Tuesday, October 20, 2015

நறுக்குகள்!



எந்த முகம்?
இந்திய கிரிக்கெட் வாரிய நிருவாகிகளும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிருவாகிகளும் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி நடத் துவது குறித்து மும்பையில் பேச்சு வார்த்தை நடத்திய போது, சிவசேனைக் குண் டர்கள் அந்த அலுவலகத் திற்குள் சென்று சூறையா டியுள்ளனர்.
இந்தப் பிரச் சினை பாகிஸ்தானுக்கு எட்டி பஞ்சாப் மாநில சட்டப் பேரவையில் கண் டனம் தெரிவிக்கும் அள வுக்கு பிரச்சினை முற்றிப் போய்விட்டது. இந்தியா வில் நடக்கும் மதவாதக் கேவலங்கள் குறித்து ஏற்கனவே அமெரிக்க அதிபரே இந்திய பிரதமர் நரேந்திர மோடியைப் பக்கத்தில் வைத்தே தலை யில் குட்டினார்.
பிரதமர் மோடி எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாட்டுக்குச் செல்லு வாரோ?

அண்ணாமலைக்கு அரோகரா!
தீப விழாவின் போது திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்கு வோர் முன் அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித் துள்ளது.
பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தக் கூடாது. குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட வேண்டும்; அன்னதானம் வழங்கு வோர் அவர்கள் பொறுப் பில் சம்பந்தப்பட்ட பகு தியைச் சுத்தம் செய்து கொடுக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனை கள் வைக்கப்பட்டுள்ளன.
உண்மைதானே! கோயில் விழாக்கள் என் றாலே சுற்றுச்சூழல் பாதிப்பு தானே! இதனால் பக்தர் களும், பொது மக்களும் பாதிக்கப்படும் நிலைதான்! தீபத்தில் உணவுப் பொருள் களை நெருப்பில் கொட் டுவதும் அதனை வேடிக் கைப் பார்க்க மக்கள் கூடுவதும் இத்தியாதி இத் தியாதி நிகழ்வுகள் நாட் டுக்கு நல்லதா? ஒரு குழவிக் கல்லை வைத்து இவ்வளவுக் கேடுகளைச் செய்து கொண்டு அலை கிறார்களே - வெட்கக்கேடு!

விலையேற்றம்
சரஸ்வதி பூஜை - சாமந்திப் பூ கிலோ ரூ.150 என்று  ஒரு செய்தி வெளி யாகியுள்ளது- இது மூன்று மடங்கு உயர்வாம்!   இலட் சுமி தேவியிடம் சரஸ்வதி தேவி சொல்லி இதையெல்லாம் கட்டுப்படுத்தச் செய்யக் கூடாதா? இலட் சுமிதேவி தானே இந்து மதத்தில் பொருளாதார (செல்வக் கடவுளச்சி) கடவுள்? உழைத்துச் சம் பாதித்த பணம் மூடத் தனத்துக்குக் கரியாகிறதே - என்ன சொல்ல!

ம(மா)து செய்த வேலை!
போடி நாயக்கனூர் அருகில் வீரபாண்டி கிரா மத்தில் மதுப் போதையில் தாலி கட்டியவனை வெறுத்து மணமகள் வெளியேறினார் என்பது ஒரு நற்செய்தியே!
மதுவை வெறுக்கும் மாதுகள் வீதிக்கு வந்து போராடுவது - இதுபோல சரியான நேரத்தில் சரியான முடிவு கள் எடுப்பது பாராட்டத்தக்கது.
தமிழ்நாட்டில் பெண் ஒருவர் முதல் அமைச்சராக உள்ளார் கவனிப்பாரா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...