Total Pageviews

Wednesday, November 18, 2015

மத இணக்கம் காத்த ஒப்பில்லா மனிதர் திப்புசுல்தான் (2)


- மஞ்சை வசந்தன்
பிற மதக் கடவுளின் அருளையும் வேண்டி நின்றார் எல்லாக்கடவுளும் ஒன்றே என்றார்.
ஒருமுறை இஸ்லாமிய மவுல்வி (மஸ்கட்டிலிருந்து வந்தவர்) நீங்கள் ஓர் இஸ்லாமியர் அப்படியிருக்க மாற்று மதக்கோயில்களுக்கு ஏன் கொடுக்கிறீர் இஸ்லாத்தை ஏற்ற நீங்கள் மாற்று மதங்களை வளர்க்க உதவலாமா என்று திப்புவிடம் கேட்க அவரைப் பால்கனிக்கு அழைத்துச் சென்று அருகிலுள்ள ரெங்கநாதர் கோயில் மணியோசையைக் கேட்கச் சொன்னார். அந்த மணியோசை எந்த மதத்தைச் சேர்ந்தது என்று உங்களால் சொல்ல முடியுமா? என்று கேட்டார்.
மவுல்வி அமைதியாய் இருந்தார்.
இந்துக் கோயில்களும், தேவால யங்களும் வளர்ந்தால் இஸ்லாம் நலிந்து போகும், பாதிக்கப்படும் என்று எந்த இறைத்தூதர் சொன்னார்? மதம் சார்ந்தவற்றில் கட்டாயப் படுத்துதல் வற்புறுத்துதல் கூடாது. அவரவர் விருப் பத்தை மதிப்பதே புனிதகுரானின் வாக்கு பிற மதங்களின் சிலைகளை அவமதிக்காதீர். அல்லாவைத் தவிர பிற வழிபாடுகள் அறியாமையின் வெளிப்பாடே என்கிறது குரான், பிற மதத்தினருடன் வாதம் புரியக்கூடாது என புனித குரான் கட்டளையிடுகிறது.
மனிதர்கள் தங்கள் நற்காரியங் களில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வது அவசியம். நமக்கொரு நல்ல மார்க்கம் வழங்கப்பட்டுள்ளது. அல்லா விரும்பியிருந்தால் எல்லோ ரையும் ஒரே மதத்தவராகப் படைத் திருக்கலாம். எனவே ஒருவர் மற்ற மதத்தாரின் நற்காரியங்களுக்கு துணை புரியுங்கள் என்கிறது திருமறை.
எங்களுக்கு ஓர் இறைவனைக் குறிப்பிட்டுக் காட்டியது போலவே உங்களுக்கும் ஓர் இறைவன் காட்டப் பட்டுள்ளான். உங்கள் இறைவனும் எங்கள் இறைவனும் ஒருவரே. அந்த இறைவனிடம் சரணடைவோம் என்று கூறுகிறது திருக்குரான்.
இறைவன் அருளிய இச்சட்டத்தை உயர்வாக மதிக்கிறோம். இதுவே சக மனிதர்களிடம் சகோதரத்துவத்தையும் மதிப்பையும் வளர்க்க வல்லது இந் துக்களின் புனித வேதங்களையும் நான் பக்தியுடன் ரசித்தேன். அவை உலக ஒற்றுமையை வலியுறுத்துகின்றன. எத்தனை பெயரிட்டு அழைத்தாலும் இறைவன் ஒருவனே என்கிறது இந்த மறைநூல்கள்.
மதப்போர்வையில் சிலர் இறை வனின் ஆளுகையில் அத்துமீறி நுழைந்து பொய்யையும் கடவுள் தன் மையற்ற வெறுப்பையும் பகைமையை யும் போதிப்பதைக் கண்டு வேதனை யடைகிறேன்
சாதி, மதம், இனம் இவற்றின் பெய ரால் நமது மைசூர் அரசின் ஆளுகை யில் உள்ள எவரையும் வேறுபடுத்திப் பார்ப்பதையும் ஒதுக்குவதையும் நான் சட்ட விரோதமானது என அறிவிக் கிறேன் என்கிறார் தன் பிரகடனத்தில் இப்படிப்பட்ட மாமன்னன் வாழ்ந்த நாட்டில்தான் இன்று மதவெறியை வளர்த்து, அரசியல் ஆதாயம் அடை கிறார்கள். இதில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
இந்துக் கோயில்களுக்குச் செய்த உதவிகள்
இந்துக் கோயில்களுக்கும், மடங் களுக்கும் இவர் அளித் கொடைகள் ஏராளம் இவர் இஸ்லாமிய மதத்திற்கும், இந்து மதத்திற்கும் வழங்கிய நிதியை ஒப்பிட்டுப் பார்த்தாலே திப்பு பிற மதத் திற்கு எந்த அளவிற்கு உயர்வு தந்து உதவினார் என்பது விளங்கும்.
திப்புவின் நிர்வாகத்தில் அரசால் சமய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட மொத்தத் தொகை 2,33,959 வராகன்கள் இதில் இந்துமதக் கோயில்களுக்கும் மடங் களுக்கும் மட்டும் வழங்கப்பட்டது. 2.13.959 வராகன்கள், அதாவது மொத்தத் தொகை யில் இந்துமதக் கோயில்களுக்கு மட்டும் சற்றேறக்குறைய 90 சதவீதம் தொகையை வழங்கியுள்ளார் ஓர் இஸ்லாமிய மன்னர் என்றால் அவரது மதஇணக்க மாண்பை சொல்ல வார்த்தைகள் ஏது?
திப்புசுல்தான் வெளியிட்ட நாணயங் களில் இந்துக்கடவுள்களான பார்வதி, பரமசிவன் உருவம் பதித்து வெளியிட் டார். இஸ்லாமிய சின்னங்களையும் பதிவு செய்தார். இஸ்லாமிய மன்னன் ஆட்சி யில் வெளியிடப்படும் நாணயத்தில் இந் துக்கடவுள் உருவம் பதித்து வெளியிட்டது மத இணக்கத்தின் இயல்பை எடுத் துரைக்கின்றன.
சிறீரங்கப்பட்டினத்தில் உள்ள சிறீ ரங்கநாதர் கோயில்மீது திப்புவிற்கு அளப் பரிய ஈடுபாடு இருந்தது. இக்கோயிலி லுள்ள பல வழிபாட்டுப் பொருட்கள் திப்பு வால் வழங்கப்பட்டவை. சிறீரங்கநாதர் கோயில் மணியோசையைக் கேட்டு வழிபாடு ஒழுங்காக நடைபெறுகிறதா என்று கண்காணித்து வந்தார். ஒருமுறை மணியோசை காலங்கடந்து ஒலித்தபோது கோயில் பூசைக்குரிய பொறுப்பாளரை (தக்காரை) அழைத்து இனி ஒழுங்காகக் காலந்தவறாது நடைபெற வேண்டும் என்று எச்சரித்தார். ரங்கநாதர் கோயிலின் காலை பூசை முடிந்ததும் ஒலிக்கும் முரசின் ஓசை கேட்ட பின்பே இவர் இறைவனை வணங்கும் வழக்கம் கொண்டிருந்தார்.
திப்புசுல்தான் மாளிகையான பட்டன் மகாலுக்கும் சிறீரங்கநாதன் கோயிலுக்கும் இடையேயுள்ளதூரம் சுமார் 300 அடி தான். இக்கோயில் படையல் பொருட்கள் வைக்கும் வெள்ளிப் பாத்திரங்கள் ஏழு இவை திப்புசுல்தான் பெயர் பொறிக்கப் பட்டவை. தீபத்தட்டுகள் ஊதுபத்தி நிலைப்புத் தண்டுகள் பல இக்கோயிலுக்கு இவரால் வழங்கப்பட்டன. Mysore Arch - Report 1912 Page 2  அல்லாவையும் ரங்க நாதரையும் அவர் வேறு வேறு என்று கருதியதில்லை.
சந்திரனை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய நாள்காட்டி 11 நாள்கள் குறைந்தது என்பதில் சூரியனை அடிப்படையாகக் கொண்ட இந்துக்களின் காலண்டர் முறையை ஏற்றது அவரது மாற்றுமதச் சிறப்பை ஏற்கும் குணத்தக் காட்டி நிற்கிறது.
மைசூருக்கு மேற்கேயுள்ள மேல் கோட்டை என்னும் வைணவ வழிபாட்டி டத்தில் உள்ள நரசிம்ம சுவாமி கோயிலுக் கும், நாராயணசாமி கோயிலுக்கும் இவர் உதவிகள் செய்துள்ளார்.
1786ஆம் ஆண்டு நரசிம்மா கோயி லுக்குப் பெரிய தோல்முரசு ஒன்றினை வழங்கியுள்ளார். அம்முரசில் திப்பு வழங் கியதற்கான சான்று பாரசீக மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. நாராயணசாமி கோயிலுக்குப் பல வெள்ளித் தாம்பாளங் களும், தங்கத்தாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட வழிபாட்டுப் பாத்திரங்கள் பலவும் வழங்கியுள்ளார்.
நஞ்சன் கூடு என்ற இடத்தில் உள்ள சிவன் கோயில்கள் மிகவும் புகழ் பெற்றவை. அங்கு திருநஞ்சுண்டேசுவரர் ஆலயம் மற்றும் திருகாந்தேஸ்வர சுவாமி ஆலயம் என்ற இரண்டு சிவாலயங்கள் உள்ளன. திருநஞ்சுண்டேசுவரர் ஆலயத்தில் ஒரு மரகத லிங்கம் உள்ளது. அது பார்வதி சிலைக்கு இடப்புறம் வைக்கப்பட்டுள்ளது. அது பச்சைப்பளிங்கு கல்லால் செய்யப் பட்டது அது. திப்புசுல்தானால வழங்கப் பட்டது. எனவே அதற்கு பாதுஷா லிங்கம் என்றே பெயர் வழங்குகிறது திருகாந்தேஸ்வரசுவாமி கோயிலுக்கு ஒர் ஆராதனைத் தட்டை திப்பு வழங்கினார். அத்தட்டின் அடிப்பகுதிக் கால்கள் நவரத்தினங்களால் பதிக்கப்பட் டவை அக்கோயில் சாமியின் கழுத்தில் உள்ள பொன்னாரம் பச்சை மரகதங்கள் பதிக்கப்பட்டுத்திப்புவால் கொடுக்கப்பட்டது.
மேல்கோட்டை நாராயணசாமி கோயிலுக்கு 12 யானைகளைத் திப்பு அன்பளிப்பாகக் கொடுத்தார். அவற்றுள் இரண்டு ஆண்யானைகள் பத்து பெண்யானைகள் நஞ்சன்கூடு வட்டத்தில் உள்ள கேலேயல்  என்ற ஊரின் திருலட் சுமி நாதர் கோயிலுக்கு ஆராதனைத் தட்டுகளையும். தாம்பூலத் தட்டுகளையும் வெள்ளிக் கலசங்களையும் தன் பெயர் பொறித்து திப்பு வழங்கியுள்ளார் அன் பளிப்பு வழங்கிய திப்புவிற்கு நன்றி செலுத்தும் வகையில், கோயிலின் சுற்றுப் பாதையின் மேல்தளத்தில் வரையப்பட் டுள்ள ஒவியங்களுக்கு இடையில் திப்புவின் படமும் வண்ணங் கொண்டு வரையப்பட்டுள்ளது.
கோவை அருகில் உள்ள குறிச்சி செல் லாண்டியம்மன் கோயிலுக்கு, திப்பு சுல்தான் ஏராளமான பொருட்கள் அளித் துள்ளார். அந்த விவரம் கருப்பு நிற மெழுகுத்தாளில், வெள்ளை நிற வண் ணத்தில் கன்னட மொழியில் ,எழுதப்பட் டுள்ளது.
இந்து மன்னன் கொள்ளையிட்ட சாரதா பீடத்தை மீட்டு தந்தார்?
சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள சிருங்கேரியில் உள்ள சாரதாபீடத்திற்கு (மடத்திற்கு) ஏராளமான உதவிகளை திப்பு செய்துள்ளார். மூன்றாம் மைசூர்ப் போரின் போது, பரசுராம் பாகு தலைமையில் வந்த மாராட்டியப் படை சிருங் கேரியை முற்றுகையிட்டு, மடத்தைக் கொள்ளை யிட்டு அணிகலன்கள், யானை, குதிரை, பல்லக்கு போன்ற வற்றை சுமார் (60,00,000 ரூபாய் மதிப்புள்ள வற்றை) கொள்ளையடித்துச் சென்று விட்டது. மடத்திலிருந்து சாரதாதேவி சிலையையும் மராட்டியப் படையினர் பீடத்தை விட்டுப் பெயர்த்து எடுத்துச் சென்று விடடனர் பல பிராமண குருக்கள் கொல்லப் பட்டனர் கார்கிலா வுக்குப் போய் சங்கராச்சாரி ஒளிந்து கொண்டார்.
இக்கொள்ளை பற்றி மனவேத னையுடன் சிருங்கேரி மடச்சாமி திப்புவிற்கு ஒரு கடிதம் எழுதினார். கடிதம் பெற்ற திப்பு, சாமிக்கு ஆறுதல் கூறி, அம்மடத்திற்குத் தேவையான பொருளுதவிகளைச் செய்ததோடு ஒரு பெரிய வெற்றிப்பல்லக்கும், அணி கலன்களும், ஆடைகளும் ஏராளமய் வழங்கினார். மடத்தை நிர்வகிக்க வருவாய் கிடைக்கும் வகையில் பல ஊர்களை இனாமாகக் கொடுத்தார். சாரதாபீடம் மீண்டும் அமைய 200 ரஹாடி ரொக்கமாகவும், 200 ரஹாடி பொருட்களாகவும், தானியங்களாகவும் வழங்கினார் திப்பு.
உதவிகள் செய்ததோடு மனித நேயத்தோடு மடத்திற்கு மடலும் எழுதினார். சாரதா தேவியின் திருவு ருவச் சிலையைச் சிறப்பாகப் பீடமேற்ற (பிரதிஷ்டை) செய்து சாரதா சண்டி ஹோமம் நடத்த உதவிகளை வழங் குகிறேன் என்று அம்மடலில் எழுதி யிருந்தார். சங்கராச்சாரிக்கு உடல்நலம் குன்றியபோது அவர் விரைவாய் நலம் பெற கடவுளிடம் வேண்டினார் திப்பு.
மேற்கண்ட திப்புவின் செயல் பாடுகள் மாற்று மதத்தாரை மதித்தது, மாற்று மதத்தாரை நேசித்தது, மாற்று மதத்தாருக்கு உதவியது பற்றி மட்டு மல்லாமல், மாற்று மதக் கடவுளின் அருளும் தனக்கு வேண்டும் என அவர் வேண்டி நின்றதும் வெளிப்படு கிறது. இதுதான் உண்மையான மத இணக்கம். அதை அதிக அளவில் கொண்டிருந்தவர் தான் திப்பு என்பதை அவரின் கடிதங்கள் காட்டி நிற்கின்றன.
1790ஆம் ஆண்டு திப்பு தமிழகத் தின் மீது படையெடுத்த போது காஞ்சி புரத்திலுள்ள கோயில் ஒன்றைக் கட்டி முடிக்க 10,000 பொன் வழங்கினார். பல பழைய கோயில்களைப் புதுப்பிக்கவும், கோயில் குளங்களில் தூர் அகற்றவும் உதவினார். திண்டுக்கல் கோட் டையைப் பின்புறமாகத் தாக்க முற் பட்ட போது அங்கு ஓர் இந்து கோயில் இருந்ததால் வேறு வழியில் சென்று தாக்கினார்.
இந்துக்கோயில்களுக்கு மட்டு மின்றி கிறித்துவ ஆலயங்களுக்கும் திப்பு உதவியுள்ளார். கடப்பை மாவட் டத்திலுள்ள புலி வெண்ட்லர் என்ற ஊரில் இருந்த கிறித்துவ தேவால யத்தைப் புதுப்பிக்க திப்புசுல்தான் உதவி அளித்துள்ளார். அது மட்டுமல்ல மதத்தைப் பின் பற்றுகின்றவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிதி உதவியை திப்பு செய்திருப்பது அவரது நேர் மையை இன்றளவும் பறைசாற்றுகின்றது.
எடுத்துக்காட்டாக ஒராண்டு திப்பு செய்த உதவிகள் பட்டியல் கீழேயுள் ளது. அதை ஆய்வு செய்தால் இவ் வுண்மையை எவரும் எளிதில் அறியலாம். இந்து அறநிலையங்கள், பிராமண குடியிருப்புகள் 1,93,959 உதவிகள், பிராமண மடங்கள் 20,000 இஸ்லாமிய மத நிறுவனங்கள் 20,000 ஆக மொத்தம் 2,33,959
ஓர் இஸ்லாமிய மன்னன் திப்புவின் ஆட்சியில் இஸ்லாமிய மத நிறுவனங் களுக்கு 10 சதவீதம் நிதி மட்டுமே அளிக்கப்பட்டுள்ளதைக்காணும்போது திப்புவின் மத இணக்க மாண்பினைக் கூற வார்த்தைகள் ஏது?
(தொடரும்)

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: