- சுநந்தா கே டட்டா-ரே
பிரதமர் நரேந்திர மோடி வாய் திறந்து பேசியே ஆகவேண்டும் என்ற நிலை வந்துவிட்டது. லலித் மோடியின் செயல்களுக்கு நரேந்திர மோடியும் உடந்தையாக இருந்தார் என்று எவர் ஒருவரும் அவர் மீது குற்றம் சாட்ட வில்லை. அல்லது லலித் மோடியின் செயல்கள் நேர்மையற்றவை, சட்டத் திற்குப் புறம்பானவை என்று கூட எவரும் குறிப்பிட்டுக் கூறவில்லை. எந்த கருத்தையும் நாட்டின் பிரதமர் வெளிப் படுத்தாமல் அமைதி காப்பதினால் நாடு முழுவதிலும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் ஊகங்களிலிருந்து,, சர்வதேச யோகா நாள் எனும் கேளிக்கை நிகழ்ச்சியினால் கூட, கவனத்தை திசை திருப்ப இயலவில்லை.
ஆற்றல்மிகு சுயநல சக்திகள் சட்டத் திற்குப் புறம்பான, ரகசியமான முறை யில் ஒருங்கிணைந்து செயல்படுவது, இன்னொரு நெருக்கடி நிலை வருவ தற்காக உள்ள வாய்ப்புகளை புறக் கணித்துவிட முடியாது என்று எல்.கே. அத்வானி கூறியதை நினைத்துப் பார்க்கச் செய்கிறது. நரேந்திர மோடி உடனடியாகத் தெளிவுபடுத்தியாக வேண்டிய இரண்டு செய்திகள் தற்போது அவரை எதிர் கொண்டுள்ளன. லலித் மோடியை இந்தியாவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற இந்திய அரசின் நிலைப்பாடு இருந்தபோது, அவர் அய்ரோப்பாவில் பயணம் செய்வதற்கு பா.ஜ.க. அரசு உதவி செய்தது என்பது முதலாவது.
விரும்பத்தகாத சில சக்திகளின் நற்பெயரைக் கெடுக்க மேற்கொள்ளப் பட்ட உட்கட்சி முயற்சிகள்; இரண் டாவது. பழைய காங்கிரஸ் கட்சியில் இருந்த கட்சித் தலைமை (ஹை கமாண்ட்) என்பது போன்ற பெயரள வுக்கான ஜனநாயக நடைமுறையும் கூட இல்லாத, ஒரே ஒரு மனிதரால் நடத்திச் செல்லப்படும் அமைப்புக்கும் (பா.ஜ.க.) எந்த நற்பெயரையும் அது வாங்கித் தந்துவிடாது. நரேந்திர மோடியின் அனுமதி இன்றி பா.ஜ.க. யில் ஒரு ஈ கூட நகர முடியாது என்பதுதான் அக் கட்சி பற்றி பொதுமக்கள் கொண்டுள்ள கருத்தாகும்.
கிரிக்கெட் விளையாட்டிலும் அதன் துணை நடவடிக்கைகளிலும் எனக்கு அதிக ஆர்வம் இல்லாத காரணத்தால், லலித் மோடி அப்படி என்ன குற்றத் தைத்தான் செய்துவிட்டார் என்பதை முழுமையாக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், அவ ரது பாஸ்போர்டை ரத்து செய்ய அர சுக்கு போதுமான நியாயமான கார ணங்கள் இருந்திருக்கக்கூடும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவரை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு இங்கிலாந்து நாட்டின் உதவியையும் நமது அரசு கேட்டிருந்தது என்பதையும் நானறிவேன். முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு லலித் மோடியின் மீது கொண்டிருந்த தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காரணங் களுக்காக மேற்கொள்ளப்பட்ட நட வடிக்கைகள் அல்ல;
இந்திய அரசி னால் மேற்கொள்ளப்பட்ட செயல்பா டுகள் என்றே கருதப்படுபவையாகும் அவை. பிரதமர் நரேந்திரமோடியும் அவரது அயல்துறை அமைச்சரும் அவற்றிற்குக் கட்டுப் பட்டவர்களே ஆவர். முந்தைய அரசின் முடிவுகளோடு கருத்து வேறுபாடு கொண்ட காரணத் தினால் அயல்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அச்செயல்பாடுகளை சட்டப் படி மாற்றியமைக்க முயன்றிருந்தால், அதனை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அதற்கு மாறாக, லலித் மோடிக்காக சலுகைகள் செய்யக் கேட்டு அவர் இங்கிலாந்து அரசை ரகசியமாக அணுகியுள்ளார்.
சட்டத்திற்குப் புறம்பான இத்தகைய செயல்பாடுகளைப் பற்றி நரேந்திர மோடி அறிந்தும் இருக்கலாம்; அறியா மலும் இருக்கலாம். தனது மற்றும் தனது அரசின் நம்பகத்தன்மையை நிலை நாட்டிக் கொள்வதற்காக நரேந் திரமோடி தெளிவு படுத்தி விளக்கம் அளிக்கவேண்டிய ஒரு செய்தியாகும் இது. சுஷ்மா ஸ்வராஜின் செயல்பாடு களை ஓர் இங்கிலாந்து நாட்டு செய் தியிதழ் வெளிப்படுத்தாமல் போயி ருந்தால், நமது நாடு இதனைப் பற்றி அறிந்து கொள்ளவே இயலா மல் போயிருக்கும் என்பது மட்டுமே நாமனைவரும் அறிந்திருப்பதாகும். தான் மனிதாபிமான முறையில் செயல்பட்டதாக இப்போது சுஷ்மா தனது செயலுக்கு நியாயம் கற்பிக்க முயல்கிறார். பா.ஜ.கட்சியின் நற்பெய ரைப் பற்றிய கவலையை மட்டுமே கொண்டிருக்கும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சுஷ்மாவுக்கு ஆதரவாகப் பேச பாய்ந்து வருவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இதற்கு ஆதரவு தர அருண்ஜேட்லி ஓடி வந்ததைப் பார்த்து நான் அதிர்ச்சி யடைந்துபோனேன்.
நேர்மை, நியாயத்துக்குக் கட்டுப்பட் டவர் என்று அறியப்பட்டுள்ளவர் அருண் ஜேட்லி. எந்தச் செயல்பாட் டையும் நியாயப்படுத்தி, ஆதரவளித்து, பாதுகாப்பதில் புகழ் பெற்றவர் அவர். அரசாட்சி என்பதன் கொள்கைகள் மற்றும் மதிப்பீடுகளின் முக்கியத்துவத் தையும், நாகரிக சமூக அமைப்புகள் மற்றும் அவற்றின் நடைமுறைகளின் புனிதத்தன்மையின் மீதே அவை சார்ந்திருக்கின்றன என்பதையும் அவர் கட்டாயமாக அறிந்தே இருக்க வேண் டும்.
குற்றம் குறையே கூற இயலாத தொழில் நாணயம் கொண்ட வழக் குரைஞரான அவர், தனது சக அமைச் சர் இரண்டு வகைகளில் தவறிழைத் துள்ளார் என்பதையும் அறிந்திருக்கவே வேண்டும். வழக்குரைஞர்களான சுஷ்மாவின் கணவரும், மகளும் லலித் மோடிக்கான வழக்குரைஞராக அவரது வழக்கில் ஆஜராகி செயல்பட்டுள்ள னர். அதற்காக அவர்கள் சம்பளம் பெற்றார்களா இல்லையா என்பதல்ல இப்போதுள்ள கேள்வி. ஒரு நேர்மை யான அமைச்சராக சுஷ்மா தனது நிலையை வெளிப்படையாக அறிவித்து விட்டு, லலித் மோடி விவகாரத்தில் துணிவுடன் விலகியே இருந்திருக்க வேண்டும்.
சுஷ்மா ஸ்வராஜ் இந்த இரண்டை யுமே செய்யவில்லை. அதற்கு நேர் மாறாக, அரசு அமைப்புகள் மற்றும் அவற்றின் நடைமுறைகள், செயல்பாடு களின் முக்கியத்துவம் மற்றும் நியா யத்தன்மை மீது, ஒரு மூத்த அமைச்சராக இருக்கும் தான் கொண்டிருக்கும் எல் லையற்ற வெறுப்பை அவர் வெளிப் படுத்தியுள்ளார். அவர் இவ்விவகாரத் தில் பிடிபட்டது தற்செயலாக நிகழ்ந்த ஒரு நிகழ்வே.
சதித்திட்டக் கோட்பாடுகள் இல்லா விட்டால், இந்தியா இந்தியாவாகவே இருக்க முடியாது. சுஷ்மா ஸ்வராஜை இவ்வாறு சிக்கவைத்ததன் நோக்கமே, 2014 பொதுத் தேர்தலுக்கு முன்னர் பா.ஜ.க.யின் உள்கட்சி விவகாரங்களில் தவறான பக்கத்திற்கு ஆதரவு அளித்து வந்த ஒருவரின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வருவதுதான் என்றும் ஒரு கருத்து தெரிவிக்கப் படுகிறது. இத்தாக்குதலின் முக்கிய இலக்கே சுஷ்மாவை விட அதிக அளவு எரிச்சலூட்டுபவராக இருந்த வசுந் தராராஜேதான் என்ற இதிலிருந்து மாறுபட்ட கோட்பாடு ஒன்றும் இருக்கிறது. லலித் மோடி விவகாரத்தில் சுஷ்மாவை மட்டுமே பாதுகாப்பதன் மூலம், பொதுமக்களின் பேராதரவைப் பெற்றவரும், எளிதில் கவிழ்க்க முடி யாதவருமான ராஜஸ்தான் முதல மைச்சர் மீது எதிர்ப்பாளர்கள் தாக் குதல் நடத்தலாம் என்று அழைப்பு விடப்பட்டிருக்கிறது.
இக்கோட்பாட்டை மேலும் கொண்டு சென்று, சிந்தியா கட்சியிலி ருந்து ஓரங்கட்டப்பட்டுவிட்டால், அவரையடுத்து அயல்துறை அமைச்சர் ஓரங்கட்டப்படும் முறை வந்துவிடும் என்று கூறுபவர்கள் சிலரும் உள்ளனர். யார் அறிவர்? ஆனால், இந்த இரண்டு பெண்மணிகளுமே அரசியல் களத்தி லிருந்து மறைந்த பிறகு, பல்லும் நகமும் பிடுங்கப்பட்ட பீஷ்ம பிதாமகரான அத்வானியை அழைத்து, பெயரளவுக்கு அவரை பிதாமகராகச் செயல்பட அழைப்பு விடுக்கும் தன்னம்பிக்கையை மோடி பெறுவார். பின்னர் அத்வானி யும் அவரது முறை வரும்போது, மகாபாரத பீஷ்மர் போல ஆணிகளின் படுக்கையில் விழவேண்டியதுதான்.
சிக்கல் நிறைந்ததும், எளிதில் புரிந்து கொள்ள முடியாததுமான பா.ஜ.கட்சி அரசியலில் மூழ்கி உள்ளவர்களால் மட்டுமே, இத்தகைய சதித் திட்டக் கோட்பாடுகள் பற்றிய எந்த ஓர் ஊகத்தையும் தெரிவிக்க முடியும். ஆனால், சுஷ்மா என்ன செய்ய உத்தே சித்திருக்கிறார் என்பதை முற்றிலுமாக அறியாதவர்களாகவே சுஷ்மாவின் எஜமானர்கள் இருக்க மாட்டார்கள் என்றே வெளியாட்களுக்கு நன்றாக தெரிகிறது. இக்கதையில் சுஷ்மா ஸீஸர் என்றால், நரேந்திர மோடியே ஸீஸரின் மனைவியாவார். எனவே அவர் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். அவர் இது பற்றி வாய்திறந்து பேசாதவரை, சந்தேகத் திற்கு அப்பாற்பட்டவராக அவரால் இருக்க முடியாது.
இதில் அடங்கியுள்ள மாபெரும் செய்தி என்னவென்றால், அது ஒரு கட்சியையோ அல்லது ஒரு தனிப்பட்ட நபரான லலித் மோடியின் சமூக நிலையை மட்டுமே பாதிப்பதாக இல் லாமல், ஒட்டுமொத்த நாட்டையும் பாதிக்கிறது என்பதாலேயே அது மாபெரும் செய்தியாக விளங்குகிறது, இதில் அயல்துறை அமைச்சர் மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் மட்டுமே சம்பந்தப்பட்டிருப்பவர்களாகத் தோன்றவில்லை; இந்திய குடியரசுத் தலைவர், ப.சிதம்பரம், சரத்பவார், சஷிதரூர், மும்பை காவல்துறை ஆணை யரும், இன்னும் யார்யாரெல்லாமோ சம்பந்தப்பட்டிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.லலித் மோடியின் சவடாலையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். அரசு நடை முறைகள் மற்றும் பாரதநாடெனும் இந்தியாவின் பெருமையை விட பணத்துக்கும், மக்கள் தொடர்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவது விந்தை யாகவே தோன்றுகிறது.
முன்னொரு சமயம் கருப்பு சந்தைக்காரர்கள் மீது ஒரு சமூகப் புறக்கணிப்பைக் கொண்டு வர இந்திரா காந்தி திட்டமிட்டார். வி.பி.சிங்கோ ஒரு படி மேலே சென்று அவர்களை நாடுகடத்தவேண்டும் என்றார். இந்தியாவில் நிலவும் நிதர்சன, உண்மை நிலையை, இருவருமே அறிந்திருக்க வில்லை. லலித் மோடி விவகாரத்தில் தன்னை குற்றமற்றவராக மெய்ப்பித்துக் கொண்டு நரேந்திரமோடி வெளியே வந்தால், அவர்களைப் போல அவர் கனவுலகில் வாழமாட்டார். ஆனால் அவ்வாறு நரேந்திரமோடி செய்யாத வரை, நரேந்திரமோடியும் சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தராராஜே போன்றே இச்சதிக்கு உடந்தையாக இருந்ததாகவே மக்கள் நினைப்பார்கள்.
நன்றி: டெக்கான் கிரானிகிள்
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- செத்தமொழி சமஸ்கிருதத்திற்கு மோடி அரசு தரும் முக்கியத்துவத்தை பாரீர்
- தமிழும்,தமிழர் முன்னேற்றமும்
- நெருக்கடி நிலை பிரகடனமும், பாஜக., ஆர்.எஸ்.எஸ். தகிடுதத்தமும்
- பாஜக ஆட்சிக்கு எதிராக 8 மாதங்களில் பதவி விலகிய 4 கல்வியாளர்கள்
- யோகா - மூச்சுப் பயிற்சி
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment