இந்து மதத்தால் ஏற்பட்ட விபரீதம்!
கிறிஸ்தவ மதத்திலும் ஜாதி வேறுபாடா?
உயர்நீதிமன்ற மதுரை கிளை சுட்டிக்காட்டி கண்டனம்
கிறிஸ்தவ மதத்திலும் ஜாதி வேறுபாடா?
உயர்நீதிமன்ற மதுரை கிளை சுட்டிக்காட்டி கண்டனம்
மதுரை, ஜூலை3_ ஜாதீய முறைகளினால் ஏற்பட்டுவரும் கொடுமை கள் மனிதன் செத்த பிற கும்கூட விட்டபாடில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ஆழ்ந்த வேதனையைத் தெரிவித்துள்ளது.
இந்து மதத்திலிருந்து வெளியேறி கிறித்துவத்தில் சேர்ந்த பிறகும்கூட ஒவ் வொரு ஜாதியினருக்கும் வெவ்வேறான சுடுகாடு களைக் கோருகின்ற அவல நிலை உள்ளது. சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் எஸ்.மணிக் குமார் மற்றும் ஜி.சொக்க லிங்கம் ஆகியோரைக் கொண்ட டிவிஷன் அமர்வு முன்பாக பொதுநல வழக்கு நேற்று (2.7.2015) விசாரணைக்கு வந்தது. திண்டுக்கல் வட் டத்தைச் சேர்ந்த ஏ.வெள ளோடு கிராமத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் மற்றும் பெந்தகோஸ்தே பிரிவு கிறித்தவர்களுக்கும் இடையே பிரச்சினைகள் இருப்பதாக அவ்விரு பிரிவினருக்கும் என தனித்தனியே சுடுகாடுகள் கோரி பொதுநலவழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கில் நீதிபதி கள் குறிப்பிடும்போது, கிறித்துவத்தில் ஜாதீய முறை கிடையாது. இந்து மதத்தில் உள்ளதும், அதன டிப்படையில் பழக்கங் களின் அடிப்படையில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஜாதீய முறை கிறித்துவத் திலும் ஊடுருவிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
கிறித்துவ பைபிள் இவைகளை அனுமதிக் கிறதா என்பதுதான் ஆச்ச ரியமாக இருக்கிறது. அதற்கு காரணமான ஜாதியை பெருமையின் அடையாளமாக பார்க் கிறார்கள். ஜாதீயமுறைகளால் செத்த பிறகும் தனித்தனி இடங்களுக்காகப் போரா டும் நிலை ஏற்பட்டுள்ளது குறித்து நீதிபதிகள் வேதனையை வெளிப் படுத்தினார்கள்.
சட்டப்படியான நடை முறைகள் இருந்தபோதி லும், வருவாய்த்துறை அலு வலர்கள் சமாதானக் கூட் டங்களை நடத்துவதற்கு தள்ளப்படுகின்றனர்.
நீதிபதி எஸ்.மணிக் குமார் கூறும்போது, வாழும் காலங்களில் மக்கள் பழமைகளின் பெயரால், தனிப்பட்ட வகையிலும், சொத்து களுக்காகவும் இன்னும் மற்றவைகளுக்காகவும் பல்வேறு உரிமைகளுக் காகப் போராடிவருகின்ற னர். ஆனால், எங்களுக்கு வேதனையெல்லாம் அவர்கள் இறந்தபிறகும் அவர்களைப் புதைக்க வேண்டிய இடத்துக்காக வும் போராட்டம் தொடர் கிறது என்பதுதான். கல் லறைகள் அமைதியான இடங்களாக இருக்க வேண்டியவை. இறந்தபிறகு நாம் விரும்புவதுகூட அமைதியாக ஓய்வெடுக்க வேண்டும் என்பதுதான். ஆனால், உண்மை நிலை, இந்த வழக்கில் உள்ள சூழ்நிலைப்படி பார்க்கும் போது, மனிதன் உயிருடன் இருக்கும்போது மட்டு மன்றி இறந்தபிறகும்கூட அமைதியே இல்லாமல் இருப்பதைத்தான் பார்க்க முடிகிறது என்று குறிப் பிட்டுள்ளார்.
அமர்வில் நீதிபதிகள் மேனாள் நீதிபதி கே.சந்துரு எடுத்துக்காட்டிய 1956ஆம் ஆண்டில் வெளியான ரம்பையின் காதல் தமிழ்த் திரைப்படப் பாடல் சமரசம் உலாவும் இடமே.... 2008ஆம் ஆண்டு வழக்கில் முடிவாக அவர் அளித்த தீர்ப்பில், குறைந்தபட்சம் இந்த உலகைவிட்டு நீங்கும் போதாவது ஒற்றுமை உணர்வு இருக்க வேண் டும் என்பதை சுட்டிக் காட்டினார்கள். மேலும் மதுரை தத்தனேரி சுடு காட்டுப்பகுதியில் வெவ் வேறு ஜாதியினருக்கு வெவ்வேறு சுடுகாடுகள், புதைக்கும் இடங்கள் என்று சமூக பாகுபாடு களுக்கு இடமில்லாமல் மதுரை மாநகராட்சி அலுவலர்கள் செயல் படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே இவ்வழக்கில், திண்டுக்கல் வருவாய்த்துறை கோட் டாட்சியர் சமாதானக் கூட்டத்தில் எடுத்த முடி வாகிய பெந்தகோஸ்தே பிரிவினருக்கான சுடுகாட் டுக்கான தனி இடத்தை, அரசமைப்புகூறும் சமத் துவம் மற்றும் சகோதரத் துவம் ஆகிய இலட்சியங் களின்படி மாவட்ட ஆட்சியர் முழுமையான தீர்வு காணும்வரை தற் காலிகமாக மட்டுமே பயன் படுத்திக் கொள்ள வேண் டும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட் டுள்ளனர்.
மேலும் அமர்வின் சார்பில் நீதிபதிகள் குறிப் பிடும்போது, மதத் தலைவர்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வதெல்லாம் உங்கள் கூட்டங்களில், அறிவுரைகளில் சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சகோதரப் பாசங்களை எடுத்துக்கூறுங்கள் என்பது தான் என்று குறிப்பிட் டுள்ளார்கள்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குமழைக்காக பூஜை செய்ய உத்தரவிடுவதா?
- கடவுள், மதங்களுக்குக் கல்தா! இவற்றில் நம்பிக்கையற்றவை உலகில் 11 நாடுகள்
- மதத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய பகுத்தறிவுவாதிகளே, சமதர்மவாதிகளே முன்வருக!
- மோடி, அமித்ஷா என்ற இரு சர்வாதிகாரிகளிடம் நாடு அகப்பட்டுக் கொண்டு சீரழிகிறது!
- 8 தமிழர்களை கொலை செய்த சிங்கள ராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை கொழும்பு உயர்நீதிமன்றம் உத்தரவு
No comments:
Post a Comment