Thursday, October 15, 2015

மாட்டுக்காக மனிதன் கொல்லப்படவேண்டும் என்கிற ஆபத்து துளிர்க்கும்போதே தடுத்து நிறுத்தப்படவேண்டும்

மாட்டுக்காக மனிதன் கொல்லப்படவேண்டும் என்கிற ஆபத்து துளிர்க்கும்போதே தடுத்து நிறுத்தப்படவேண்டும்
மாட்டுக்கறியும், மதவாத அரசியலும் சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் எச்சரிக்கை
சென்னை, அக்.14_ மாட்டுக்காக மனிதன் கொல்லப் படவேண்டும் என்கிற ஆபத்து துளிர்க்கும்போதே  தடுத்து நிறுத்தப்படவேண்டும் என தமிழர் தலைவர் எச்சரித்தார்.
’மாட்டுக்கறியும் மதவாத அரசியலும்’ எனும் தலைப்பில் நேற்று (13.10.2015) மாலை சென்னை பெரியார் திடலிலுள்ள எம்.ஆர்.ராதா மன்றத்தில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது.
தொடக்கத்தில் கவின்மலர், சாம்ராஜ், நரன், சிறீஜித் குழுவினர் வழங்கிய மாட்டிறைச்சி விழிப்புணர்வு பல்சுவை கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை ஆற்றினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், எழுத்தாளர் வே.மதிமாறன் ஆகியோர் உரையாற்றி னார்கள்.
’மாட்டுக்கறியும், மதவாத அரசியலும்’ சிறப்பு சொற்பொழிவையொட்டி, நூல்கள் வெளியீட்டுவிழா நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட, பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ.கும ரேசன் பெற்றுக்கொண்டார்.
இந்த சிறப்புக் கூட்டத்தில், ‘மதவெறியும், மாட்டுக் கறியும்’, ‘காமராசர் கொலை முயற்சி சரித்திரம்’, ‘வன் முறையின் மறுபெயரே சங் பரிவார் கும்பல்’, அம் பேத்கர் எழுதிய  தீண்டாமை குறித்த ஆங்கில நூலான ‘The Untouchables’ ஆகிய நூல்களின் குறைந்த அளவு நன்கொடை மொத்தம் ரூ.250ஆகும்.
சிறப்பு சொற் பொழிவுக் கூட்டத்தையொட்டி ரூ.200_க்கு வழங்கப் பட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் தமிழர் தலை வரிடம் உரிய தொகை கொடுத்து நேரில் மிகுந்த மகிழ்வுடன் பெற்றுக்கொண்டனர்.
தமிழர் தலைவர் உரை
எதிர்காலத்தை இருட்டாக்கிக் கொண்டிருக்கின் றனர். அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையிலிருக்கும் அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளது. கருப்புச்சட் டைக்காரன் காவலுக்கு கெட்டிக்காரன். கட்சி, ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மனித நேயத்துக்கு உட் பட்டு பல்துறை அறிஞர்கள் இங்கே குழுமியுள்ளனர்.
மாட்டுக்கறியின் சிறப்பைக் கூறுவது நோக்கமல்ல, மாட்டுக்காக மனிதன் கொல்லப்படவேண்டும் என்கிற ஆபத்து துளிர்க்கும்போதே அதைத் தடுத்திட வேண்டும். பொதுவாக பாதிக்கப்பட்ட மக்கள், பாட்டாளி மக்கள்தான் போராடுவார்கள்.
அரசியல் வாதிகள், எதிர்க்கட்சிக்காரர்கள் எதிர்ப்பு என்பது மட்டுமன்றி, இந்தியாவின் வரலாற்றிலேயே இதற்கு முன் எப்போதும் நடந்திராத ஓர் அமைதியான எதிர்ப்புப் புரட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அறிவாளிகள், இலக்கியவாதிகள், தொண்டறச் செம்மல்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றனர்.
’அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் அன்றே
செல்வத்தை தேய்க்கும் படை’
என்பது போன்று அறிஞர்கள் கண்ணீர் என்பது உள்ளது.
இயக்கம் வெளியிட்ட நூல்களை தமிழர் தலைவரிடமிருந்து வீ.குமரேசன், சு.அறிவுக்கரசு, பலராமன் (காங்கிரஸ்), குணங்குடி ஹனீபா  மற்றும் ஏராளமான தோழர்கள் பெற்றுக்கொண்டனர் (13.10.2015)
கருத்துச் சுதந்திரம் என்பது மூச்சு விடுவதற்கு ஒப்பானது. கருத்து சுதந்திரம் வெளியிடாதே என்று, உண்ணும் உரிமை, எண்ணும் உரிமை இல்லை என்று கூறுவது அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகும்.
மாட்டுக்கறிக்கும் வீரமணிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறாயே? தாழ்த்தப்பட்டவர்கள், இசுலா மியர்கள் என்னுடைய சகோதரர்கள் அல்லவா?
நேபாளம் ஒரே இந்து நாடு ஏன் காணமற் போனது?-  இந்து நாடாக இருந்தால், ஆட்சித் தலை வராக மதத்தைச் சேர்ந்தவர்தான் வரமுடியும். ஜனநாயகத்தில் யார்வேண்டுமானாலும் வரலாம். நேபாளம் இந்து நாடாக இருந்தபோது ஜாதி ஒழிப்பு பேச முடியாது. நம்முடைய அரசமைப்பில்
SOVEREIGN, SOCIALIST, SECULAR, DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens என்று உள்ளது. அரசமைப்புச்சட்டத்தை உருவாக்கிய குழுவின் தலை வரான அண்ணல் அம்பேத்கர் என்னை வாடகைக் குதிரையாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்றார்.
LIBERTY, EQUALITY, FRATERNITY என்று வரும் போது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கமாகக்கொண்டு வரப்பட்டது.
பன்மதங்கள், பல கலாச்சாரங்கள் என்று இருக் கின்ற நாட்டில் என் மதம் மட்டுமே இருக்கவேண்டும் என்று கூறுவதுதான் ஆர்.எஸ்.எஸ்.  மேக் இன் இந்தியா என்றும் மோடி சொல்கிறாரே, பாஜக என்பது மேக் இன் ஆர்.எஸ்.எஸ்-. BJP-Made by R.S.S. என்கிற நிலைதான் எப்போதும்¢.
உத்தரப்பிரதேச சம்பவத்தை நாங்கள் கூறுவதைவிட ’துக்ளக்’ கூறு கிறது காட்டுமிராண்டித்தனமானது என்று. குன்றக் குடி அடிகளார் கூறும்போது பேயைவிட, பேய் பிடித்தவன்தான் அதிகம் ஆடுவான் என்பார். அது போல், மதப்பேய் மதவெறி பிடித்து ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்.
உத்தரப்பிரதேசத்தில் தாத்ரி அக்லாக் என்பவரைக் கொன்ற சம்பவத்தைத்தாண்டி, இதுபோன்ற நிகழ்வு வரலாற்று பின்னணியைக் கொண்டுள்ளதாகும். சோசலிசத்தைக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்து கிறார் என்று காமராசரைக் கொல்ல முயன்றனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப்போன்று பலமுறை தடைசெய்யப்பட்ட அமைப்பு வேறில்லை. ஓநாய் ஒருபோதும் சைவமாகவில்லை.
இவ்வாறு தமிழர் தலைவர் தம் உரையில் குறிப் பிட்டார். (முழு உரை பின்னர்).
கலி.பூங்குன்றன் உரை
திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் சிறப்பு சொற்பொழிவில் பெரும்பான்மை யானவர்களின் உணவாக மாட்டுக்கறி இருந்து வரு கிறது. கவுதம புத்தர் யாகங்களின்பெயரால் உயிர்க் கொலை கூடாது என்று கூறியதற்குப் பின்னர்தான் வைதிகப் பார்ப்பனர்கள் உணவில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்று எழுத்தாளர் ராகுலசாங் கிருத்தியாயன் குறிப்பிட்டுள்ளார்.
கோமாதா என்பவர்கள் கோமாதா செத்தால் தூக்குகிறாயா? தமிழர் தலைவர் கேட்டார். மாட்டைவிட மனிதனைக் கேவலமாக மதிக்கிறார்கள்.
இந்து மதத்தில், வேதத்தில், சாஸ்திர, மனுஸ்மிருதி அடிப்படையில் சொல்கிறீர்களா? அல்லது எங்களைப் போல வேதங்களை, மனுஸ்மிருதிகளைக் கொளுத்தி விடலாம் என்கிறீர்களா? என்று கேட்டார்.
மேலும் பல்வேறு அறிவியல்ரீதியிலான கருத்து களை முன்வைத்து, கால்நடைகளில் குறிப்பாக கோமாதா எனும் பசுமாடுகள் தரக்கூடிய பால் அளவு மிகக்குறைவாகவும், கலப்பின பசுக்கள்  தரக்கூடிய பாலின் அளவு அதிக அளவிலும் இருக்கிறது என்று, பால் உற்பத்தியில் நாடுகள் வாரியாக உள்ள நிலைகள்குறித்து பட்டியலிட்டார்.
பசுக்கள் பால் கறப்பதைவிட விவசாயிகளிடமிருந்து பணத்தைத்தான் கறக்கின்றன என்று ஆதாரபூர்வமாக விளக்கினார். மேலும், மாட்டிறைச்சியில் உள்ள புரதங்கள், நோய் எதிர்ப்பு சத்துகள் நிறைந்துள்ள தகவல்களை விரிவாக எடுத்துரைத்தார். பிரேசிலைவிட மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணியில் இந்தியா உள்ளது.
இங்குதான் மாட்டிறைச்சியின் பேரால் வன்முறையும் நடைபெறுகிறது என்று குறிப்பிட்டார்.
எழுத்தாளர் மதிமாறன்
எழுத்தாளர் மதிமாறன் பேசுகையில், அம்பேத்கர் பிறந்த நாளில் தாலி அகற்றும் விழா, மாட்டிறைச்சி விருந்து என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சட்டப் போராட்டத்துக்கிடையே நடத்திக் காட்டி னார். அம்பேத்கர் செத்த மாட்டைத்தான் சாப் பிடாதே என்றார்.
ஆனால், அம்பேத்கர் மாட்டுக் கறியை சாப்பிடக்கூடாது என்று திரித்துச் சொல் கிறார்கள். ஏன் செத்தமாட்டை சாப்பிடக்கூடாது என்றார்? நில உடைமையாளர்களிடம் தொழிலாளி யாக இருந்த தாழ்த்தப்பட்டவர்களுக்கு அவர்கள் சாப்பிட்டு மீந்த உணவையே வழங்கினார்கள். அப்படித்தான் செத்தமாட்டை அப்புறப்படுத்துவதற்கு கொடுத்தார்கள். தீண்டாமையின் குறியீடாக செத்த மாட்டுக்கறி இருப்பதால் அப்படிச் சொன்னார்.
வரலாற்று ரீதியாக தாழ்த்தப்பட்டவர்கள், இசுலாமியர்கள் மாட்டுக்கறியை சாப்பிடுகிறார்கள். பார்ப்பனர்களை வைத்து புரோகிதம் செய்பவர்கள் மாட்டுக்கறியை சாப்பிடுவதில்லை. சாப்பிடாதவரை சாப்பிடக் கட்டாயப்படுத்துவது வன்முறை. அதே போல், சாப்பிடுபவரை தடுப்பது வன்முறை. ரிக் வேதம் மாட்டிறைச்சி குறித்து பரிந்துரை செய்துள்ளது.
மாட்டிறைச்சியை எதிர்ப்பவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை ஆதரித்தவேத நூல்களைக் கொளுத்த தயாரா? சைவ சமயத்தில் பெரிய புராணத்தில் சிவனுக்கு கண்ணப்ப நாயனார் விரும்பி படைத்தது பன்றி இறைச்சி. சிறுத்தொண்டர் மகனையே கொன்று பிள்ளைக்கறி தின்ற சிவன் என்று பெரிய புராணம் குறிப்பிடுகிறது.
இயற்பகை நாயனார் தன்னுடைய மனைவியையே சிவனுக்கு கொடுத்துவிட்டார். சிவன் எப்போது வந்தாலும் பார்ப் பனனாகவே வந்தான். ஏன் தாழ்த்தப்பட்டவனாக வரவில்லை? நந்தன் மாட் டிறைச்சி சாப்பிடுபவன், தீட்சிதர்கள் கனவில்தான் சிவன் வந்தான்.
1907ஆம் ஆண்டில் மாட்டிறைச்சிக்கு எதிராக பாரதியார் எழுதத் தொடங்கி இன்றுவரை அதைச் சொல்லி வருகிறார்கள். விவசாயம் பாதிக் கப்படும் என்று பாஜக முரளிதர்ராவ் கூறுகிறார். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதைத் தடுக்காத பாஜக அரசு மாடுகளைக் காப்பதாக கூறுகிறது. இராணு வத்தில் மாட்டுக்கறி கொடுக்கப் படுகிறது. ஆனால், மக்கள் சாப்பிடக்கூடாது என்கிறது பாஜக அரசு என்று எழுத்தாளர் வே.மதி மாறன் பேசுகையில் குறிப்பிட்டார்.
பங்கேற்றவர்கள்
சமூகநீதிப்பேரவை பேராயர் எஸ்றா சற்குணம், காங்கிரசு மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன், குணங்குடி அனீபா, பேராசிரியர் மா.நன்னன்,  திராவிடர் இயக்க எழுத்தாளர் ஆய்வாளர் க.திருநாவுக்கரசு, திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, ஊடகவியலாளர் அ.கும ரேசன், பகுத்தறிவாளர் கழகப்பொதுச்செயலாளர் வீ.குமரேசன், ‘வளர்தொழில்’ ஜெயகிருஷ்ணன்,
சாவித்திரி கண்ணன்,  மாநில மாணவரணிச் செயலா ளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மாண வரணித் துணைச் செயலாளர் த.சீ.இளந்திரையன்,  வட மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், தஞ்சை கூத்தரசன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன், விடுதலை அச்சக பிரிவு மேலாளர் க.சரவணன்,
பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் கி.சத்தியநாராயணன், பொருளாளர் மனோகரன், ஆ.சீ.அருணகிரி, பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் அண்ணா.சரவணன், பச்சையப்பன் கல்லூரி மேனாள் முதல்வர் அரங்கசாமி, வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, மகளிரணி தங்க. தனலட்சுமி, சி.வெற்றிச்செல்வி, பெரியார்களம் இறைவி, வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்கு ரைஞர் சு.குமாரதேவன், மகளிரணிச் செயலாளர் பொறியாளர் இன்பக்கனி, பொதுக்குழு உறுப்பினர்கள் தி.வே.சு.திருவள்ளுவன், வெ.மு.
மோகன், பகுத்தறி வாளர் கழகத் தலைவர் கோ.வி.கோபால், செயலாளர் வெங்கடேசன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மயிலை சேதுராமன், கோ.வீ. ராகவன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், பொழிசை கண்ணன், கொடுங்கையூர் தங்கமணி, தமிழ் இலெமுரியா மு.தருமராசன், சிந்தாதிரிப்பேட்டை அ.பாலகிருஷ்ணன், செங்குட்டு வன்,
மடிப்பாக்கம் ஜெயராமன், திராவிடர் தொழிலா ளர் பேரவை ராஜூ, நாகரத்தினம், பெரியார் மாணாக் கன், புரசை அன்புச்செல்வன், தளபதி பாண்டியன், சென்னை மண்டலச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அரங்கசாமி, சேரலாதன், முத்துக்கூத்தன் கலை அறப்பேரவை மு.கலைவாணன், மருத்துவர் தேனருவி, வழக்குரைஞர் ந.விவேகானந்தன், மு.சென்னியப்பன், சி.காமராசு,
பார்த்திபன், இரணியன், முத்துக்கிருஷ்ணன், புழல் சிறையாசிரியர் இராசேந்திரன், மகளிர் பாசறை மரகத மணி, மோகனப்ரியா,  ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், சைதை தென்றல், நாராயணசாமி, பிழைபொறுத்தான், லோகேஷ், சக்திவேல், சுரேஷ் உள்பட ஏராளமானவர்கள் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
அம்பத்தூர் தோழர் இராமலிங்கம் தாயார் இராஜம் மாள் (வயது 86) அவர்தம் இறப்புக்கு பின் எவ்வித சடங்கு களுமில்லாமல் இருக்கவேண்டும் என்பதை   தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் முன்னிலையில் மரண சாசனமாகக் கொடுத்தார். தமிழர் தலைவர் அவரைப் பாராட்டி பயனாடை அணிவித்தார். மாட் டிறைச்சிகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்திக் காட¢டிய கவின்மலர்குழுவினரை தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து பாராட்டினார்.



இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...