பேரும், இந்திய கம்யூ னிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை) கட்சியிலிருந்து ஒருவர் என்கிற அளவில் முசுலிம் கள் தேர்வு செய்யப்பட் டுள்ளனர்.
பாஜக கூட்டணியில் முசுலிம் எவரும் தேர்வு செய்யப்படவில்லை.  பாஜக சார்பில் இருவர், எச்ஏஎம்(எஸ்) சார்பில் நால்வர், லோக் ஜனசக்தி சார்பில் மூவர் மற்றும் ஆர்.எல்.எஸ்.பி. சார்பில் ஒருவர் நிறுத்தப்பட்டிருந் தாலும் பாஜக கூட்டணி யில் நிறுத்தப்பட்ட முசு லிம்கள் எவரும் வெற்றி பெறவில்லை.
ராஜபுத்திரர் வகுப்பி னரில் ராஷ்டிரிய ஜனதா தளத்திலிருந்து இருவரும், அய்க்கிய ஜனதா தளத்திலிருந்து 6 பேரும், காங்கிரசு கட்சியிலிருந்து 3 பேரும், பாஜகவிலிருந்து 8 பேரும் தேர்வாகியுள் ளனர். லோக்ஜனசக்தி, ஆர்.எல்.எஸ்.பி, மற்றும் எச்ஏஎம்(எஸ்) சார்பில் எவரும் வெற்றி பெற வில்லை.
அய்க்கிய ஜனதாதளத் திலிருந்து அதிக எண் ணிக்கையில் கொயெரிஸ் வகுப்பினர் 11 பேரும், ராஷ்டிரிய ஜனதா தளத் திலிருந்து 4 பேரும், பாஜ கவில் 3 பேரும், ஆர்.எல். எஸ்.பி சார்பில் ஒருவரும் தேர்வானார்கள்.
காங்கிரசு கட்சியின் சார்பில் நிறுத்தப்பட் 41பேரில் தேர்வாகியுள்ள 27 பேரில் முசுலிம்கள் 6பேரும், தாழ்த்தப்பட்ட வர்கள் 5 பேரும், பார்ப்ப னர்கள் 4 பேரும்,  பூமி கார்கள் 4 பேரும், ரஜபுத் திரர்கள் 3பேரும், யாத வர்கள் 2பேரும், குர்மி வகுப்பிலிருந்து ஒருவரும், காயஸ்தா வகுப்பிலிருந்து ஒருவரும் மற்றும் பழங் குடியினத்தவர் ஒருவரும் தேர்வானார்கள்.
ராம்விலாஸ் பாஸ் வான் அவருடைய குடும் பத்தவர் உள்பட  11 பேர் தாழ்த்தப்பட்டவகுப்பிலி ருந்து போட்டியிட்டா லும் எவரும் வெற்றி பெறவில்லை.
முறியடித்துள்ள  வரலாறு 2015
பார்ப்பனர்கள் 10, பூமிகார்கள் 17, ராஜ புத்திரர்கள் 19, காயஸ் தாக்கள் 3, யாதவர்கள் 61, குர்மிகள் 16, கொயெ ரிக்கள் 19, வைசியர்கள் 16, தாழ்த்தப்பட்டவர்கள் 38, பழங்குடியினர் 2 மற்றும் முசுலிம்கள் 24
1952 முதல் 2010 ஆம் ஆண்டுவரை உள்ள தக வல்களின்படி, ஆளும் ஜாதியினர், பிகாரில்  மேலாண்மை செலுத்தி வந்துள்ளனர்
1952_2010 புள்ளி விவரத் தகவல்களை டிஅய்எஸ்எஸ், 1990_2011 ஆம் ஆண்டு மணீஷ் கே ஜா மற்றும் புஷ்பேந்திரா மற்றும் 2015 ஆம் ஆண்டு புள்ளி விவரத் தகவல் களை ‘டைம்ஸ் ஆப் இந் தியா’ (10.11.2015) நாளிதழ் வெளியிட்டுள்ளது.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...