Total Pageviews

Friday, July 3, 2015

முஸ்லீம் இளைஞரின் கைகளை கட்டி தாக்கிய கொடுமை!!

சிறுபான்மையினருக்கு பிஜேபி ஆட்சியில் பாதுகாப்பே இல்லையா! முஸ்லீம் இளைஞரின் கைகளை கட்டி தாக்கிய கொடுமை!!
மீரட், ஜூலை.3_ பஜ்ரங்தள் எனும் இந் துத்துவா மத வெறி அமைப்பைச் சேர்ந்த கும்பல் முசுலீம் இளைஞ ரின் கைகளை பின்புற மாகக் கட்டிவைத்து விட்டு துரத்திதுரத்தி சரமாரியாகத் தாக்கி உள்ளது. பெருந்திரளான மக்கள்முன்பாக பொது இடத்தில் அனைவரும் கண்டு கொதிப்படையும் வகையில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தை பலரும் காட்சிப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட் டுள்ளனர். மூன்று பாகங் களாக அந்தப் படக் காட்சி இணையத்தில் உலா வந்து அனைவரை யும் நெஞ்சுபதைக்கச் செய்துள்ளது. 27.6.2015 அன்று இணையத்தில் மூன்று பாகங்களாக  பதிவேற்றப்பட்ட படக் காட்சிகளைப் பார்த்தவர் களில் ஆயிரக்கணக்கான வர்கள் பகிர்ந்தும் உள்ள னர்.
சமூக வலைத்தளங்க ளில் இதுகுறித்து பல் வேறு தரப்பினரும் தங் களின் கருத்துகளைப் பதிவுசெய்து விவாதித்து வருகின்றனர். முசுலீம்கள் மீதான கலவரங்களால் பாதிக்கப்பட்ட ஷாம்லி மாவட்டப் பகுதியில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
மூன்றாவது பாகமாக உள்ள காட்சிப் பதிவில் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறும் போது, "இறைச்சிக்காக மாண்டி பகுதியில் பசுக் களைக் கொன்று வரு கிறார். அவர் ஒரு பசுக் கொலைகாரர். நாங்கள் என்ன சொல்லுகிறோம் என்பதை கவனிக்க வேண்டும். பசுவைக் கொல்பவர்கள் வேறு யாராக இருந்தாலும் அவர்களையும் இப்படித் தான் நாங்கள் தாக்கு வோம்" என்று கூறியுள் ளார். இப்படிக்கூறிய அவர்தான் தன்னுடைய பெல்ட்டால் பொது இடத்தில் பெருந்திர ளான மக்கள்கூடியிருந்த கடைகள் நிறைந்த வணி கப் பகுதியில் முசுலீம் இளைஞரை சரமாரியா கத் தாக்கியவர் ஆவார்.
தாக்கப்பட்ட முசுலீம் இளைஞரின் பெயர் ரியாஸ் என்று பிறகு தெரிய வந்தது. அவர் கைகள் பின்னால் கட்டப் பட்டு தாக்கப்பட்டதில் கைகள், உடல்பகுதிகள் முழுவதும் இரத்தமாக இருந்தது. அவர் உடுத்தி யிருந்த ஆடைகளும் கிழிக்கப்பட்டிருந்தன.
இரண்டாவது பாக மாக உள்ள படக்காட் சிப் பதிவில் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த வேறு ஒருவர் கூறும் போது, "அவர் ஏற்கெ னவே இரண்டுமுறை பசுக்களைத் திருடி உள் ளார். அவரைப் போன்ற வர்கள்மீது காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆகவே காவல்துறையின் வேலையை நாங்களே எடுத்துக்கொண்டு செய்கி றோம் என்று அந்த படக்காட்சிப்பதிவில் கூறியுள்ளார். மேலும், தாக்கப்பட்ட ரியாஸ் எனும் முசுலீம் இளைஞரி டம் எச்சரிக்கும் விதமாக இனிமேல் ஷாம்லி மாவட்டத்துக்குள் எங்குமே எப்போதும் காணமுடியாதபடி வெளியேறிவிட வேண் டும்" என்று மிரட்டியுள் ளார். அந்தக் காட்சியும் பதிவாகி உள்ளது.
படக்காட்சியைப் பதிவு செய்தவர் தாக்கப்பட்ட இளைஞர் ரியாசிடம், 'உங்கள் பெயர் என்ன?' 'நீங்கள் என்ன செய்து வருகிறீர்கள்?' என்று கேட்டபோது, ரியாஸ் பதிலளிக்கும்போது, "என்னுடைய பெயர் ரியாஸ். நான் ஷாம்லி பகுதியில் வசித்துவருகி றேன்.  நான் பசுக்களைக் கொல்பவன் அல்ல. என் னிடம் உள்ள கால்நடை களுக்கு தீவனம் வாங்கு வதற்காக வந்தபோது, சிலர் குறிப்பிட்ட இடத் துக்குச் சென்றால், தீவ னம் கிடைக்கும் என்று கூறினார்கள். அங்கு சென்றபோது என்னை கீழே உட்காரச் சொன் னார்கள்.  நானும் கீழே உட்கார்ந்தேன். அதன் பிறகே என்னை பசு மாட்டைக் கொல்வதாகக் கூறி பிடித்து இழுத்துச் சென்றனர்" என்று கூறி யுள்ளார்.
காட்சிப் பதிவுகளின் கடைசியில் காவல் துறை யினர் அந்தப் பகுதிக்கு வந்தனர். ரியாசைத் தாக் கியவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக ரியாசைக் கைது செய்தனர்.
இந்தப் பிரச்சினையில் ஷாம்லி காவல்துறை யினர் ஒருவருக்கொருவர் முரண்பாடாகவே கூறி வருகின்றனர். மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் விஜய் பூஷன் கூறுகையில், "தாக்கியவர் களைக் கைது செய்து விசாரணை செய்து வரு கிறோம். அவர்கள்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள் ளது" என்று கூறியுள் ளார். அதேநேரத்தில், ஷாம்லி மாண்டி காவல் நிலையத்தில் "இந்த பிரச்சினை தொடர்பாக எந்த அமைப்பைச் சேர்ந் தவர்களும் கைது செய் யப்படவில்லை" என்று காவல்துறையின் ஷாம்லி மாண்டி காவல்நிலைய அலுவலர் ஆர்.வி.சிங் குறிப்பிட்டுள்ளார்.
ரியாஸ்மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 379 மற்றும் 411 ஆகிய பிரிவுகளின்கீழ் கால்நடைகளைக் கடத் தியது தொடர்பாகவும், 25.6.2015 அன்று விலங்கு களைக் கொடுமைக்குள் ளாக்கும் பிரிவு 3/11-ன் கீழ் அளிக்கப்பட்ட புகாரின் பேரிலும், வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரியாஸ் காவல்துறையினரின் விசாரணையில் உள்ளார். அதேபோல், தாக்கியவர் கள்மீது இந்திய தண் டனைச் சட்டப்பிரிவுகள் 147(கலவரம் செய்வது) 321 (காயப்படுத்தியது) மற்றும் பிரிவு 504 (பொது அமைதியை சீர்குலைக்க முயன்றது) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. விவேக் பிரேமி, அனுஜ் பன்சால், சந்தீப் கார்க், ஆஷுமான் தேவ், சச்சின் கார்க் மற்றும் தீபு கிரி ஆகி யோர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை என்று என்னால் கார ணம் கூறமுடியாது. அந்த சம்பவ இடத்துக்கு இது வரையிலும் நாங்கள் செல்லவில்லை. ஷாம்லி கோத்வாலி காவல் நிலை யத்திலிருந்து காவல் துறையினர் அங்கு சென் றார்கள்.
கோத்வாலி காவல்நிலைய ஆய்வாளர் பி.பி.சிங் கூறும்போது மாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி தான் சம்பவ பகுதி என் றார். இந்தப் பிரச்சினை பெரிதாக வெடித்துள்ளது.  பஜ்ரங்தள் அமைப் பின் உத்தரப்பிரதேச மாநில அமைப்பாளர் பால்ராஜ் தங்கர் என்ப வர் கூறுகையில்,   எங்கள் அமைப்புக்குப் போட்டி யாக உள்ள வேறு அமைப் பைச்  சேர்ந்தவர்கள்   இந்த காட்சிப்பதிவு களை உருவாக்கி உள்ள னர். அதேநேரத்தில் பசுக் கொலையை நாங்கள் மிகவும் கடுமையாக எதிர்க்கிறோம். யாராவது ரத்தம் தோய்ந்த கைகளு டன் இருப்பதைக் கண் டால், கும்பலாக இருக் கும்போது எவரும் கோபாவேசத்துடன்தான் இருப்பார்கள் என்று கூறினார்.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: