Total Pageviews

Tuesday, September 22, 2015

திருக்குறள் வர்ணதர்மத்தைப் போதிக்கும் நூலாம் ஆர்.எஸ்.எஸ். குருநாதர் கோல்வால்கர் எழுதியுள்ளார் சென்னை அய்யா விழாவில் அம்பலப்படுத்தினார் தமிழர் தலைவர்

திருக்குறள் வர்ணதர்மத்தைப் போதிக்கும் நூலாம்
ஆர்.எஸ்.எஸ். குருநாதர் கோல்வால்கர் எழுதியுள்ளார்
சென்னை அய்யா விழாவில் அம்பலப்படுத்தினார் தமிழர் தலைவர்

சென்னை, ஆக. 20- பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறும் திருக்குறள் - இந்து வர்ணதர்மத்தைப் போதிக்கும் நூல் என்று ஆர்.எஸ்.எஸ். குருநாதர் எம்.எஸ். கோல்வால்கர் குறிப்பிட்டுள்ளதை அம்பலப்படுத்தினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தந்தை பெரியார் அவர்களின் 137 ஆவது பிறந்த நாள் விழா 17.9.2015 அன்று சென்னை பெரியார் திடலிலுள்ள எம்.ஆர்.இராதாமன்றத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பெரியார் களஞ்சியம் தொகுதி 37 - திருக்குறள் - வள்ளுவர் நூல் வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமி ழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற் றினார்.
அவரது உரை வருமாறு:
மிகுந்த எழுச்சியோடு நடைபெறக்கூடிய அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய 137 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, நடைபெறக்கூடிய பெரியார் களஞ்சியம் தொகுதி 37 திருக்குறள் - வள்ளுவர் என்ற 37 ஆவது களஞ்சியத்தை நமக்கெல்லாம் திறந்து காட்டி, மிகச் சிறப்பான ஒரு திருக்குறள் விரிவுரையை நிகழ்த்தவிருக் கின்ற பெரியாரின் பெருமைகளை பேசாத நாளெல்லாம் தான் பிறவாத நாள் என்று கருதக்கூடிய எங்கள் ஒப்பற்ற இனமானப் பேராசிரியர் அவர்களே, இந்தக் களஞ்சியத்தில் இருக்கக்கூடிய சாறைப் பிழிந்தெடுத்து, மிக அற்புதமாக இங்கே நமக்கு முன்னாலே எடுத்து வைத்து, இன்னும் அதிகமாக விளக்கமாட்டாரா என்ற சுவையோடு கேட்டுக் கொண்டிருக்கக்கூடிய வாய்ப்பை உருவாக்கிய, இந்தக் காலத்து அவ்வையார் அவர்களே,
இந்த நிகழ்ச்சியில் முடிந்தவுடன், அடுத்து நடை பெறவிருக்கும் மகளிர் கருத்தரங்கத்தைத் தொடங்கி வைக்க வந்திருக்கக்கூடிய, எங்கே சென்றாலும் எந்த வாய்ப் பிலும் தன்னை பெரியாரிஸ்ட் என்று தன்னை வர்ணித்துக் கொள்ளக்கூடிய அருமை தோழியர் குஷ்பு சுந்தர் அவர்களே, நிகழ்ச்சியிலே கலந்துகொண்டு சிறப்பாக பங்கேற்க இருக்கக்கூடிய கவிஞர் சல்மா அவர்களே, பத்திரி கையாளர் கவிதா முரளிதரன் அவர்களே, பேராசிரியர் சுந்தரவல்லி அவர்களே, வழக்குரைஞர் அருள்மொழி அவர்களே, வெள்ளம்போல் திரண்டிருக்கக்கூடிய அருமைத் தோழர்களே, நண்பர்களே, செய்தியாளர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பத்து லட்சம் நூல்களுக்குத் தந்தை பெரியார் காட்டிய வழி
நீண்ட நேரத்தை நான் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. இடையிலே நான் நிற்கவும் அதிகமாக விரும்பவில்லை.
பெரியார் களஞ்சியம் என்ற நூலில் மிக அழகாக நம்முடைய அவ்வை நடராசனார் அவர்கள் சிறப்பாகச் சொன்னார்கள். இந்த நூலினுடைய இறுதிப் பகுதியில், தமிழன் நெறி விளக்க மாநட்டை, அய்யா அவர்கள், 11.1.1949 இல் நடத்தினார்கள். கலைவாணர், அண்ணா, திரு.வி.க., நாவலர், பேராசிரியர் ஆகியோர் அந்த மாநாட்டில் இருந்தார்கள். பல்வேறு வரலாற்று குறிப்புகளும் இதிலே இணைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நூலை நீங்கள் வாங்கவேண்டும்; படிக்கவேண்டும்; பரப்பவேண்டும். அவர்கள் சொன்னார்கள் அல்லவா, ஏற் கெனவே திட்டமிட்டிருக்கிறோம் 10 லட்சம் பிரதிகளுக்கு. அதனை அய்யா அவர்கள் செய்துகாட்டினார்கள். எங்கே செய்து காட்டினார்கள் என்று சொன்னால், திருக்குறளை ஒரு நான்கணா என்கிற அளவில், சிந்தாதிரிப்பேட்டையில் விடுதலை அலுவலகம் இருந்த காலகட்டத்தில், மிகத் தெளிவாக அவர்கள் நான்கணாவுக்கு 1330 குறளையும், அந்தக் குறளைப்பற்றி மற்ற கவிஞர்களின் கருத்தையும் இணைத்து வெளியிட்டார்கள். அந்தக் காலத்தில் நாலணா விற்கு புத்தகம் என்பதே மிகவும் அரிது. மிக அழகாக அய்யா அவர்கள் வெளியிட்டார்கள். அப்பொழுது விடு தலைக்கு நிர்வாகியாக என்னுடைய ஆசிரியர் திராவிட மணி அவர்கள்தான் இருந்தார்கள்.
அப்படி வெளியிட்டபொழுது, அய்யா அவர்கள் ஒரு கருத்தை சொன்னார்கள். விலை அதிகமாகப் போடக் கூடாது; மக்கள் மத்தியில் இது அதிகமாகப் போகும் என்று திராவிடமணி அவர்களிடம் கேட்டார்கள்.
நாலணாவிற்கு நாம் கொடுத்தால், கொஞ்சம் கைப்பொறுப்பு வரும் என்று சொன்னார். கைப்பொறுப்பு வராமல் செய்வதற்கு என்ன வழி என்று கேட்டீர்களா? என்றார் அய்யா. உடனே திராவிடமணி அவர்கள் யோசித்தார்கள், தயக்கம் காட்டினார்கள். அய்யா அவர்களுக்கு அச்சுக் கலையினுடைய நுட்பம் மிக நன்றாகத் தெரியும். டபுள் கிரவுன் என்றால் என்ன - டபுள் டம்மி என்றால் என்ன - என்பது பற்றி தெரியும்.
அய்யா அவர்கள் விடுதலை அச்சிடும் தாளை எடுத்து வரச்சொன்னார். அந்தத் தாளை கையில் வைத்துக் கொண்டு, இதை நம் அச்சகத்திற்குத் தகுந்தமாதிரிதானே வெட்டி பயன்படுத்துகிறீர்கள். அந்த வெட்டிய பகுதியை திருக்குறளுக்குப் பயன்படுத்துங்கள்; அப்படிப் பயன்படுத்தினால், புத்தகமும் சிறியதாக இருக்கும். அப்படி அச்சடித்தால், நமக்கு அடக்கம் எப்படி வருகிறது என்பதை கணக்குப் போட்டு பாருங்கள் என்றார்.
அப்பொழுதுதான் எங்கள் ஆசிரியர் திராவிடமணி அவர்களுக்கு விளங்கிற்று. அவர் அந்த அச்சுத் துறைக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான் அந்தப் பணிக்குச் சென்றார். அதற்குமுன்பு கடலூரில் இருந்தார்.
அய்யா சொன்னவுடன், அவர் கணக்குப் போட்டு மூன்றரை அணா ஆகிறது என்பதைச் சொன்னார்.
உடனே அய்யா அவர்கள், பரவாயில்லை; நமக்கு அரை அணா லாபம் இருக்கிறது என்றார். திருக்குறளை பரப்பவேண்டும் என்று அய்யா நினைத்தார்.
வள்ளுவர் செய் திருக்குறளை
மறுவறநன் குணர்ந்தோர்கள் உள்ளுவரோ
மனுவாதி ஒரு குலத்துக் கொரு நீதி
என்ற இந்த நிலை, இன்றைக்கும் திருக்குறள் ஏன் தேவை என்பதற்கு இதைவிட தேவையானது சுந்தரம் பிள்ளையிலிருந்து நம்முடைய அறிவாசன் தந்தை பெரியார் அவர்கள் விளக்கத்திலிருந்து இன்றைய நம்முடைய தலைவர்கள், பேராசிரியர்கள் இங்கே இருக்கக் கூடியவர்கள் வரையில் திருக்குறள் நெறி என்பது தேவையான ஒன்று.
திருக்குறள் மக்கள் சந்தைக்கு வந்தது எப்படி?
திருக்குறள் இன்றைக்கு எல்லோருக்கும் பயன்படுகிறது. இன்றைக்கு எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது என்றால், புலவர்கள் வீட்டு அலமாரிக்குள் இருந்த இந்தத் திருக்குறள் பொதுமக்கள் சந்தைக்கு வந்தது என்று சொன்னால், அய்யா அவர்களுடைய முயற்சி என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள்.
இப்பொழுது திருக்குறள் எல்லோருக்கும் பயன்படு கிறது.  ஏன்? இன எதிரிகளுக்கும் பயன்படுகிறது. எனவே, திருக்குறளைப் பரப்பவேண்டிய கட்டம் தாண்டி, திருக்குற ளைப் பாதுகாக்கவேண்டிய கட்டம் இப்பொழுது வந்திருக் கிறது என்பதுதான் மிக முக்கியமானது.
வடக்கே இருந்து ஒருவர் தூண்டிலோடு வருகிறார்; அந்தத் தூண்டிலிலே திருக்குறள் தொங்குகிறது. அதனைக் கண்டு பல பேர் ஏமாந்துவிடுகிறார்கள்.
திருக்குறள் வர்ணதர்ம நூலாம்!
திருக்குறளை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்; யாரெல் லாம் பயன்படுத்தலாம்; எல்லோருக்கும் பொதுவானது  என்று சொன்னார்கள். நம் இன எதிரிகளுக்கும் சேர்த்துத் தானே என்ற அளவிலே அவர்கள் பயன்படுத்திக் கொண்டி ருக்கிறார்கள்.
இன்னொன்றை இங்கு சொல்லவேண்டும், ஆர்.எஸ். எஸ். அமைப்பு, மதவெறி அமைப்பு எவ்வளவு தீவிரமாக இப்பொழுது இயங்கிக் கொண்டிருக்கிறது; எவ்வளவு பெரிய அறைகூவலை விடுத்துக் கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த ஆர்.எஸ்.எஸ்.யினுடைய கொள்கை வகுப்பாளராக இருந்தவர், அவர்களால் குருஜி என்று அழைக்கப்பட்ட கோல்வால்கர். அந்தக் கோல்வால் கர் எழுதிய புத்தகம் ஆங்கிலத்தில் ஙிஸீநீலீ ஷீயீ ஜிலீஷீரீ என்ற புத்தகமாகும். அது தமிழில் ஞானகங்கை என்று மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.
அந்தப் புத்தகத்தில் திருக்குறளைப்பற்றி எழுதியிருக் கிறார் கோல்வால்கர். திருக்குறள் ஒரு அற்புதமான இந்து தர்மத்தை, வருண தர்மத்தைப் பாதுகாக்கும் ஒரு நூல்.
திருக்குறள் ஒரு இந்து தர்மத்தை, வருண தர்மத்தைப் பாதுகாக்கின்ற ஒரு நூல் என்று சொல்லியிருக்கிறார். நூலெல்லாம் இப்பொழுது திருக்குறளைத் தேடிக் கொண்டி ருப்பது ஏன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
பாதுகாக்க வேண்டும்
எனவேதான், இன்றைக்கு நாம் திருக்குறளைப் பரப்பு வது ஒரு கட்டம் தாண்டியது; திருக்குறளைப் பாதுகாக்க வேண்டும்; திருக்குறளுக்கு மட்டுமா? பெரியார் கொள் கைக்கும் அதே நிலைதான். பெரியார் கொள்கையைப் பரப் பிய காலம் மாறி, பெரியார் கொள்கையைப் பாதுகாக்க வேண்டும் என்கிற காலமும், இப்பொழுது தேவையும் ஏற்பட்டிருக்கிறது.
இந்தக் காலகட்டத்தில்தான், இந்தக் கொள்கைக்கு, இந்தத் தடுப்புக்கு, நமக்கெல்லாம் பேராசிரியராக இருந்து, தமிழகத்தின் முதல் பேராசிரியரின் தந்தை பெரியாருக்கு அடுத்து, இனமானப் பேராசிரியராக என்றைக்கும் திகழ்ந்து கொண்டிருக்கின்ற எங்கள் அருமைப் பேராசிரியர் அவர்களே, நீங்கள் உங்கள் கருத்துகளை சிறப்பாகத் தாருங்கள். நாங்கள் எப்பொழுதும் உங்களைப் பின்பற்ற, உங்கள் சொற்களைக் கேட்க, உங்களால் மிகப்பெரிய அளவிற்குத் தன்மான உணர்வு பெற்ற அனைவருமே அதை ஏற்க என்றைக்கும் தயாராக இருக்கிறோம். உங்கள் இருவருக்கும் நன்றி!
நீங்கள் கொஞ்சம் உடல்தளர்ந்திருந்த நிலையில், நாங்கள் இந்த விழாவிற்காக தேதி கேட்டபொழுது, பெரியார், அண்ணா விழா என்றால், எனக்கு உடல் நன்றாக இருக்கும். நான் வந்துவிடுவேன் என்றுதான் எங்களிடத்தில் தெளிவாக இனமானப் பேராசிரியர் அவர்கள் சொன்னார் கள். ஆகவே, அவர்களுக்கு, அவ்வையார் அவர்களுக்கு, எல்லோருக்கும் நன்றி!
இந்நூலை வாங்கிப் படியுங்கள்! பரப்புங்கள்!! பாது காத்துக் கொள்ளுங்கள்!!! திருவள்ளுவரைப் பாதுகாப்போம், பரப்புவோம் என்பதை தாண்டி, வள்ளுவரைப் பாதுகாப் போம் என்று குரல் கொடுங்கள்! தூண்டிலைக் கண்டு ஏமாறாதீர்கள்! எச்சரிக்கை என்று கூறி முடிக்கின்றேன்.
நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்! வளர்க வள்ளுவர் அறம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

0 comments: