Total Pageviews

Thursday, October 22, 2015

வரலாற்றை மாற்றும் வஞ்சக வேலை


 
சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முன்பே சரஸ்வதி நதி நாகரிகம் இருந்ததாகவும், ஆனால் மேலை நாட்டு ஆய்வாளர்கள் இதை மறைத்து சிந்து சமவெளி நாகரிகத்தை முன்னிலைப்படுத்தி, சரஸ்வதி நாகரி கத்தை உலகின் பார்வையில் இருந்து மறைத்து விட்டனர் என்று டில்லி பல்கலைக் கழகத்தின் சமஸ்கிருதப் பேராசிரியர்கள் மாநாட்டில் ஆய்வறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
டில்லிப் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய காலச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சமஸ்கிருத ஆய்வு மய்யம் இணைந்து 3 நாள் கருத்தரங்கம் ஒன்றை டில்லி பல்கலைக் கழகத்தில் நடத்தியது. இந்தக் கருத்தரங்கத்தில் சமஸ்கிருத ஆய்வாளர்கள் மற்றும் வேத ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.  இந்தக் கருத்தரங்கில் வேத ஆய்வாளர் மோகன்சந்த் என்பவர் சமர்ப்பித்த கட்டுரையில் கூறியுள்ளதாவது, வேதகாலத்தில் மெஹெர்கர் நாகரிகம் 7000 ஆண்டு பழமையானதாகும், தற்போது கிழக்குப் பாகிஸ்தானில் உள்ள ராக்கிகடி, பிரானா, 
அரியானா வில் உள்ள சந்தாயன், டப்பள் ஆகிய இடங்கள் குறித்து ரிக்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் சரஸ்வதி நதி ஓடியதாக கூறப்பட்ட 2449 இடங்கள் வேதத்தில் உள்ளன. இது சரஸ்வதி மற்றும் சிந்து நதிக்கு இடைப் பட்ட பகுதியாகும். மேலும் வேதத்தில் சிந்து நதிகுறித்து ஆயிரத்திற்கும் குறைவான குறிப்புகளே உள்ளன. ஆகவே நாம் சிந்து சமவெளி நாகரிகம் என்பதை சரஸ்வதி சமவெளி நாகரிகம் என்று தான் கூற வேண் டும், அல்லது சரஸ்வதி சிந்து சமவெளி நாகரிகம் என்று கூறலாம்.  மேலும், இப்போது நாம் படிக்கும் வரலாறு வெள்ளைக்காரர்களால் உண்மைகள் மறைக்கப்பட்டு போலியாக தயாரிக்கப்பட்டதாகும். 
வேதங்களில் கூறப்பட்டுள்ள வானியல் நிகழ்வுகள் எல்லாம் 7000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை, வானியல் குறிப்பு களை தயாரிக்கும் அளவிற்கு திறமை உள்ளவர்கள் அப்போது இருந்தனர் என்றால் அறிவியல் வளர்ச்சி அந்தக் கால கட்டத்திலேயே உச்சத்தைத் தொட்டுள்ளது தெரிய வருகிறது.
உண்மையில் மேலை நாடுகள் இன்றுவரை  யூனான் (பாரசீக) நாகரிகம் தான் மிகவும் பழமையானது என்று கூறுகிறார்கள். உண்மை அது வல்ல, நமது வரலாற்றை மறைக்க மேலை நாட்டவர்கள் செய்த சூழ்ச்சியாகும் தனது ஆய்வறிக்கை கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் சமஸ்கிருதப் பண்டிதர்.     
மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டில்லியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யபட்ட கருத்தரங்கம் ஒன்றில் பேசும் போது நமது வரலாற்றை மாற்றி எழுதவேண்டிய அவசியம் நமக்கு உள்ளது என்றும், அதே நேரத்தில் பல்வேறு ஆய்வுகள் நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவரவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அவர் கூறிய ஓராண்டிற் குள் வேதங்களில் இருந்து சரஸ்வதி நாகரிகம் பற்றிய ஆய்வை வேத ஆய்வாளர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கட்டுரைகள் அனைத்தும் கலாச்சாரத்துறை அமைச்சகம் மற்றும் மனிதவளத்துறை அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்கப்படும். ஆகவே விரைவில் அமைச்சர்வை கூடி சிந்து சம வெளி நாகரிகத்தை சரஸ்வதி சமவெளி நாகரிகம் என்று மாற்றலாம்!
மெஹெர்கர்,  இன்றைய பாகிஸ்தானிலுள்ள, பண்டைக்காலக் குடியேற்றப் பகுதி ஆகும். இப்பிரதே சத்தின் புதிய கற்காலக் குடியேற்றங்கள் பற்றிய தொல் லியல் ஆய்வுகளுக்கு மிக முக்கியமான களங்களில் இதுவும் ஒன்று. இக்குடியேற்றத்தின் எச்சங்கள் பாகிஸ் தானின் பலூச்சிஸ்தான் பகுதியில் காணப்படுகின்றன. இது போலன் கணவாய்க்கு அருகிலுள்ள கச்சிச் சமவெளிப் பகுதியில், சிந்துநதிப் பள்ளத்தாக்குக்கு மேற்கே, குவேட்டா (Quetta),, காலத் Kalat)), சிபி (Sibi) ஆகிய நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது.
பிரான்சைச் சேர்ந்த தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இக் களம், உலகின் பழமையான மனித குடியேற்றங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதன் ஆதிக் குடியேற்ற வாசிகள், பலூச்சிக் குகை வாழ்நரும், மீனவர்களும் ஆவர். 1974 இல் நடத்தப் பட்ட தொல்லியல் ஆய்வுகளை (ஜர்ரிகேயும் (Jarrige) மற்றவர்களும்) அடிப்படையாகக் கொண்டு, இப் பகுதியே தென்னாசியாவின் அறியப்பட்ட வேளாண் மைக் குடியேற்றங்களில் முற்பட்டதாகக் கருதப்படு கின்றது. இங்குள்ள குடியேற்றத்துக்கான மிக முற்பட்ட தடயங்கள் கி.மு. 7000 அய்ச் சேர்ந்தவை. தென்னாசி யாவின் முற்பட்ட மட்பாண்டச் சான்றுகளும் இங்கேயே கிடைத்துள்ளன.
மெஹெர்கரின் செப்புக்கால மக்கள், வடக்கு ஆப்கானிஸ்தான், வடகிழக்கு ஈரான் மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளுடனும் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதாகத் தெரிகிறது என்று கதையளந்து கொட்டியுள்ளனர் பார்ப்பன மே(ல்)தாவிகள்.
வாஜ்பேயி பிரதமராக - இருந்த போது காளையைக் குதிரையாகக் கணினிமூலம் உல்டா செய்த கூட்டம் எதையும் செய்யத் தயங்காது, வரலாற்று ஆய்வுக் குழுவை ஆர்.எஸ்.எஸ். மயமாக்கி விட்டனர். அடுத்து ஒவ்வொன்றாக தங்கள் சித்து வேலைகளில் ஈடுபடு வார்கள்.
முற்போக்குச் சிந்தனையாளர்களும் வரலாற்று ஆசிரியர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது. தினமணியின் முன்னாள் ஆசிரியர் போன்றவர்கள் மொகஞ்சதாரோ, அரப்பா நாகரிகம், திராவிட நாகரிகம் என்று அறுதியிட்டுக் கூறியிருப்பதும் கவனிக்கத் தக்கதாகும்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: