Total Pageviews

Friday, October 9, 2015

பெங்களூரு திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு பிரச்சாரச் செயலாளர் அ.அருள்மொழி எழுச்சியுரைபெங்களூரு, அக். 9_ அறி வாசான் தந்தை பெரியார் அவர்களின் 137ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, பேர றிஞர் அண்ணா அவர்களின் 107ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, விடுதலை மலர், அறிஞர் இங்கர்சால் நூல் அறிமுக விழா பெங்களூர் தமிழ்ச்சங்க திருவள்ளுவர் அரங்கில், சுயமரியாதைச் சுடரொளி மாசெ நினைவரங்கில் 20.9.2015 அன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது.
மாநாட்டின் முதல் நிகழ்வாக எழுச்சிமிகு கழகக் கொடியை பெரியார் பிஞ்சு இ.திவ்யா மாநிலத் தலைவர் மு.சானகிராமனி டம் வழங்க மாநாட்டுக் கொடியை வடக்கு மண்ட லத் தலைவர் இள.பழனி வேல் ஏற்றி வைத்தார். விண்ணைப் பிளக்கும் பெரியார் வாழ்க கடவுள் இல்லை எனும் முழக்கங் கள் முழங்கப்பட்டன. முழக்கங்களை துணைச் செயலாளர் வே.நடராசன் ஒலிபெருக்கியில் முழங் கினார்.
பெரியார் பிஞ்சு காவியா (இங்கர்சால் சுமித்ரா) பாவேந்தரின் சங்கே முழங்கு என்னும் காவியப் பாட லுக்கு நாட்டியம் ஆடி னார். இடைஇடையே சங்கு முழக்கத்திற்கு இரா. முல் லைக்கோ சங்கொலி முழங்கி நடித்தார். விழாத் தலைவர் பயனாடை அணிவித்தார்.
மாநிலச் செயலாளர் இரா.முல்லைக்கோ அனை வரையும் வரவேற்றுப் பேசினார். மாநிலப் பொரு ளாளர் கு.செயக்கிருட்டிணன் மாநாட்டை தொடங்கி வைத்து மாநாட்டை விளக்கி உரை நிகழ்த் தினார். மாநிலத் தலைவர் மு.சானகிராமன் மாநாட் டிற்கு தலைமையேற்று உரை நிகழ்த்தினார்.
அடுத்து படத்திறப்பு நிகழ்ந்தது. தந்தை பெரியா ரின் படத்தினை தலை மைச் செயற்குழு உறுப்பி னர் காவிரிப்பட்டணம் தா.திருப்பதி திறந்து வைத்தார்.
பேரறிஞர் அண்ணா வின் படத்தினை கல்வியா ளர் மே.ஆ.கிருட்டிணன் திறந்து வைத்தார். பேராசி ரியர் எம்.எம்.கல்புர்கியின் படத்தினை மூத்த பெரி யார் பெருந்தொண்டர் வி.சி.வேமண்ணா திறந்து வைத்தார்.
இந்துத்துவாவாதி களால் படுகொலை செய் யப்பட்ட பேராசிரியர் எம்.எம்.கல்புர்கி அவர் களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிடம் அமைதி காத்து அனை வரும் எழுந்து நின்றனர்.
80 அகவையை நிறைவு செய்த பெரியார் பெருந்த கைகளான மாநிலத் துணைத் தலைவர் வீ.மு.வேலு, பி.ஆர்.கஜபதி, தொழில் முனைவர் நா.செந்தில், பகுத்தறிவுப் பாடகர் நா.எத்திராசன் ஆகியோ ருக்கு மாநிலத் தலைவரால் பயனாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டனர்.
விடுதலை மலரை அறிமுகம் செய்து பொதுக்குழு உறுப்பினர் சென்னை நீலாங்கரை ஆர்.டி.வீரபத் திரன் வெளியிட்டார்.
விடுதலை மலரினை கிருட்டிணகிரி மாவட்ட இணைச் செயலாளர் சு.வனவேந்தன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத் தையன், பெரியார் பெருந் தொண்டரும் அகில இந் திய தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் செயல் தலைவர் முத்துச்செல்வன், தாம்பரம் மாவட்ட துணைத் தலைவர், விடுதலை நகர் செயராமன், வழக்குரைஞர் நரசிம்மமூர்த்தி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
அறிஞர் இங்கர்சாலின் நூலினை அறிமுகம் செய்து சென்னை மண்டலத் தலைவரும், இராவணன் அசுரன் தொழில் குழும நிறு வனருமான தி.இரா.இரத் தினசாமி வெளியிட்டார்.
இங்கர்சால் நூலினை பெண்ணினப் போராளி ம.கலைச்செல்வி, சென்னை மண்டலச் செயலாளர் பன்னீர் செல்வம், பொதுக் குழு உறுப்பினர் கே.எம். சிகாமணி, தாம்பரம் நகரச் செயலாளர் மோகன்ராஜ், பரங்கிமலை ஒன்றியத் தலை வர் பொழிசை கண்ணன் மற்றும் திராவிடமணி ஆகியோர் பெற்றுக் கொண் டனர். அவர்கள் தலைவ ரால் பயனாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டனர்.
பெங்களூரூத் தமிழ்ச் சங்கத் தலைவர் கோ. தாமோதரன், மாநிலத் தலைவர் மு.சானகிராமன், பொருளாளர் கு.செயக் கிருட்டிணன் செயலாளர் இரா.முல்லைக்கோ ஆகி யோர்களுக்கு பயனாடை அணிவித்து திராவிடர் கழகத்தின் செயல்பாடு களும் சேவைகளும் குறித்து கருத்துரை வழங்கினார். தலைவர் மு.ஜானகிராமன் பயனாடை அணிவித்து சிறப்பித்தார்.
காரைக்குடி மாவட்டச் செயலாளரும், தலைமைக் கழகப் பேச்சாளருமான தி.என்னாரெசு பிராட்லா மாநாட்டின் நோக்கத்தை விளக்கி நகைச்சுவையுடன் கூடிய உரை நிகழ்த்தினார்.
பெங்களூரூ கால ஹள்ளி பகுதித் தலைவர் மு.தருமராசன் மாநாட்டில் ஆறு தீர்மானங்களை முன் மொழிந்தார்.
ஓர்மா பகுதிச் செயலா ளரும் பொதுக்குழு உறுப் பினருமான இரா.இராசா ராம் வழிமொழிந்தார்கள். தலைவர் மு.சானகிரான் பயனாடை அணிவித்தார்.
மாநாட்டின் நிறைவாக திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி எழுச்சி மிகுந்த சிறப்புரை நிகழ்த் தினார்கள்.
இறுதியாக திருச்சி அஸ்ரஃபின் ரோபோ மின்னல் நடனம் நடை பெற்றது. அவரது நடனத் தில் உடல் அசைவுக்கு ஏற்றாற்போல் மக்கள் கையொலி எழுப்பி ஆரவா ரம் செய்து மகிழ்ந்தனர். தலைவர் மு.ஜானகிராமன் அவருக்கு பயனாடை அணி வித்து சிறப்பு செய்தார்.
கிருட்டிணகிரி மாவட்ட துணைத் தலைவர் சுப்பிர மணியன் இ.சு.தென்னவன்,வாசுதேவன், எம்.எல். பிரேம்குமார், கு.ஆனந்த், மலர் முருகேசபாண்டியன், பெ.பாண்டியன், ஆட்டோ பாஸ்கர், கேசவன், பி.எம். நடராசன், துரைசாமி, செயபால், நிர்மலா, இந் திரா, செயசிறீ, தென்றல், தேவிகா, ராஜா, ராமு, அறி வுச்செல்வன், த.குணசேக ரன், சத்தியவாணி மற்றும் ஏராளமானோர் பெரியார் பிஞ்சுகளுடன் கலந்து கொண்டனர். திமுக மாநிலப் பொருளாளர் கே.தட்சணாமூர்த்தி, கிருட் டிணகிரி மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பயனாடை அணிவிக்கப்பட்டது.
மாநாட்டில் நன்றியுரை யாற்றிய அமுதபாண்டிய னுக்கு பயனாடை அணி விக்கப்பட்டது. மாநாடு நடக்கும்போது கடும் மழை பெய்ததால் பிள்ளையார் உருவ பொம்மையை அல் சூர் ஏரியில் கரைக்க சென்ற காவி உடையணிந்தவர்கள், மாநாட்டின் உள்ளே வந்து கலந்து கொண்டு, கருப்புச்சட்டைக்காரர்கள் நன்றாகத் தான் பேசுகிறார் கள் என்று கூறிச் சென்றனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1) இந்தியத்துணைக் கண்டத்தில், காவி, மத வெறியை தடுக்கும் மூலி கையான திராவிட கோட் பாடுகளை உயர்த்தி பிடிக் கின்ற வகையில் 21.1.2015 தொடங்கி இன்னாள் முடிய 347 ஆவது திரா விடர் விழிப்புணர்வு மாநாடுகளை அறிவித்து நாடு முழுவதும் நடத்திக் காட்டிய திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர் களை இம்மாநாடு பாராட்டி மகிழ்கிறது.
2) கருநாடக மாநிலத் தில் சாதிவாரி கணக் கெடுப்பு நடத்தி அனைத் துத் தரப்பு மக்களுக்கும் அரசின் ஒதுக்கீடுகளும், சலுகைகளும் சென்றடைய முயற்சி மேற்கொண்டுள்ள கருநாடக மாநில முதல்வர் சித்தராமையா அவர்களை இம்மாநாடு பாராட்டு கிறது.
3) சிறந்த சீர்த்திருத்த வாதியும் இலக்கியத்திற் கான சாகியத்திய அகா டமி விருது பெற்றவரு மான பேராசிரியர் எம். எம்.கல்புர்கி அவர்களை இந் துத்துவாவாதிகள் துப்பாக் கியால் சுட்டுக்கொலை செய்ததை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கின் றது. கொலை வெறியர்களை துரித கதியில்கண்டறிந்து தக்க தண்டனை வழங்கிட கருநாடக மாநில அரசைக் கேட்டுக்கொள்கிறது.
4) பெங்களூரு அல்சூர் ஏரியின் தென் மேற்கு பகுதி யில் அமைக்கப்பெற்றுள்ள திருவள்ளுவர் பெருந்த கையின் சிலையிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் சாலைக்கு திருவள்ளுவர் சாலை என பெயரிட மாநக ராட்சியைக் கேட்டுக் கொள்ளுதல்.
5) பெங்களூரு முகுந்தா திரையரங்கு மேம்பாலத் திலிருந்து இராமமூர்த்தி நகர் நான்கு முனை சந்திப்பு வரையுள்ள சாலைக்கு தந்தை பெரியார் சாலை என பெயரிட மாநகராட் சியை கேட்டுக் கொள்ளுதல்.
6) பெரியார் நகர் வழி யாக செல்லும் பெங்களூரு நகர பேருந்துகளில் பெரி யார் நகர் என குறிப்பிட போக்குவரத்துக் கழகத்தை யும், அரசையும் கேட்டுக் கொள்ளுதல்.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: