ஜூன் 25, 1975. இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை சட்டம் பிரகடனம் செய்யப்பட்டு. நாற்பது ஆண்டுகள் கழிந்துவிட்டன. அய்ம்பது வயதுக் குட்பட்டவர்களுக்கு, இந்த இருண்ட காலத்தின் சமூக, அரசியல் நடப்புகள் இன்று தெரியாது. தமிழ் நாட்டில் திரா விடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும், நெருக்கடி நிலை சட்டத்தால், கடுமையாக பாதிக்கப்பட்ட இயக் கங்கள். முன்னணித் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு, ஓராண்டு கடும் சிறை வாசம் மேற்கொண்டவர்கள் இந்த இயக்கத்தவர். சட்டமன்றத்தில் 183 உறுப்பினர்களைக் கொண்ட தனிப் பெரும்பான்மைப் பெற்ற கட்சியான திமுக, நெருக்கடி நிலையை ஆதரிக் காமல், எதிர்க்கிறது என்பதற்காக, 356-ஆவது பிரிவின் கீழ் ஆட்சி கலைக்கப்பட்டது.
மிசா சட்டத்தை பயன்படுத்தி, பலரும் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, முரசொலிமாறன், மு.க. ஸ்டாலின், ஆற்காடு நா. வீராசாமி போன்றோர் கடுமையாக தாக்கப் பட்டனர். சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும், சிறை யில் கடுமையாக தாக்கப்பட்டு, சிறையில் மாண்டனர்.
ஆளுநர் ஆட்சி என்ற பெயரில் தவே, சுப்ரமணியம் என்ற இரு பார்ப்பனர் களின் கொடுங்கோல் ஆட்சியைத்தான் தமிழகம் சந்தித்தது. விடுதலையில் தந்தை பெரியார் எனப் போடக்கூடாது என சென்சார் செய்யும் அளவுக்கு கட்டுப் பாடுகள் இருந்தன. அந்த இரு பார்ப் பனர்களும் சிண்டை அவிழ்த்து ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. வட நாட்டில் பல தலைவர்கள் கைது செய் யப்பட்டாலும், அவர்களுக்கு இத்தகைய தாக்குதல்கள் நடந்ததாக செய்திகள் இல்லை. பல தலைவர்கள் உடல் நலம் கருதி, பிணை பெற்று வந்துவிட்டார்கள்.
அதில், இன்றைய பாரத ரத்னா வாஜ்பாயும் ஒருவர். அவர் கைது செய்யப்பட்டதும், உடல் நலம் கருதி, இறுதிவரை மருத்துவமனை சிகிச்சை யில் தான் இருந்தார்.
ஏறக்குறைய இருபது மாதம் நெருக் கடி நிலை அமுலில் இருந்த காலத்தில், பெரும்பான்மை மாதங்கள், வாஜ்பாய் பரோலில் வெளியில் இருந்தார். அரசுக்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடு வதில்லை என்ற உறுதிமொழியைக் கொடுத்துவிட்டு, வாஜ்பாய் வெளியில் இருந்தார்.
இவ்வாறு நாம் சொல்லவில்லை; இன்று பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவ ரான சுப்ரமணியன் சுவாமி கூறியதைத் தான் நாம் மேற்கோள் காட்டுகிறோம். இதோடு அவர் நிறுத்தவில்லை.
அன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டு, அதன் அன்றைய தலைவர் பாலாசாகிப் தியோரஸ், ஏர்வாதா சிறையில் இருந்தார். அங்கிருந்து இந்திரா காந்திக்கு பல கடிதங்கள் எழுதினார். ஆர்.எஸ்.எஸ்.க் கும், ஜெயபிரகாஷ் இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், தங்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, இந்திரா காந்தியின் இருபது அம்ச திட்டத்திற்கு முழு ஒத்து ழைப்பு தந்து பாடுபடும் என்று மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார்.
தியோரஸும், வாஜ்பாயும் இவ்வாறு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து நெருக்கடி நிலைக்கு எதிரான இயக்கத்திற்கு முற்றிலும் துரோகம் இழைத்து விட்டார்கள். அப்போதைய மகாராட்டிர சட்டமன்ற நடவடிக்கைகளின் குறிப்புகளில் இந்த செய்திகள் இருக்கின்றன என ஆதாரத் துடன் சொன்னவரும் சாட்சாத் சுப்ர மணியன் சுவாமிதான். ஆதாரம் வேண்டு வோர், ஆங்கில இந்து பத்திரிக்கையில் ஜூன் 13, 2000 அன்று அவர் எழுதிய கட்டுரையைப் படித்து தெரிந்து கொள்ளவும். எந்த தருணத்தில் சுப்ரமணியன் சுவாமி இந்த கட்டுரையை எழுதினார் தெரியுமா? நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்து இரு பத்தைந்து ஆண்டுகள் ஆகிய நிலையில், அதை பாஜக நினைவுபடுத்தி நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்ததைக் கிண்டல் செய்து, சுவாமி இந்த கட்டுரையை எழுதினார்.
இவ்வாறு வாஜ்பாயும், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் மன்னிப்பு கோருவது ஒன்றும் புதிதல்ல. இதே பாரதரத்னா வாஜ்பாய், 1942 வெள்ளையனே வெளி யேறு போராட்டத்தில் கலந்து கொண்ட தியாகி என பீலா விட்டு, அது வடிகட்டின பொய் என்றும், எதேச்சையாக நான் கலவரம் நடந்த பகுதியில் இருந்தேன்; என்னை கைது செய்து விட்டார்கள் என நீதிமன்றத்தில் கடிதம் கொடுத்ததை, பிரண்ட் லைன் ஆங்கில பத்திரிகை (பிப்ரவரி 7-20, 1998) வெளியிட்டு, முக மூடியை கிழித்து விட்டது. அதேபோல், காந்தி படுகொலைக்குப் பின் ஆர். எஸ்.எஸ். இயக்கம் ஒரு முக்கிய காரணம் என்ற அடிப்படையில் பிப்ரவரி 2, 1948-இல் தடை செய்யப்பட்டது. இனி அரசி யல் நடவடிக்கை எதிலும் கலந்து கொள்ள மாட்டோம்; எங்கள் அமைப்பு ஒரு கலாச்சார அமைப்பு என்று ஒரு சட்ட விதி உருவாக்கி, மத்திய அரசுக்கு கடிதம் கொடுத்ததற்குப் பின் தான், ஜூலை 11, 1949-இல் ஆர்.எஸ்.எஸ். மீதான தடை நீக்கப்பட்டது.
இந்த ஆர்.எஸ்.எஸ்., பாஜக பரிவாரங் களால் சுதந்திர போராட்ட தியாகி என பொய்யாக வர்ணிக்கப்பட்டு, நாடாளுமன் றத்தின் மய்ய மண்டபத்தில், காந்தியின் படத்திற்கு எதிராகவே, அன்றைய வாஜ்பாய் அரசால் 2003-இல் படமாக வைக்கப் பட்டுள்ள சவார்க்காரின் வீரத்தையும் சற்று பார்ப்போம்.
இந்த சவார்க்கர், காந்தி கொலையில் தொடர்புண்டு என்று கைது செய்யப் பட்டவர். முறையான ஆவணங்கள் இல்லை என்பதால் விடுதலை ஆனவர்.
சவார்க்கர், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார் என்பதாக அந்தமான் சிறையில் இருந்தவர்; அவர் சிறையில் இருந்து வெளிவர பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்பு கடிதம் எழுதுகிறார். என்னை பிரிட்டிஷ் அரசு, இரக்கத்தோடும், கருணையோடும் விடுதலை செய்தால், இந்த அரசுக்கு வலி மையான ஒரு விசுவாசியாக இருப்பேன்; அரசு என்ன மாதிரி விரும்புகிறதோ, அந்த வகையில் நான் சேவை செய்ய சித்தமாக இருக்கிறேன். என்மீது கருணையை மேன்மை தங்கிய தங்களால் மட்டுமே வழங்க முடியும். ஆகவே, இந்த ஊதாரித்தனமான மகன் பிரிட்டிஷ் அரசான பெற்றோரிடம் செல்லாமல் எங்கு செல்ல முடியும்
இப்படி எழுதி, வெளியில் வந்து, எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் காலத்தை கழித்தவர்தான், இந்த சவார்க்கர். இவர் தான் நாடாளுமன்றத்தில் படமாக வைக்கப்பட் டுள்ளார். இதைவிட அவமானம் நாடாளு மன்றத்திற்கு எதுவாக இருக்க முடியும்?
இந்த குறிப்புகளை சதாத்ரு சென் எழுதி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலில், உள் துறை அமைச்சகத்தின் குறிப்புகளிலிருந்து அதன் ஆசிரியர் மேற்கோள் காட்டியுள்ளார்.
ஆனால், திமுக 1975-இல் நெருக்கடி நிலைப் பிரகடனத்தை கடுமையாக எதிர்த்த நிலையில், இந்திரா காந்தியின் சார்பில் இரு பிரதிநிதிகள், கலைஞரைச் சந்தித்து, நீங்கள் நெருக்கடி நிலையை ஆதரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; மாறாக எதிர்க்காமல் இருந்தால், திமுக ஆட்சி தொடரும் என தெரிவித்தபோது, கலைஞர், தான் பெரியார், அண்ணா ஆகியோரின் மாணவன், எக் காரணத்தைக் கொண்டும் நெருக்கடி நிலையை ஆதரிக்க முடியாது. ஜனநாயகத்திற்கு ஆதரவாகவே திமுக இருக்கும் என உறுதிபட தெரிவித்ததை, ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் (25.6.2015) மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதற்கு முற்றிலும் மாறாக, நெருக் கடி நிலை பற்றி மூச்சு விடாமல் இருந்த கட்சி புரட்சி நடிகராக இருந்து புரட்சித் தலைவரான எம்.ஜி.ஆரின் அதிமுக,
இப்படி, பிரிட்டிஷ் அரசிடம் கைது செய்யப்பட்டால், மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தவர்களும், நெருக்கடி நிலை சட்டத்தின்போது கைது செய்யப் பட்டு மன்னிப்பு கடிதம் எழுதி வெளியே வந்தவர்களுமான, பாஜக, ஆர்.எஸ்.எஸ். கம்பெனி, தற்போது நாற்பாதாம் ஆண்டு நிகழ்ச்சியை நடத்துகிறார்களாம்.
நெருக்கடி நிலைக் காலத்தில் அதை எதிர்த்து இறுதி வரை நின்றவர்கள் யார்? அதற்காக ஆட்சியை இழந்தவர்கள் யார்? அதை எதிர்க்காமல் கட்சியை நடத்தியவர்கள் யார்? கைது செய்யப் பட்டதும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து வெளியே வந்து இன்றைக்கு ஜனநாயகக் காவலர்களாக காட்டிக் கொள்பவர்கள் யார்? இதற்கான வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்ய வேண்டியது நம் கடமை. இதை நாம் சரியாக செய்யாத தினால்தான், மன்னிப்பு கேட்டவர்கள் இன்றைக்கு ஜனநாயகக் காவலர் வேடம் போடுகிறார்கள். தங்களுக்கு சார்பான கருத்துக்களை மட்டுமே பேச வேண்டும்; மாறான கருத்துக்கள் விவாதம் மேற் கொண்டால், வெடி குண்டு வீசுவோம்; ஆட்களை தீர்த்துக் கட்டுவோம் என சொல்லும் ஒரு பாசிசக் கூட்டம், நெருக் கடி நிலையில் ஜனநாயகம் நெரிக்கப் பட்டது என நிகழ்ச்சி நடத்தும் கூத்து இந்தியாவைத் தவிர வேறு எங்கும் நடக்காது.
இன்றைய தலைமுறை, இந்த வரலாற்றை தெரிந்து கொண்டால்தான், எதிர்காலத்தில் ஜனநாயகத்திற்கு நெருக்கடி வந்தால் யார் அதற்கு போராடுவார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.
- குடந்தை கருணா
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- பாஜக ஆட்சிக்கு எதிராக 8 மாதங்களில் பதவி விலகிய 4 கல்வியாளர்கள்
- யோகா - மூச்சுப் பயிற்சி
- லலித் மோடி பற்றி நரேந்திர மோடிக்கு விடப்படும் எதிர்பார்க்க இயலாத கேள்வி
- எழுத்தாளர் பார்வையில்... இந்தியக் குடிசை - (குறுநாவல்)
- இவரை மறக்க முடியுமா?
No comments:
Post a Comment