கிடுக்கிப்பிடியில் பிஜேபி முதல் அமைச்சர்
லலித்மோடி எனது உறவினர் - அவருக்கு அவமானம் என்றால் அது எனக்கும் தான்!
வசுந்தரா ராஜே கடிதம் அம்பலமானது
வசுந்தரா ராஜே கடிதம் அம்பலமானது
லலித்மோடியின் அழைப்பின் பேரில் லண்டன் சென்ற நிதின் கட்கரி, வசுந்தரா ராஜே, ஸ்மிருதி இரானியுடன், லலித்மோடியின் நெருங்கிய நண்பரும், லண்டனில் லலித்மோடிக்கு நிதி உதவிகள் செய்துவரும் விஜய் ஜோலியும் 2011 ஆம் ஆண்டு எடுத்தபடம்
ராஜஸ்தான்
மாநில முதல்வராக உள்ள வசுந் தரா ராஜே 2011-ஆம் ஆண்டு லண்டன் நீதிமன்
றத்திற்கு எழுதிய கடி தத்தை காங்கிரஸ் கட்சியினர் டில்லி யில்
வெளியிட்டனர். இந்தக் கடிதத்தில் லலித் மோடி தனது உறவினர் என்றும் தான்
இந்தியாவில் உள்ள ஒரு மாகாணத்தின் மகா ராணி; லலித் மோடி எனது உறவினர்,
லலித் மோடிக்கு அவமானம் என்றால் அது மகாராணி யான எனக்கும் அவ மானம் தான்
என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கடித்ததின் முழு விவரம் வருமாறு:
இங்கிலாந்தின் நீதி மன்ற ஆவணப் பதிவு களில் இருந்து சண்டே மெயில் என்ற
பத்திரி கைக்கு 2011 ஆகஸ்ட் 18 தேதியிட்ட ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அந்தக்
கடிதத்ததில் முதல் பத்தியி லேயே நான் இந்தியாவின் ஒரு மாநில முதல்வராக
வரும் தேர்தலில் தேர்ந் தெடுக்கப்படப் போகி றேன். ஆகையால், நான் எழுதியுள்ள
இந்தக் கடி தத்தை பொதுப்படுத்தக் கூடாது; இதனால் எனது அரசியல் எதிர்காலம்
பாதிக்கப்படலாம்.
என்று குறிப்பிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர்
எழுதியுள்ளதாவது: விரைவில் இந்தியா வில் ஆட்சி மாற்றம் ஏற்படும்; அப்போது
எங்கள் கட்சி மத்தியிலும், மாநிலத்தி லும் ஆட்சிக்கு வரும்; தற் போது
இருக்கும் காங் கிரஸ் அரசு விரைவில் வீழ்த்தப்படும்; மக்களி டையே நாங்கள்
கடுமை யான பிரச்சாரம் மேற் கொண்டு வருகிறோம். காங்கிரஸ் அரசை மக்கள்
வெறுக்கத் துவங்கி விட்டனர். ஆகையால் தான் இந்தியா முழுவதும் ஆட்சி மாற்றம்
ஏற்படும்.
இந்தியா முழுவதும் தேசியக் கட்சிகள் பலமி ழந்து வருகின்றன.
ஆகை யால் தென் மாநிலங்களில் பாஜகவும் வடமாநிலங்க ளில் காங்கிரசும் வெற்றி
வாய்ப்பை இழக்கும், இருப்பினும் வரும் காலத் தில் பாஜகவின் கைகள்
பலம்பொருந்தி இருக்கும். லலித் மோடி எனது உறவினர், எனது தலை மையில் ஆன
அரசு 2008-ஆம் ஆண்டு தோல்வி அடைந்ததும், லலித் மோடியை உடனடியாக ராஜஸ்தான்
கிரிக்கெட் போர்ட் தலைவர் பதவி யில் இருந்து அரசு நீக்கி விட்டது. இது பழி
வாங்கும் செயலாகும். என் மீது காங்கிரஸ் ஆட்சி யாளர் பொறாமை கொண்டுள்ளனர்.
அவர் களுக்கு எனது உறவினர் கள் முக்கியபதவியில் இருப்பது பிடிக்கவில்லை.
அதன் பிறகு எனது அரசியல் எதிரிகள் லலித் மோடி மீது பொய்யான
குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவரைச் சிறை யில் தள்ள முயற்சி செய் தார்கள்.
தேர்தல் பிரச் சாரத்தின் போது லலித் மோடியின் மீது பொய் யான
குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அதற்கு நான் உடந்தையாக இருப்பது போல் காட்டிக்
கொண் டார்கள். இதன் காரண மாக நான் தோல்வி யடைய நேர்ந்தது. நான்
தோல்வியடைந்த பிறகு அசோக் கெலாட் தலை மையில் உள்ள அரசு எனக்கு எதிரான
அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. என்னை மோசடிக்காரி என்றும் ஊழல்வாதி
என்றும் கூறி வருகிறார்கள்.
லலித் மோடி இங் கிலாந்தின் பிரபல விளை யாட்டான
கிரிக் கெட்டை இந்தியாவில் பிரபலப்படுத்தியவர்களுள் முதன்மையானவர், அய்.
பி.எல். என்னும் கிரிக் கெட்டை கொண்டுவந்து குறுகிய காலத்திலேயே
இந்தியாவில் உள்ள அனைத்து இளைய தலை முறைகளிடம் கொண்டு சேர்த்தவர். இது ஒரு
சாதனையாகும்; லலித் மோடியின் இந்தச் செயல் பாராட்டத்தக்கதாகும். அவர் எனது
உறவினர் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். லலித் மோடியின் மீது எந்த ஒரு
குற்றச்சாட்டும் இந்தியா வில் இல்லை, தற்போது உள்ள பிரச்சினை எல் லாம்
அரசியல் சூழ்ச்சி தான், ஆகையால் அவ ருக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையும்
இங்கி லாந்து நீதிமன்றம் எடுக் கத் தேவையில்லை. இங்கி லாந்து நீதிமன்றம்
தவறு தலாக லலித்மோடி மீது நடவடிக்கை எடுத்தால், அது லலித்மோடியை
அவமானப்படுத்துவது போலாகிவிடும். லலித் மோடிக்கு ஓர் அவமானம் என்றால் அது
ராஜஸ் தானின் மகாராணியான எனக்கும் அவமானம் தான் என்று என்னுடைய
சுயநினைவுடன் ஆங்கி லத்தில் நானே எழுது கிறேன்.
இத்துடன் லலித் மோடி
எங்களது குடும்ப உறவுகள் குறித்த சில ஆவணங்களை இணைத்துள்ளேன். மேலும் அதிக
ஆவணங்களை நான் நேரில் கொண்டு வந்து இங்கி லாந்து நீதி மன்றத்தில்
வழங்குவேன்.
No comments:
Post a Comment