Wednesday, November 11, 2015

வயிற்றெரிச்சலைக் கொட்டுகிறார் வைத்தியநாத அய்யர்!


“தினமணி” கோயங்கா குடும்பப் பத்திரிகை என்ற நிலை முற்றிலுமாய் மாறி ஆரிய பார்ப்பன பத்திரிகையாய் பட்டயம் எழுதிக் கொண்டுவிட்டனர் என்பதாய் செயல்பட்டு வருகிறது.
அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடு போலவே ஒளிவுமறைவு இன்றி, கூச்சநாச்சமின்றி செய்திகளை வெளியிட்டுவருகிறது.
அ.தி.மு.க.வை அணைத்து தூக்கிப் பிடிக்கும் அதே நேரத்தில், பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். ஆதரவு நிலையை அணு பிசகாமல் எடுத்து வருகிறது.
இராமசம்பந்தன் அவர்கள் ஆசிரி யராக இருந்தபோது தமிழுக்கும், தமி ழனுக்கும் சற்றே ஆதரவு நிலை இருந் தது. ஆனால் துக்ளக் “சோ”வின் அணுக்கத் தொண்டரும், ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பெற்றவருமான வைத்தியநாத அய்யர் ஆசிரியராய் ஆனதும், தின மணி அவர்கள் இனமணியாக ஒலிக்கத் தொடங்கிவிட்டது.
பெரியாரின் படத்தைக்கூட வெளி யிடக்கூடாது என்பதில் உடும்பு உறுதி! தமிழை வளர்ப்பது போலக் காட்டிக் கொண்டே தமிழுக்கும் - தமிழனுக்கும் எதிரான செயல்பாடுகள்! நடுநிலை என்று சொல்லிக்கொண்டே பச்சையான பாரபட்ச நிலை. “நல்லவன் போல் நடிப் பான்” ஞானத் தங்கமே என்பதற்கு சரியான எடுத்துக்காட்டு. மாநிலத்தில் ஜெயலலிதாவும், மத்தியில் பா.ஜ.க.வும் ஆளவேண்டும் என்பதற்கான அயரா முயற்சி, அநியாய முயற்சி, ஏன் அயோக் கியத்தனமான முயற்சி இவையே வைத்தியநாத அய்யரின் வைராக்கியக் கொள்கை! ஒவ்வொரு நாள் தினமணி யும் இதை உறுதி செய்யும்.
பிகார் தேர்தல் முடிவை பி.ஜே.பி. கட்சியினரே ஒத்துக்கொள்கின்றனர். மரபுக்காகவேனும் பாராட்டுகின்றனர். ஆனால், வைத்தியநாத அய்யரோ தாங்க முடியாத வயிற்றெரிச்சலில் தவிக்கிறார்.
பி.ஜே.பி. படுதோல்வி அடைந்து, நிதிஷ் அணி அபார வெற்றியை குவித் துள்ள நிலையில் தினமணியின் தலைப்புச் செய்தி என்ன தெரியுமா?
“பீகாரில் மீண்டும் நிதிஷ் ஆட்சி” இதே பி.ஜே.பி. அமோகமாய் வென்று நிதிஷ் தோற்றிருந்தால் வைத்தியநாத அய்யரின் பேனா எப்படிச் சுழன்றிருக் கும்? எண்ணிப்பாருங்கள். ஒரு இடத்தில் கூட மகத்தான வெற்றி என்று பெரிய எழுத்தில் குறிப்பிடவில்லை.
இதைக்கூட மன்னிக்கலாம். உள்ளே புரட்டி தலையங்கத்தைப் பார்த்தால், “இனிமேல்தான் தலைவலியே!” என்று தலைப்பு. எவ்வளவு வயிற்றெரிச்சல் இருந்தால் இப்படி எழுதுவார், கற்பனை செய்து பாருங்கள்!
தேர்தலில் வெற்றி பெற்று ஒருநாள் கூட ஆகவில்லை. அதற்குள் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து, பாராட்டு, ஆலோசனை, அறிவுரை, வழிகாட்டல் சொல்வதற்குள் அவர்களுக்கு என்ன கேடு வரப்போகிறது என்பதைக் கூறி தன் ஆற்றாமை அரிப்பைத் தீர்த்துக் கொண்டுள்ளார் அய்யர்வாள்!
பீகாரில் கொள்கைக்கு, தத்துவத் திற்கு, சமூகநீதிக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது என்ற அப்பட்டமான உண்மையை மறைத்து, வாக்கு வங்கி அரிச்சுவடிக்கு வெற்றி என்று எழுதி உண்மையான மக்கள் உணர்வை உறை போட்டு மூடப்பார்க்கிறார். மதச்சார்பின் மைக்கு, சமூகநீதிக்கு, சகிப்புத் தன் மைக்கு வெற்றியென்ற உண்மை, உணர்வு வெளிச்சமாகி விடக்கூடாது என்பதில் எவ்வளவு உஷாராகச் செயல் படுகிறார் பாருங்கள்.
“அய்க்கிய ஜனதாதளம் - ராஷ்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது என்ற அளவில், தற்காலிகமாக மகிழ்ச்சி யடையலாமே தவிர, முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பிரச்சினைகளை முதல்வர் நிதிஷ்குமார் எதிர் கொள்ளப் போகிறார்” என்று தன் வயிற்றெரிச் சலுக்கு குளிர்ச்சியூட்டி மகிழ்ச்சியடை கிறார்.
கூட்டணியென்றாலே முரண்பாடு கள், மோதல்கள், சிக்கல்கள், பிணக்கு கள் இருக்கத்தான் செய்யும். முரண்பட்ட கொள்கை உடைய பா.ஜ.க.வுடன் காலந்தள்ளிய நிதிஷ்குமாருக்கு பங் காளியுடன் ஆட்சி நடத்துவதில் என்ன இடர்ப்பாடு வரப்போகிறது!
சமூக நீதிக்காக, மதச்சார்பின்மைக்காக தங்கள் தனிப்பட்ட கவுரவங்களை விட்டுக்கொடுத்து வென்றவர்களுக்கு ஆட்சியை நடத்தத் தெரியாதா? வென்ற அன்றே லாலு சொல்லி விட்டாரே, நிதிஷ்தான் முதல்வர்! அவர் இன்னும் உயர உயர செல்வார் என்று. அந்த உறவை பிளக்க அய்யர் ஏன் ஆப்பு அடிக்கிறார்? இதுதான் அவாள் புத்தி என்பதா?
அமைச்சர் நியமனம், அதிகாரிகள் மாற்றம், வளர்ச்சிப் பணியில் பங்கு என்று பிரச்சினைகள் வருமாம். ஓநாய் அழுகிறது! பி.ஜே.பி. கூட்டணி ஆட்சி நடத்தவில்லையா? சிண்டைப் பிடித்து
உலுக்கும் சிவசேனாவுடன் ஆட்சி செய்யவில்லையா? அப்போதெல்லாம் அய்யருக்கு ஏன் இந்த கவலைகள் வரவில்லை?
எல்லாவற்றிலும் மேலாக, சிகரம் வைத்தாற் போன்று தலையங்கத்தை எப்படி முடிக்கிறார் தெரியுமா?
“பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி அடைந்திருப்பது லாலு பிரசாத் யாதவ், பிரச்சினையைச் சந்திக்கப் போவது பிரதமர் மோடியும், முதல்வர்  நிதிஷ்குமாரும்!”
எவ்வளவு உயர்ந்த உள்ளம் அய் யருக்கு! நிதிஷ்குமாருக்கு பிரச்சினை வாதத்திற்குச் சரி. மோடிக்கு என்ன பிரச்சினை?
மோடிக்குப் பிரச்சினையே ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள்தானே!
அய்யா, அய்யரே! இப்ப எல்லோ ரும் ரொம்ப விழிப்பாதான் இருக்காங்க. உங்க நரி வேலையெல்லாம் இனி எடு படாது. உங்கள் சூழ்ச்சிகளும், ஆதிக்க மும், மதவாதமும் எழ எழ நீங்கள் சேற்றில் மேலும் புதைந்து போவீர் என்பதே உண்மை!
அய்யர்வாளுக்கு ஒரு “அசிஸ்ட் டன்ட்” இருக்கிறார். ஆம் “மதி”. அடுத்தத் தலைமுறையும் அப்படித்தான் இருக்கிறது என்பதன் அடையாளம்.
எழுத்தாளர் கொலை செய்யப்படு வதையும், குடும்பத் தகராறில், வரப்புத் தகராறில் கொலை செய்து கொள் வதையும் முடிச்சுப் போட்டு ஒவ்வொரு நாளும் கருத்துப்படம் போடுகிறார். மக்களுக்கு உண்மை சென்றடையக் கூடாது. அவர்களைத் திசை திருப்பிட வேண்டும் என்பதில் எவ்வளவு குறி யாக இருக்கிறார்கள். இந்த எத்தர்கள் என்பதற்கு கடந்த ஒரு வாரமாக வரும் கருத்துப் படங்களைப் பார்த்தாலே புரியும்.
எழுத்தாளர் கொலை என்பது கருத்துச் சுதந்திரத்தின்மீது, விழிப் புணர்வின்மீது, சமுதாயப் புரட்சியின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்ற அடிப்படை உண்மையை மறைத்து, இவற்றிற்குப் பொறுப்பேற்க வேண்டிய மோடியைக் காப்பாற்ற, சொந்தத் தக ராறில் நடக்கும் கொலைக்கு மோடி பொறுப்பேற்க முடியுமா? என்று அறிவு நாணயமில்லா கேள்வியை எழுப்பு கிறார்கள் என்றால், இவர்களின் மோச டித்தனத்தை மக்கள் எச்சரிக்கையுடன் புரிந்து கொள்ளவேண்டும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சிலர் தி.மு.க.வையும், கலைஞரையும் ஒழித்துக்கட்ட வேண்டுமென்று உறுதி யாய் நின்று பலவித முயற்சியையும் எடுத்து வருகிறார்கள். அதில் தின மணிக்கே முதலிடம். எனவே, ஆரிய பார்ப்பனர் சூழ்ச்சியை அவசியம் புரிந்து கொள்ள வேண்டும். அதில்தான் ஆரியர் அல்லாதாரின் பாதுகாப்பும், உயர்வும் அடங்கியுள்ளது.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...