Total Pageviews

Friday, November 27, 2015

பத்திரிகைச் சுதந்திரத்தை ஒடுக்குவது ஜனநாயகமல்ல! கோவனை உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

பத்திரிகைச் சுதந்திரத்தை ஒடுக்குவது ஜனநாயகமல்ல!
கோவனை உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!
சென்னையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்


சென்னை, நவ.27- சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களை இன்று (27.11.2015) சந்தித்து பேட்டியளித்தார்.
மூடு டாஸ்மாக்கை மூடு என்ற பாடலை பாடிய ம.க.இ.க. கலைத் துறை பிரிவின் பாடகர் கோவன் மீது தமிழக அரசு தேச துரோக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது. நீதிமன்றத்தில் வாதாடி தற்போது பிணையில் இருக்கிறார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்து இருக்கிறது. 
இது, கருத்துரிமைக்கு எதிரான போக்கு என்பதையே காட்டுகிறது. டாஸ்மாக் இல்லாத தமிழகம் உருவாக்கும் நோக்கில் கோவன் ஒரு இயக்கத்தை நடத்தி வருகிறார். அந்த இயக்கத்தின் சார்பில் டிசம்பர் மாதத்தில் சென்னையில் பெரிய அளவில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற இருக்கிறது. அந்த மாநாட்டில் பங்கேற்க தமிழக கட்சி தலைவர் களை சந்தித்து பாடகர் கோவன் குழுவினர் ஆதரவு கேட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று காலை சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களை பாடகர் கோவன் சந்தித்தார். அவருடன் மக்கள் அதிகார அமைப்பின் ஒருங் கிணைப்பாளர் ராஜூ, பாடகர் சத்யா, மருது ஆகியோர் உடன் வந்திருந்தனர். அப்போது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களிடம் குறிப்பிட்ட தாவது:
அவரது பேட்டி வருமாறு:
செய்தியாளர்: மது ஒழிப்பிற்கு எதிராகப் பிரச்சாரப் பாடல் பாடிய கோவன் கைது செய்யப்பட்டு, இப்போது வெளியில் வந்து உங்களைச் சந்தித்து ஆதரவு கேட்டிருக்கிறார்; ஊடகம் சுதந்திரம்பற்றி நீங்கள் பேசி வருகிறீர்கள் அதுபற்றி...?
தமிழர் தலைவர் பதில்: ஜனநாயகத்தினுடைய நான்காவது தூண் பத்திரிகைகள் என்பதை ஜனநாயகத்தின்மூலமாக ஆட்சிக்குச் சென்ற ஆட்சியாளர்கள் உணர்ந்திருந்தால், பத்திரிகைகளின்மீது  இப்படி ஒரு பிளிட்ஸ் கிர்க் ஙிறீவீக்ஷ் நிவீக்ஷீரீ தாக்குதல் மாதிரி தொடர்ந்து பல வழக்குகள் போட்டு, அதை அழிக்க அல்லது அவர்களைச் சிறையில் தள்ளவேண்டும் என்கிற எண்ணத்திற்கு ஆளாக மாட்டார்கள்.
பொதுவாக அடக்குமுறைகள் வந்தால், எதிர்வினைகள் வந்தால்  - அதனால் வளருவார்கள். எந்தக் கொள் கையைச் சொன்னாலும் - மதுவிலக்கு என்பது மக்களாலே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டது. ஒரு வகையில் தமிழக அரசுக்கு, மதுவிலக்கை ஆதரிக்கக் கூடியவர்கள், மதுவிலக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தக் கூடி யவர்கள் நன்றி செலுத்தவேண்டும். ஏனென்றால், கோவன் போன்ற எளிய தொண்டராக, தோழராக இருக்கக் கூடிய ஒருவரை, உலகப் பிரசித்திப் பெற்றவராக ஆக்கியதற்காக ஜன நாயகத்தின் சார்பில் நன்றி தெரி வித்துக் கொள்கிறோம். அதேநேரத்தில், கடைசி வரையில் பழிவாங்கும் தன்மையில் போவோம் என்று சொன்னால், சட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
பத்திரிகைச் சுதந்திரம் என்பது தலையானது; மறுப்பு சொல்வதற்கு யாருக்கும் உரிமை உண்டு. அந்த மறுப்பை ஊடகங்கள் வெளியிடா விட்டால், அதற்கு மேல் நடவடிக்கை எடுப்பதுதான் நியாயமானதாக இருக்குமே தவிர, வேறொன்றும் இருக்க முடியாது. சட்டப்படி பார்த்தால், வழக்குரைஞர் என்கிற முறையில் நான் சொல்கிறேன், மிஸீ நிஷீஷீபீ யீணீவீலீ   நல் எண்ணத்தோடு கூறினோம் என்றால், அந்த வழக்கு நிற்காது. அது வல்லடி வழக்காக முடியும். ஆகவேதான், இனி மேலாவது அரசு தங்களுடைய போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும்.
செய்தியாளர்: கேரள மாநிலத்தில் மது ஒழிப்பை அமல்படுத்தி விட்டார்கள்; பிகாரில் மது ஒழிப்பை செய்வோம் என்று சொல்லி யிருக்கிறார்கள். தமிழகத்தில் சாத்தியக் கூறுகள் இருக்கும் என்று சொல்கிறார்கள்; ஒரு மூத்த தலைவராக இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர்: பிகாரில் ஆட்சியில் இருப்பவர்கள் ஜன நாயகத்தை மதிக்கிறார்கள்; மக்கள் கருத்தை மதிக்கிறார்கள். அதிலும் நம்முடைய தமிழ்நாடு வரலாறு காணாத புதுமையில் இருக்கிறது.
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: