Saturday, November 7, 2015

டில்லியில் இறைச்சிக்காக மாட்டைக் கொல்லவோ, மாட்டுக்கறிக்கோ தடை கிடையாது

டில்லியில் இறைச்சிக்காக மாட்டைக் கொல்லவோ, மாட்டுக்கறிக்கோ தடை கிடையாது
தடைகோரிய மனு தள்ளுபடிசெய்தது டில்லி உயர்நீதிமன்றம்
புதுடில்லி, நவ.7_ இறைச்சிக்காக பசுவைக் கொல்வதற்கும், மாட்டி றைச்சியை விற்பனை செய்யவும் தடை விதிக்கக் கோரி தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கு டில்ல உயர்நீதிமன்றத்தில் தள் ளுபடி செய்யப்பட்டது.
நீதிபதிகள் ஜி.ரோ கிணி, ஜெயந்த்நாத் ஆகி யோரைக் கொண்ட அமர்வு முன்பாக இறைச் சிக்காக பசுவைக் கொல் வதற்கும், மாட்டிறைச் சியை விற்பனை செய்ய வும் தடை விதிக்கக்கோரி பொதுநல வழக்கு விசா ரணைக்கு வந்தது.  நீதிபதி கள் அம்மனுகுறித்து கூறும் போது தீங்கிழைக்கும் கோரிக்கை என்று குறிப் பிட்டுள்ளார்கள்.
டில்லியை ஆளும் ஆம்ஆத்மி கட்சியின் அரசுசார்பில் டில்லியில் ஏற்கெனவே டில்லி விவசாயக் கால்நடைகள் பாதுகாப்புச் சட்டம் கால்நடைகளைப் பாது காப்பதற்கு இருக்கிறது என்று நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
தன்னை ஒரு சாமியார் என்று கூறிக்கொள்ளும் ஒருவர், பொதுநல வழக் கொன்றைத் தொடர்ந் திருந்தார். அவர் அளித்த மனுவில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 1932 ரன்பீர் சட்டத்தின்படி, சட் டத்தைக் கொண்டுவர டில்லி அரசுக்கு உத்தர விடுமாறு கோரியிருந்தார். அவர் கோரிக்கையில் பசுக்களைப்போன்ற கால் நடைகளை இறைச்சிக் காகக் கொன்றால் 10 ஆண்டுகள் சிறைத் தண் டனையுடன் தண்டத் தொகையும் விதிக்கப்பட வேண்டும் என்று கோரி யுள்ளார்.
சத்யானந்தா சக்ரதாரி என்பவர் இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றத் தின் உத்தரவை சுட்டிக் காட்டுகிறார். அதில் கால்நடைகளுக்கான காப்பகங்கள் அமைக்கவும், கால்நடைகளுக்கு தீவ னங்கள் அளிக்கவும் அரசு நிதி ஒதுக்கி சிறப்புத் திட்டங்களைக் கொண்டு கால்நடைகளைப் பாது காக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது என்று கூறினார்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...