Monday, November 9, 2015

பிகார் தேர்தல் முடிவும் கழகத் தலைவரின் அறிக்கையும்



திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தம் அறிக்கையில் குறிப்பிட்டது போல ‘இத் தேர்தலின் முடிவு இந்தியாவின் எதிர்காலம் இருட்டானதல்ல என்பதை நிரூபித்து, மக்களின் அவ நம்பிக்கையைப் போக்கி நம்பிக்கையை விதைத் துள்ளது என்று சுருக்கமாகக் குறள் போல கூறியுள்ளார்.
“நிதீஷ், லாலு,  காங்கிரஸ் கூட்டணி நாட்டில் ஜன நாயகம் மதச் சார்பின்மை, சமூகநீதி இம்மூன்றையும் காக்கும் காவல் கூட்டணி என்பது வருகின்ற காலத்திற் கும் வழிகாட்டும்; அகில இந்திய ஒடுக்கப்பட்டோரின் சமூக நீதிக் கூட்டணியாகவும் வளர வேண்டும் என்பது அவசியமாகும்” என்றும் அவ்வறிக்கையில் ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டுள்ளது கருத்தூன்றிக் கவனிக்கத் தக்கதாகும்.
16ஆவது மக்களவைத் தேர்தலில் பிஜேபியிடம் ஆட்சியைக் கொடுத்தால் என்ன நிலை ஏற்படும் என்ப தையும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தெளி வாகக் குறிப்பிட்டு இருந்தார். அறிக்கைகளின் வாயி லாக மட்டு மல்ல; தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் கிளிப்பிள்ளைக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது போல திருப்பித் திருப்பி சொன்னார்கள்.
“மோடி ராஜ்ஜியம் வந்தால் அது அசல் மனுதர்ம ராஜ்ஜியமாக ஆரிய வர்த்தமாகத்தான் இருக்கும்.
இதுவரை பின்னணியில் இருந்து இயக்கி வந்த ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்கள் இப்பொழுது முன்னணி யிலே வந்து, நரேந்திர மோடியை முன்னிறுத்துகின்றன. தேர்தல் களத்திலேயே முன்னிறுத்த முனைந்து விட்டனர்! தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது இந்துத் தேசியவாதி என்று மோடி சொல்லுவதன் இரகசியம் இதுதான். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை (Preamble) என்ன சொல்லுகிறது?
மதச் சார்பற்ற, சோசலிசக் குடியரசை அமைப்பது என்பதுதானே இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை.
இந்த மதச் சார்பற்ற தன்மையை ஏற்றுக்கொள்ளாத  தன்னை ஒரு இந்துத் தேசியவாதி என்று கூறும் ஒருவர் இந்தியாவின் பிரதமர் என்று சொல்லும் ஹிந்துத்துவா சக்திகளை முறியடிக்கவேண்டாமா? மோடி கூறுவது சட்ட விரோதம் அல்லவா?” என்றார் தமிழர் தலைவர்.
(சென்னையில் சிறப்புரை - 25.7.2013)
அன்று திராவிடர் கழகத் தலைவர் எச்சரித்தது - இப்பொழுது நடக்கிறதா இல்லையா?
மாற்றம் வராது - ஏமாற்றம் தான் மிஞ்சும் என்று திரா விடர் கழகம் திருப்பித் திருப்பிச் சொன்னது மெய்யாகி விட்டது. திராவிடர் கழகம் ஓர் அரசியல் கட்சியல்ல. சமூக மாற்றத்துக்கான புரட்சி இயக்கமாகும். அரசியலில தேர்தலில் அது ஈடுபடுவதில்லை என்றாலும், இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன என்று பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளும் இயக்கமல்ல; நீதிக்கட்சி தேர்தலில் நின்ற காலந் தொட்டு தேர்தலில் வழிகாட்டும் வெளிச்சத்தை தந்தை பெரியார் அவர்கள் வெகு மக்களுக்கு வழங்கி வந்திருக் கிறார்கள். அந்த அடி ஒற்றியே கழகமும் தேர்தலில் பொது மக்களுக்குச் சிறப்பான வழிகாட்டுதலை வழங்கி வந்திருக்கிறது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எச்சரித்தது போலவே, நரேந்திர தாமோதரதாஸ் மோடி தலைமை யிலான   மத்திய பிஜேபி அரசு. அதன் மறைவுத் திட்டங் களை (Hidden Agenda) ஒவ்வொன்றாக அறிவித்து, செயல்படுத்துவதில் தீராத முனைப்பும் காட்டி வந்து கொண்டுள்ளது.
அதிலிருந்து கொஞ்சம் வழித் தவறி காலடி எடுத்து வைத்தால், அதன் குருபீடமான ஆர்.எஸ்.எஸ். காதைத் திருகி, தலையில் குட்டி ‘ஒழுங்காக நடந்து கொள்’ இல்லையெனின் நடப்பது வேறு!’ என்று எச்சரித்து வருகிறது. சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். கூட்டிய ஆலோ சனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி உட்பட அனைத்து மத்திய அமைச்சர்களும் பவ்யமாக அமர்ந்து, ஆர். எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறிய கட்டளை களைச் சிரமேல் தாங்கிக் கொண்டு  செயல்படுவதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர்.
வரலாற்றுக் குழுவை  காவிமயமாக்கியது, சமஸ்கிருதத் திணிப்பு, இந்தி திணிப்பு, மாட்டிறைச்சி தடை சட்டம், புதிய கல்வித் திட்டஉருவாக்கம், சமூக நீதிக்கு எதிரான குரல், மதச் சார்பின்மைக்குத் தவறான விளக்கம்; பகுத்தறிவு, சீர்திருத்தச் சிந்தனைகளைப் பரப்பும், வெளிப்படுத்து வோரைப் படுகொலை செய் தல், சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்களைத் தூண்டுதல் - மத நல்லிணக் கத்தைச் சீர்குலைத்தல் இன் னோரன்ன அறிவிப்புகளாலும், செயல்படுத்தலாலும் மக்களைப் பீதி அடையச் செய்து கொண்டுள்ளது. மக்கள் மத்தியில் பிரிவினை,
பிளவு மனப் பான்மையை ஏற்படுத்தி வருவதன் மூலம் இந்தியாவை ஒரு கலவரக் களமாக மாற்றிக் கொண்டு வருகிறது.
எடுத்துக்காட்டாக மக்களவைத் தேர்தலுக்குமுன் உபி. முசாபர் பகுதியில் சிறுபான்மை மக்களான முசுலிம் களுக்கு எதிராகக் கலவரத்தைத் தூண்டி இந்து வாக்கு வங்கி, முசுலிம் வாக்கு வங்கி என்று பிரித்து, அதனைத் தம் கட்சிக்குத் தேர்தல் மகசூலாக மாற்றிக் காட்டியது பிஜேபி - அதன் சூத்திரதாரி  அகில இந்திய பிஜேபி யின் தலைவர் அமித்ஷா தானே!
இத்தகு நிலையில் பீகாரில் ராஷ்டரிய ஜனதா தளம் (லாலு பிரசாத்) அய்க்கிய ஜனதா தளம் (நிதீஷ்குமார்) காங்கிரஸ் (சோனியா காந்தி) ஆகிய அமைப்புகள் தங் களிடம் உள்ள அதிருப்தியையும், வேற்றுமையையும் தூர ஒதுக்கி வைத்து  ஒழிக்கப்பட வேண்டிய தீய சக்தி பிஜேபி என்பதைத் தெளிவாக உணர்ந்து கூட்டணி வைத்ததால் மிகப் பெரிய வெற்றியைத் தந்தனர் வாக்காளர்கள்.
இதனைத் தான் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பிகார் தேர்தல் முடிவு என்பது  - வருகின்ற காலத்திற்கும் வழிகாட்டும் அகில இந்திய ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக் கூட்டணியாக வளர வேண்டும் என்று குறிப் பிட்டுள்ளார். அரசியல் சித்தாந்த சிந்தனையாளர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் சிந்திப்பார்களாக!

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...