Thursday, October 15, 2015

மோடியின் அமைதிக்குப் பின்னால் இருக்கும் கொடூரம்


அமெரிக்க நாட்டு அதிபர் பராக் ஒபாமா முதல் அய்க்கிய நாடுகள் அவை வரை இக்லாக் சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்து விட்டது. ஆனால் மோடி, தாதரி மாட்டிறைச்சிக் கொலைவிவகாரம் குறித்து இந்த நிமிடம் ஒருவார்த்தைக் கூட பேசவில்லை. 
எப்போதும் போல் அந்தத் திட்டம் கொண்டு வந்தேன் இந்தத் திட்டம் கொண்டு வந்தேன் என்று கூறிக்கொண்டே இருக்கிறார் .அதே நேரத்தில் இந்த திட்டத்தால் தொழிலதிபர்கள், தொழில் முதலை களாக மாறுவது அதற்கு, தான் உடந்தையாக இருப்பது குறித்தும் எதுவும் கூறவில்லை.  காந்தியார் எங்கள் ஊர்க்காரர் அவர் அகிம்சை யின் சொந்தக்காரர் என்று கூறிய அவர் அக்லாக் என்னும் 50 வயது முதியவரை தனது கட்சியைச் சேர்ந்த வர்கள் வதந்தி காரணமாக அடித்துக் கொலை செய்தது தொடர்பாக எது வுமே கூறவில்லை.
முகநூல் அலுவல கத்தில் தன்னுடைய அன்னை, தனது சிறுவயதில் பட்ட துன்பத்தைக் நினைத்து அழுதவருக்கு அடித்துக் கொலை செய்யப்பட்ட  அக்லாக்கின் தாய் அவருடைய மனைவி அவருடைய 19 வயது மகளின் அழுகை கண்களுக் குத் தெரியவில்லை.
பகுத்தறிவுவாதிகள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், நரேந்திர தபோல்கர், கோவிந்தபன்சாரே கல்புர்கி போன் றோர் தொடர்ந்து கொலை செய்யப் பட்டதும் பகவான் போன்றோருக்கு தொடர்ந்து கொலைமிரட்டல்கள் வருவது குறித்தும் பேசவில்லை.
மோடி, உலகம் சுற்றும் இளைஞ ராகி தான் செல்லும் இடமெல்லாம் இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் தீவிரவாதம் குறித்து சொல்லத் தவறு வதில்லை, ஆனால் நாட்டில் இந்துத் துவா பெயரில் நடக்கும் கொடூரச் செயல்கள்குறித்து வாயைத் திறப்ப தில்லை. மோடியின் அமைதியைப் பார்த்து மன்மோகன் சிங்கின் நினைவுதான் வருகிறது, அவர் அமைதியாக இருந் தாலும் நாட்டில் மதவாதம் முடங்கிக் கிடந்தது.
தன்னுடைய கட்சியில் என்ன நடக்கிறது, தன்னுடைய கட்சி யினரை எப்படி அடக்கி வைக்க வேண் டும் என்று மன்மோகன்சிங் நன்றாகவே அறிந்து வைத்திருந்தார்.    காங்கிரஸ் கட்சியின் மீது எத்தனை குற்றங்களைக் கூறினாலும் மன்மோகன் சிங் என்னும் மனிதரின் நல்ல குணம் மற்றும் அவரது சொந்த நடவடிக்கைகளில் யாரும் ஒரு குறையை கண்டுபிடிக்க முடியாது.
ஊழல் குற்றச்சாட்டில் தனது கட்சி நாறிக்கிடந்தாலும் அந்த நாற்றம் பிடித்த சாக்கடையில் இருந்து கூட தூய்மையான தனித்துவமாகத் தெரிந்தவர் மன்மோகன் சிங்.      மோடிக்கு ஒருவேளை மன்மோகன் சிங்கின் அமைதி வழி பிடித்துவிட்டது போலும், அவரும் மன்மோகன் சிங்கைப் போன்று அமைதியாக இருந்தால், தனக்கும் மக்களிடையே நல்ல பேர் வந்துவிடும் என்று கனவுகாண்கிறார். 
உண்மையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது வளர்ச்சி! வளர்ச்சி!! என்று சொன்னதெல்லாம் கடைந்தெடுத்த பொய். மோடிக்கும் அவரை ஆட்டுவிக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும் நன்றாகத் தெரியும் 80 விழுக்காடு மக்கள் மத வாதத்தை வெறுக்கிறவர்கள் ஆகையால் மோடி என்னும் போலியான நபரை முன்னிறுத்தி போலியான வாக்குறுதிகளை அள்ளிவீசவைத்து மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று அறுதிப் பெரும் பான்மை ஆட்சி அமைத்தனர்.
உபி., அரியானா, ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கல்வியறிவு குறைவாக உள்ள பகுதிகளில் மதக்கலவரத்தைத் தூண்டிவிட்டு அதன் மூலமும் வாக்குகளைப் பெற்றனர். இன்றைய தேர்தல்களிலும் மோடி பழைய பாணியில் பொய்யான வாக்குறுதி களை அள்ளி விசுகிறார். ஆனால் இந்த வளர்ச்சி என்னும் போலியான பேச்சிற்குப் பின்னால் மிகப்பெரிய ஆபத்து காத்திருக் கிறது. வளர்ச்சி என்ற கண்ணிற்குத் தெரி யாத போர்வைக்குப் பின்னால் இந்துத்துவ சக்திகள் கொடூரமான வேலைகளில் இறங்கிவிட்டன. 
கடந்த ஆண்டு பாஜக ஆட்சியின் துவக்கத்திலேயே கர்வாப்சி என்ற தாய்மதம் திரும்புதல் என்று கூறிக் கொண்டு அப்பாவி முஸ்லீம் கிறிஸ்தவர் களை மிரட்டி பணம் கொடுத்தும் இந்து மத்த்திற்கு மாற்ற நடந்த முயற்சி அதன் பிறகு லவ்ஜிகாத் என்ற புதிய சொற் றொடரை உருவாக்கி இளம் காதலர் களைப் பிரித்தல், மோடியைப் பிடிக்காத வர்கள் எல்லாம் பாகிஸ்தானிற்குப் போங்கள் என்று கூச்சல்கள் ஒருபுறம் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்த போது, மறுபுறம் அரசே இந்துமதக் கலாச்சாரத் திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு என தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கிறது, 
கிட்டத்தட்ட தாலிபான்களின் ஆட்சியைப் போலவே இந்தியாவை ஆளும் பாஜக மாறி வருகிறது. இந்தியா முழுவதும் விரைவில் குஜராத்தைப் போல் ஒரு கொடூரக் கலவரம் வருமோ என்று நினைக்கும் அளவிற்கு அரசின் ஆதரவுடன் இந்துத்துவ சக்திகள் செயல் பட்டு வருகின்றன. இவ்வளவு நடந்து கொண்டு இருக்கும் போது, 
மோடி அமைதியாக இவை எல்லாம் ஏதோ ஓர் ஆப்பிரிக்க நாட்டின் நடுக் காட்டில் உள்ள காட்டுவாசிகளின் ஆளுமையில் நடப்பது போலவும் தன்னுடைய ஆட்சி அமெரிக்க அய்க்கிய நாடுகளைப் போல் அதிகார பலத்துடன் நடப்பது போன்ற பொய்யான தோற் றத்தை உருவாக்கி இரண்டு மாத்திற்கு ஒரு முறை அயல் நாடுகளுக்குப் பயணம் செய்து கொண்டு இருக்கிறார். மன் மோகன்சிங் போல் 10 ஆண்டுகள் அமைதியாக இருந்தாலும் சரி, மோடி, ஏழைகள் இல்லாத நாடாக மாற்றுவேன் என்று கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்தார்.
இப்படித்தான் இடி அமீனும் எனது நாட்டை நோயாளிகள் இல்லாத நாடாக மாற்றுவேன் என்று ஆட்சிக்கு வந்தான் என்ன ஆனது நோய் என்று யாரவது தவறுதலாக கூறிவிட்டாலும் அவர்கள் கொலை செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட மோடியின் ஆட்சி யில் இதே பாணியைத் தான் இந்துத் துவ வாதிகள் கடைப்பிடிக்கிறார் களோ என்னவோ? தாதரி படு கொலை எதைக்காட்டுகிறது. 
ஒருபுறம் வளர்ச்சி வளர்ச்சி என்று கூறிக் கொண்டு ஆடை அலங்காரத்திற்கு மாத்திரம் லட்சக்கணக்கான ரூபாய் களை செலவு செய்து உலகச்சுற்றுலா செல்கிறார் மோடி. அவரது பரிவா ரங்கள் இங்கே இந்தியாவை மீண்டும் கற்காலத்திற்கு அழைத்துச் செல்கிறது. 2014-ஆம் ஆண்டு தேர்தலின் போது, தானே அறிவித்துக் கொண் டார். 
நான் ஓர் இந்து ராஷ்டிரவாதி என்று அப்போதே அவரது எண் ணங்கள் மக்களுக்குப் புரிந்திருக்க வேண்டும். ஆனால் மக்களை பார்ப் பன ஊடகங்களும், இதர விளம்பரச் சாதனங்களும் மயக்கிவிட்டிருந்தன. குஜராத் கலவரம் நடந்துகொண்டு இருக்கும் போது மோடியிடம் இதே அமைதிதான் காணப்பட்ட்து. இந்த அமைதிக்குப் பின்னால் நாட்டைச் சீரழிக்கும் ஒரு கும்பல் மிகவும் வேகமாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. 
ஓர் எடுத்துக்காட்டை மட்டும் சொல்லி முடிக்கிறேன். திரைப்படங் களில் அடிக்கடி ஒன்று சம்பவத்தைப் பார்த்திருக்கிறோம். ஒருவரை கொலை செய்யும் போது அவரது கூச்சல் வெளியே கேட்காமல் இருக்க தொலைக்காட்சிப் பெட்டியின் ஓசையை அதிகரித்து விடுவது போன்று காட்சி அது, அதே பாணியில் தான்மோடியும் செயல்படுகிறார். 
உள்ளே நடக்கும் கொடூரச் சம் பவங்கள் வெளியே தெரிந்து விடக் கூடாது என்பதற்காக வளர்ச்சி, ஏழ்மை ஒழிப்பு, தூய்மை இந்தியா போன்ற தொலைக்காட்சி ஓசையை அதிகம் வைத்துவிட்டார். அந்த ஓசை யின் பின்னால் சங்கபரிவாரங்களின் இந்த ரத்தவெறி வன்முறை தொடர்ந்து நடைபெறும். - சரவணா ராசேந்திரன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...