Saturday, November 7, 2015

காமராஜர் கொலை முயற்சி சரித்திரம்



இந்தப் புரட்சி நாளில் - இந்தியாவில் உள்ள இந்துத் துவாவாதிகள் தங்களின் பாசிசக் குரூரத்தை அரங்கேற் றியதையும் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.
பசுவதைத் தடுப்பு என்ற பெயரால்  அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பச்சைத் தமிழர் காமராசர் அவர்களை இந்தியாவின் தலைநகரத்தில் - டில்லியில் பட்டப் பகலில் பச்சைப் பாசிச சக்திகளான ஆர்.எஸ்.எஸ். ஜனசங்கம், விசுவ ஹிந்து பரிஷத்தினர் நிர்வாண சாமியார்கள், சங்கராச்சாரியார்கள் ஒன்று கூடி கையில் சூலாயுதம், வேலாயுதம் தீப்பந்தம், பெட்ரோல் சகிதத்துடன் உயிருடன் கொளுத்தும் முயற்சியில் ஈடுபட்டது இதே நாளில்தான் (1966).
அந்தப் படுகொலை முயற்சிக்குக் காரணமாக இருந்தவர்கள் உரிய முறையில் தண்டிக்கப்பட்டார்களா என்றால், அதுதான் இல்லை; காங்கிரசுக்குள்ளும் காவிகள் உண்டே! நிருவாகத்தில் அனைத்துத் தளங் களிலும் பார்ப்பனீய சக்திகளின் நங்கூரம் உண்டே!
அதுவும் கொலைக்குக் குறி வைக்கப்பட்டவர் பச்சைத் தமிழர் ஆயிற்றே! தந்தை பெரியார் அவர் களால் பச்சைத் தமிழர் என்று பாராட்டப்பட்டவர் ஆயிற்றே! பார்ப்பனரின் கண்களில் கருவேல முள்ளாக உறுத்துகிறீர்கள் காமராசரே என்று புரட்சிக் கவிஞரால்  அடையாளம் காட்டப்பட்டவராயிற்றே!
பசுவதைத் தடை சட்டத்தைக் கொண்டு வராமல் இருப்பதற்குக் காரணமே இந்தக் காமராசர்தான் என்ற அசைக்க முடியாத எண்ணத்தில் அவர்  குறி வைக்கப் பட்டார்.
அந்த நிகழ்வுகளை எல்லாம் தொகுத்து ஒரு நூலாக வெளியிட வேண்டும் என்ற தந்தை பெரியார் அவர் களின் விருப்பத்தை நிறைவேற்றினார் - ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள். அந்நூலின் பெயர் காமராசர் கொலை முயற்சி சரித்திரம் என்பதாகும்.
144 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் நன்கொடை ரூபாய் 50 மட்டுமே. மறு பதிப்பும் செய்யப்பட்டுள்ளது. கொலை முயற்சித் தொடர்பாக பல்வேறு ஏடுகள் வெளி யிட்ட தகவல்களை படங்களுடன் இந்நூலில் காணலாம்.
இந்நூலுக்குத் தந்தை பெரியார் ஆழமான முகவுரையைத் தந்துள்ளார். அதில் ஒரு பகுதி இதோ.
காமராசர் கொலை முயற்சி என்பது மதத்தைப் பற்றிய கவலையைக் கொண்டதாக இல்லாமல், ஒரு சமுதாயத்தின் உயர்வை உயர்வாழ்வை அடிப்படை யாகக் கொண்டதேயாகும். உலகில் மற்ற மதக்காரர் களுக்கு ஏற்படும் மதவெறி எல்லாம் தங்கள் மதப் பெருமைக்குக் கேடு வருகின்றதே. குறைவு வருகிறதே என்கின்ற கவலையைப் பொறுத்ததாகத்தான் இருந்து வந்து இருக்கின்றது.
இந்து மதம் சம்பந்தமான மதவெறி அதிலும் மேல் ஜாதிக்காரர்களாக வாழும் பார்ப்பனர்களுக்கு ஏற்படும் மதவெறி தங்களின் உயர் வாழ்வுக்கு கேடு வந்து விடுமே என்கின்ற சுயநலத்தின்மீது ஏற்படும் வெறி தான், அதுதான் முரட்டு வெறியாகத் தோன்றி விடு கின்றது.
அப்படி தோன்றினதிலும், இப்படிப்பட்ட மத முரட்டு வெறிக்கு ஆதாரமான மத தர்மம் (மனுதர்மம்) என்பதில் தம் மதத்திற்குக் கேடுவரும்போது, எந்தவிதமான அதர்மத்தையும் கையாண்டாவது அதாவது கொலை, நாசவேலை, நாணயம், ஒழுக்கம், சத்தியம் ஆகியவை களைச் சிறிதும் பாராமல் காரிய சாத்தியமாவதற்குத் தேவை என்று தோன்றுகின்ற எந்தக் காரியத்தையும் செய்யலாம் என்கின்ற உரிமை உயர் வகுப்பாருக்கு மத தர்மத்தின்படியும் இராமாயணப்படியும் அளிக்கப்பட்டி ருப்பதால், உயர்ந்த வகுப்பார் என்பவர்களிடம் எப்போதுமே ஒழுக்கம், நாணயம், நேர்மை, சத்தியம் முதலிய எதுவும் எதிர்பார்ப்பதற்கு முடியாததாக இருந்து வருகின்றது. அதனால்தான் அவ்வகுப்பார் களுக்கு கொலை, கொள்ளை, நாசம் முதலிய துர்ச்செயல்கள்கூட மேல் வகுப்பார்களுக்கு காயத்திரி மந்திர ஜெபம் போன்ற முக்கியமும் அவசியமும் ஆன காரியமாக ஆகி வந்திருக்கிறது. என்று எழுதியுள்ளார் தந்தை பெரியார்.
காமராஜர் கொலை முயற்சி சரித்திரம் என்று ஏன் தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது? சரித்திரக் காலந் தொட்டு, பார்ப்பன ஆதிக்கத்துக்கும், வருணாசிரமக் கொள்கைகளுக்கும் ஊறு ஏற்பட்டால் ஆயுதம் தாங்கிப் போரிடலாம் என்று மனுதர்மம் கூறுகிறதே (அத்தியாயம் 8 சுலோகம் 348)
சூத்திரன் சம்பூகனை இராமன் வாளால் வெட்டியதும் (இராமாயணம்) ஏகலைவனின் கட்டை விரலை துரோ ணாச்சாரி காணிக்கையாகப் பெற்றுக் கொண்டதும் (மகாபாரதம்) இந்தக் கண்ணோட்டத்தில்தானே!
அவை எல்லாம் என்றோ நிகழ்ந்தவை - இப் பொழுது அவற்றை எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் ஏன்? என்று சிலர் மேதாவித்தனத்துடன் கேள்வியை எழுப்பலாம். இப்பொழுது மட்டும் என்ன வாழ்கிறது? இன்றைக்கும் ஏன் மாட்டிறைச்சி தடை சட்டம் போடப்படுகிறது? இன்றைக்கும் பசு மாமிசம் சாப்பிட்டனர் என்று குற்றஞ் சாட்டி கொல்லப்படும் கொடுமை ஏன் கோலோச்சு கிறது?
இன்றைக்கும் பார்ப்பன சக்திகள் பசு - இந்துக்களின் புனிதம் - அதனை உண்ணக் கூடாது என்று கூரிய ஆயுதங்களுடன் சாலைகளில், வீதிகளில் திரிவது ஏன்?
பசு மாமிசம் சாப்பிட விரும்புபவர்கள் பாகிஸ்தானுக் குப் போய் விடலாம் என்று போக்கிரித்தனமாகப் பேசுவது காதில்விழவில்லையா?
எதை உண்ண வேண்டும், எதை உண்ணக் கூடாது என்று நிர்ணயிக்கும் உரிமையை ஒரு மதம் கையில் எடுத்துக் கொள்ளுமேயானால் அந்த மதம் ஒழிக்கப்பட வேண்டாமா?
மனித உரிமைக்காகவும் மதச் சார்பின்மைக்காகவும் வாதாடுபவர்கள் உடனடியாகச் செய்ய வேண்டிய ஒரு செயல் உண்டென்றால் அது - ஒன்றே ஒன்றுதான். இந்து மதத்தை வேரும் வேரடி மண்ணோடும் வீழ்த்துவது தான்.
நவம்பர் - 7 சிந்தனையாக இதனைக் கொள்ள வேண்டும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...