Total Pageviews

Tuesday, October 20, 2015

மென்பொருள் இந்து சட்ட மசோதா (2)


(டிஜிட்டல் இந்தியா என்ற கனவை நாங்கள் எட்டவேண்டும் என்றால், சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள உங்களைப் போல இந்திய அரசும் சிந்திக்கத் தொடங்க வேண்டும் என்பதை நானறிவேன். - நரேந்திர மோடி, இந்திய பிரதமர்)
(நாம் படிக்கும் வரலாறு, நமது கலாச்சார பாரம்பரியம் அல்லது நமது கல்வி நிறுவனங்கள் எல்லாம்,  இதுகாலம் வரை மாசுபடுத்தப்பட்டு வந்துள்ளன. மேற்கு மயமாக்கப்பட்ட பொது விவாதப் பகுதி ஒவ்வொன்றையும் தூய்மையானதாக ஆக்கி, இந்திய கலாச்சாரத்தையும், நாகரிகத்தையும் அந்த இடங்களில் நாம் மீண்டும் மலரச் செய்வோம். - மகேஷ்சர்மா,  கலாச்சார இணை அமைச்சர், இந்திய அரசு).


- நிசிம் மன்னத்துக்காரன்

கூகுல் தலைமையிடத்திற்கு பிரத மர் மோடி சென்று, பிகார் மாநிலத்தில் முன்னர் இருந்த காகூல் என்ற இடம்  கூகுள் உலக வரைபடத்தில் எங்கே இருக்கிறது என்பதைக் குறிப்பாக தேடிக் காட்டுமாறு கேட்டுக் கொண் டார். இந்த காகூல் என்ற இடத்தில் தான் இந்தியாவின் பண்டைய வானியல் ஆய்வாளர் ஆர்யபட்டா ஒரு விண்வெளி ஆய்வு நிறுவ னத்தை வைத்திருந்தார்   என்று நம்பப் படுகிறது.
அறிவியல் தொழில்நுட்ப அறிவினை இந்து இந்தியாதான் முதன் முதலாகக் கண்டறிந்தது என்ற உரிமை தனக்குத் தானே கொண்டா டப்படுகிறது. கணேசருக்கு யானைத் தலை மாற்றிப் பொருத்தப்பட்டது, பிறப்புறுப்பில் இருந்து இல்லாமல் தோன்றிய கர்ணனின் பிறப்பு டிஜிடல் இந்தியாவுக்கு முரண்பட்ட மாயா ஜாலக் கதைகள் அல்ல; நீண்ட பாரம்பரியம் கொண்ட அறிவியல் சாதனைகளில் ஒன்றாகும்.
இந்துத்துவாவுக்கும், முன்னேற்றத் திற்கும் இடையே  நெருக்கமான கோடு ஒன்றை வரைவதில்,  அதன் தொடர்புகள், புரிதல் மற்றும் பரிவு ஆகியவற்றை இழந்துவிடும் ஒரு ஆபத்துக்கு நாம் உள்ளாகிறோம். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை ஊகித்தறிந்து அறிஞர் தாமஸ் பிளாம் ஹான்சன் முன்வைத்த வாதத்தைப் போன்று, சிக்கல் நிறைந்த கலாச்சாரம் நிலவுதல், 
நிதியாதாரப் பொழிவு மற்றும் நுகர்வோரின் விருப் பங்கள் நிறைந்திருக்கும் உலகமய மாக்கப்பட்ட ஓர் உலகின் அங்கீகாரம் பெறவேண்டும் என்ற பெருவிருப் பத்தை அது நிறைவு செய்வதால், இந்து தேசியம் கவர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. கீழ் ஜாதியினர் அரசியல் அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொள்வது பற்றியும், முஸ்லிம்கள் பற்றிய அச்சத்தினாலும், அச்சுறுத்தப் பட்டுள்ள, பிளவு பட்டுள்ள ஒரு சமூக அமைப்பில் ஒழுங்கை ஏற்படுத்தவும், நிலை தடுமாறாமல் இருக்கச் செய்யும் நங்கூரம் போன்று அது பயன்படுகிறது என்று ஹான்சன் கூறுவது மேலும் முக்கியத்துவம் வாய்ந்தது.
யோகி ஆதித்தியானந்துகள், கிரிராஜ்சிங்குகள், சாட்சி மகராஜ்கள் போன்ற இந்துத்துவ துணை அமைப் புகளைச் சேர்ந்தவர்களை நாம் காணும்போது, இந்து தேசிய அடையளம் பேரழிவைத் தருவதாக இருந்தபோதிலும், பரபரப்பு ஏதுமின்றி, கண்ணுக்குத் தெரியாமல், தொழில்நுட்ப ஆர்வம் கொண்ட இளைஞர்கள் உள்ளிட்ட இந்தியாவில் நவீனமானவர்கள் என்று கருதப்படுபவர்களிடையே, 
 மெல்ல மெல்ல வளர்ந்து வருவதைக் காண நாம் தவறிவிடுகிறோம் (அனைத்து நோக்கங் களுக்காகவும், பார்ப்பனீய மற்றும் உயர்ஜாதிய மதிப்பீடுகளால் இது மாற்றிய மைக்கப்பட்டது). அதனால்தான் சமஸ் கிருதம், பகவத்கீதை, யோகா  பற்றி மோடி போற்றிப் புகழ்வதையும், இந்திய அரச மைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டு, இன்றளவும் நடைமுறையில் உள்ள மதச்சார்பின்மை மீதான அவரது  இடை யறாத தாக்குதலையும் அயல்நாடுகளில் வாழும் இத்தகைய இந்திய மக்கள் கும் பல்கள் கைதட்டி பாராட்டி வரவேற் கின்றன.
வெளிப்படையான இந்துத்துவா தழுவப்படாத போதிலும்,  இந்தியா ஓர் இந்துத்துவக் கண்ணாடியின் மூலமாகத் தான் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. நவீன மயமானதாக ஆவதற்கு இந்தியா விரும்புகிறது; ஆனால், வேறெங்கிலும் இருக்கும் கோடிக்கணக்கான நவீனர் களில், குறிப்பாக மேற்கத்திய நவீனர் களில் முகம் அற்றவர்களாக, இன அடை யாளமற்ற இந்தியாவாக இருக்க அது விரும்பவில்லை. ஒரு நவீன இந்து இந்தியாவாக தனது இடத்தை உறுதிப் படுத்திக் கொள்ள அது விரும்புகிறது. பின்னணியில், சத்தி இந்தியா என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருக்க,  முகநூல் தலைமையிடத்தில் திரண்டிருந்த இந்தியப் பார்வையாளர்களின் பெருங்கூட்டம், மோடி மோடி என்று உச்சரித்துக் கொண்டே பிரதமரை வரவேற்கும்போது, 
டிஜிடல் இந்தியாவை உருவாக்குவ தற்கான மோடியின் தொடக்க முயற்சிக்கு ஆதரவாக,  மூவண்ணத்திலான தங்களது நிழற்படங்களை வைத்து, முகநூலில் இருந்த பழைய படங்களை மாற்றிக் கொள்ளும்போது, ஒரு டிஜிடல் இந்தி யாவும், இந்து இந்தியாவும் ஒன்றுடன் ஒன்று சங்கமிக்கின்றன. இவர்கள் அனை வருமே இந்துத்துவ ஆதரவாளர்கள் அல்ல; என்றாலும் இந்து இந்தியா என்னும் கருத்தினால் பிணைக்கப்பட்டுள்ள சூறை யாடலைக் காணாமல் தங்கள் கண்களை மூடிக்கொண்டு, ஒழுக்கநெறிக் கோட் பாடுகளை தொழில்நுட்பப் பகுதி களாகவரிசையில் மாற்றி அமைத்துக் கொள்ளும் தேசியவாதிகள் அவர்கள்.
நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் படிப்பகத்தை, ஆட்சியைப் பற்றி எடுத்துக் காட்டும் காட்சிப் பொருளாக மாற்றுவதற்கு அரசு விரும்புகிறது. இக்காட்சிப் பொருளின் தூண்களாக, சுறுசுறுப்பும் திறமையும் மிகுந்த நகரங்கள் (Smart Cities) மற்றும் நமது அறிவியல் முன்னேற்றத்திற்கு மகுடம் சூட்டுவது போன்று அமையக் கூடிய, செவ்வாய் கோளுக்கு ஆளில்லா செயற்கைக் கோளை அனுப்பும் இந்திய விண்வெளி ஆய்வு மய்யத்தின் திட்டம் ஆகியவை இருக்கக்கூடும்.

இந்தியத் திரைப்படத் தொழில்நுட்பக் கூட்டமைப்பு, நேரு நினைவு அருங் காட்சியகம் மற்றும் படிப்பகம், இந்திய வரலாற்று ஆய்வுக் குழுமம் போன்ற அமைப்புகளை அரசு எவ்வாறு நடத் துகிறது என்பது பற்றி அதிகார வர்க்கம் மேற் கொண்டுள்ள, வெளிப்படையாகத் தெரியும் செயலை விட அதிக முக்கியத் துவம் வாய்ந்தது என்னவென்றால், அதன் மீதான எதிர்ப்பு எதுவும் பொதுமக்களி டமிருந்து உருவாகி வெளிப்படுத்தப் படவில்லை என்பதும், நமது சமூகத்தில் திரைப் படத் துறைக்கும், வரலாற்றுக்கும் அதிக மதிப்பளிக்கப்படுகிறது என்பதும் தான். 
யதேச்சதிகார ஆட்சியை செலுத் துபவையாக இருந்தபோதிலும், இரான் மற்றும் சீன நாடுகளில்,  உலக இன மாந் தரிடையே புகழின் உச்சத்தைத் தொடும் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், ஹாலிவுட் திரைப்படத் துறையையே தோற்கடிக்க இயன்றதாகக் கருதப்படும் தொழில் நுட்ப பொருளாதார ஆற்றல் மிகுந்த நவீன இந்திய திரைப்படத் துறை, 700 கோடி ரூபாய் வசூல் செய்யும் சிறுபிள்ளைத் தனமான, பொழுதுபோக்கு மசாலா திரைப்படங் களையே தயாரித்துக் கொண்டிருக்கிறது.
கலாச்சாரம் பற்றி காரண காரியத் துடனும், இயந்திரத்தனமாகவும் புரிந்து கொள்வதற்கான விளைநிலமாகவே, தொழில்நுட்பத் திறன் கோட்பாட்டின் பிடியில் சிக்கியிருக்கும் முன்னேற்றத் திற்கான ஒரு களம் விளங்குகிறது. இவை ஒன்றுக்கொன்று ஊட்டமளித்துக் கொள் கின்றன. அவ்வப்போது மக்கள் சமூகத் திடையே தோன்றும் உடல்நலச் சிக்கல் களுக்கும், விவசாயிகளின் தற்கொலை களுக்கும் அரசு மேற்கொண்ட நிவா ரணச் செயல்கள் பரிதாபம் மிகுந் தவையாக ஒரு பக்கம்  நடந்தேறிய போது, தங்கள் இந்துத்துவக் கொள் கைகளை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்க்கும் பகுத்தறிவு சிந்தனையா ளர்கள் கொல்லப்படுவதும், கலாச்சார சுதந்திரங்கள் தொடர்ந்து மறுக்கப் படுவதும், குறைக்கப் படுவதும் மறு பக்கத்தில் நடந்தேறுகின்றன. 
மிகக் குறைந்த அளவில் மனிதவள ஆற்றல் முன்னேற்றத்தைத்  தற்போது எட்டியுள்ள இந்தியா, உலகின் உயர் ஆற்றல் மிகுந்த நாடாக (Super Power) உருவாகவேண்டும் என்ற பேராவல் கொண்டிருக்கிறது. அத்த கையதொரு நிலையை எட்டுவதற்கு அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் தில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருக்கவேண்டும் என்பது மட்டுமன்றி, நாயை நாய் தின்னும் முதலாளித்துவ உலகைப்  பற்றிய  உணர்வும், நம்பிக்கையும் தேவை.
அத்துடன்  இந்து இந்தியாவின் கலாச் சாரத் திட்டத்தை மேற்கொள்ளவும் இப்போது நாம் கேட்டுக் கொள்ளப் படுகிறோம். தத்துவ ஞானி தியோடர் அடர்னோ கூறியபடி  தொழில்நுட்பத் திறன் துல்லியமான, மனிதத் தன்மை யற்ற, கொடுமையான சமிக்ஞைகளை மட்டும் வெளிப்படுத்துவதில்லை; அத்தடன் மனிதரையும் அது அவ் வாறே ஆக்குகிறது. முதலாளித்துவம் மற்றும் காரண காரிய அறிவியல் மேலெழுந்தவாரியாக பரப்பப்படுவதை நவீனத்துவத்துடன் வைத்து குழப்பிக் கொள்ளக்கூடாது. ஒரு சில முரண் பாடுகள் நீங்கலாக நவீன டிஜிடல் இந்தியாவின் மேம்போக்கான நவீனத் துவத்துடன் இந்து இந்தியா மிகுந்த இணக்கத்துடன் இருப்பதாகும்.
நவீனத்துவம் மற்றும் அறிவியல் சோதனைக்கு அடிப்படையாக இருக் கும் இடைவிடாமல் கேள்விகள் கேட் டுக் கொண்டிருக்கும் ஒரு எதிர் கலாச்சாரத்தில் மட்டுமே ஒரு விமர் சனத்திற்கான விதைகள் தோன்ற முடியும்.  சிலிகான் பள்ளத்தாக்கு மனிதர்களைப் போல தனது அரசும் சிந்திக்க விரும்புகிறது என்று நரேந் திர மோடி கூறும்போது,  இடை விடாத இந்த கேள்வி கேட்பதைப் பற்றி அவர் தனது மனதில் நினைத் திருக்கவில்லை. (சிலிகான் பள்ளத் தாக்கு டிஜிடல் நிறுவனங்களின் மனதிலும்  அது இல்லை.) அத்தகைய சிந்தனை கொண்டிருப்பதற்கு, டிஜிடல் அறிவோ அல்லது மற்ற படிப்பறிவோ போதாது.
தனது சுயநலத்துக்காக ஏமாற்றிப் பயன்படுத்திக் கொள்ளும் அனைத்து வடிவிலான செயல்பாடு களையும் சட்டப்படி நியாயப்படுத்தும் ஆதிக்க வடிவிலான சிந்தனைக்கு சவால் விடும் நுணுக்க வடிவிலான கற்பித்தலும் அதற்குத் தேவை. கலாச்சாரத்தைப் பற்றிய  ஒரு காரண காரியக் கண்ணோட்டத்தைக் கை விடாமல், இவ்வாறு செய்வது சாத்தியமானதல்ல. எவ்வளவுதான் டிஜிடல் மயமாக்கப்பட்டாலும், ஒர் இந்து இந்தியாவில் இந்தியாவின் எதிர்காலம்  இருக்கப்போவதில்லை.
(நிறைவு)
நன்றி: அவுட் லுக் 12-10-2015
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்.

0 comments: