Total Pageviews

Tuesday, June 23, 2015

இந்துத்துவாவும் கிறித்துவத்துவாவும்!


- மின்சாரம்

இந்தியாவில் முசுலிம்கள் எண்ணிக்கை வளர்கிறது - வளர்கிறது - கிறித்தவர்களின் எண்ணிக்கை மளமளவென வளர்கிறது.
இந்துக்கள் எண்ணிக்கை தேய்கிறது - தேய்கிறது - எனவே இந்துக்களே! பிள் ளைகளைப் பெற்றுத் தள்ளுங்கள்  பெற்றுத் தள்ளுங்கள் என்று கூக்குரலிடுவது சங்பரிவார்க் கும்பலின் வாடிக்கையான புத்தி - யுக்தி!
முஸ்லீம்கள் சிறுபான்மையினரே இல்லை என்று முஸ்லீமாக இருக்கக் கூடிய அமைச்சரே கூறக் கூடிய நிலை! பத வியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டு மென்றால் இப்படியெல்லாம் கண்டதை உளறித் தொலைக்க வேண்டும்தான் போலும்!
முசுலிம்களுக்கு ஓட்டுரிமை கொடுக்கக் கூடாது என்பார் ஒரு பிஜேபி எம்.பி., இந்தியாவில் வாழ்பவர்கள் முசுலீம்களாக இருந்தாலும் சரி, கிறித்தவர்களாக இருந் தாலும் சரியே - அனைவரும் ஹிந்துக்கள் தான் என்பார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத்; அரசுக்குச் சொந்தமான வானொலியைப் பயன்படுத்தியே இப்படி எல்லாம் அரட்டைக் கச்சேரி நடத்துவார் அவர்.
இந்து ராஜ்ஜியத்தை அவர்கள் இதுவரை உருவாக்கவில்லை என்றாலும் (அது முடியாது என்பது வேறு விஷயம்!) நடப்பில் அப்படி ஓர் இராஜ்ஜியம் வந்து விட்டதாகவே கருதி ஒரு நினைப்பில் மிதந்து கொண்டுள்ளார்கள்.
இந்தியாவில் குடியிருக்கும் ஒவ்வொரு குடிமகனின் டி.என்.ஏ.வை சோதனை செய்தால் அதில் இந்து டி.என்.ஏ. தான் இருக்கும்; தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை இந்து டி.என்.ஏ. தான் கிடைக்கும். முஸ்லிம் டி.என்.ஏ., கிறிஸ்து டி.என்.ஏ. எல்லாம் கிடையாது - இப்படியெல்லாம் பேசுபவர் யாரோ ஓர் அனாமதேயமல்ல - பி.ஜே.பி. எம்.பி.தான் பெயர் ஆதித்யனாத்.
எங்குப் பேசுகிறார்? எங்கோ புறம் போக்கில் நின்று கொண்டல்ல; பிஜேபி ஆளும் அரியானா மாநிலத்தில் ரோஹதக் நகரில் நடைபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் மாநாட்டில்தான் இப்படி ஓங்கிக் குரல் கொடுத்துள்ளார்.
இந்து டி.என்.ஏ. என்று ஒன்று இருப்பதாக எந்த நாட்டு விஞ்ஞானி கண்டுபிடித்துச் சொன்னான் என்று சொல்லியிருந்தால்கூட அந்த விஞ்ஞானியைத் தேடிக் கண்டு பிடித்து, மேலும் பல விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
பிரதமராக இருக்கக் கூடியவரே உளறல் திலகம் என்றால் (பிளாஸ்டிக் சர்ஜரி உளறல் நினைவிருக்கிறதா) எம்.பி.க்கள் எந்த எல்லைக்குச் சென்றுதான் எகிறிக் குதிக்க மாட்டார்கள்?
இந்துக்கள் பெரும்பான்மையாக இருக் கும் இடத்திலிருந்து சிறுபான்மை மக்களை விரட்டு என்று குரல் கொடுக்கக் கூடிய வி.எச்.பி.யின் தொகாடியாக்களுக்கு இங்குப் பஞ்சமேயில்லை.
இந்த முன்னோட்டத்திற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. அமெரிக்காவிலிருந்து வந்துள்ள தகவல்தான் இது.
அமெரிக்காவில் இந்துக்களின் எண் ணிக்கை கடந்த ஏழு ஆண்டுகளில் இரட்டிப்பாக ஆகியிருக்கிறது. கிறித்தவர் களின் எண்ணிக்கையோ 78 விழுக்காட்டிலி ருந்து 70 விழுக்காட்டாக வீழ்ச்சியுற்றுள்ளது.
இந்தியாவில் உள்ள இந்துத்துவா வாதிகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
இந்தியாவில் இந்துக்கள் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து விட்டது. சிறுபான்மை யினர் எண்ணிக்கை வெள்ளம் பெருகுகிறது - பெருகுகிறது! கரையை உடைத்துக் கொண்டு பெருகுகிறது - நீங்கள் இங்கே இருக்க வேண்டுமானால் இந்துக்களாக மாறுங்கள் - கிறிஸ்துவைக் கும்பிடுவதை விட்டு விட்டு கிருஷ்ணனைக்  கும்பிட வேண்டும்.
ராமபிரானைக் கும்பிட வேண்டும். இந்துக் கலாச்சார மயமாகவே மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூக்குரல் போடும் சங்பரிவார்க் கும்பலே - பிஜேபி பிரமுகர்களே!
இதே குரலை அமெரிக்காவில் உள்ள கிறித்துவர்கள் கிறித்துவத்துவாவாதிகளாக மாறி, அமெரிக்காவில் எண்ணிக்கையில் பெருகி வரும் இந்துக்களைப் பார்த்து, ஒழுங்காக இங்கு அமெரிக்காவில் பிழைக்க வேண்டும் என்றால் கிறித்தவர்களாக மாறுங்கள்,
கிருஷ்ணனைக் கும்பிடுவதைத் தூக்கி எறிந்து விட்டு கிறிஸ்துவை பிரார்த் தனை செய்ய வேண்டும் - என்ன புரிகிறதா? என்று மிரட்ட ஆரம்பித்தால், விரட்ட ஆரம் பித்தால் அமெரிக்கா வாழ் இந்தியர்களின் கெதி என்னாவது?
இவ்வளவுக்கும் இந்தியாவில் வாழும் கிறித்தவர்களோ, முசுலிம்களோ வெளிநாடு களிலிருந்து இந்தியாவுக்குள் வந்து புகுந்து குடியேறியவர்கள் அல்ல. நேற்று வரை கிருஷ்ணனாக இருந்த இந்து இப்பொழுது கிறிஸ்தவராக மாறி இருக்கிறான்.
காலை வரை கார்த்திகே யனாக இருந்தவன் காதர் பாயாக மாறி யிருக்கிறான் அதற்குக் காரணம் இந்து மதத்தின் கீழ்மைக் குணமான அம்சமான தீண்டாமை நோயும் ஜாதி வெறியும் தான் - தன்னைப் பிறப்பிலேயே பிடித்துப் பிடுங்கித் தின்னும் இந்து மதத்திலிருந்து விடுதலை பெற மத மாறினான்.
ஆனால், அமெரிக்காவில் இருக்கும் இந்துக்களின் நிலை என்ன? இந்தியா விலிருந்து அமெரிக்காவுக்குப் பிழைக்கப் போனவன்.
இந்தியாவிலிருந்து இந்துக்கள் அல்லா தாரை விரட்டுவதைவிட கூடுதல் நியாயம் அமெரிக்கக்காரனுக்கு இருக்கிறதா இல் லையா?
அதே போல முஸ்லிம் நாடுகளில் பிழைக்கப் போன இந்துக்கள் எண்ணிக்கை கொஞ்சமா - நஞ்சமா?
இங்கே இருக்கும் முஸ்லிம்மீது நீ கை வைத்தால் இந்தியாவிலிருந்து பிழைக்கப் போன இந்தியர்களின் இந்துக்களின் நிலை என்னாவது என்ற ஒரே ஒரு கணம் எண்ணிப் பார்த்ததுண்டா இந்த இந்துத் துவாவாதிகள்!
பாம்புப் புற்றில் கொண்டு போய் கையை விட்டுப் பார்க்கக் கூடாது இந்துத்துவா வாதிகள்.
உலகிலேயே மத ரீதியாக அதிக எண்ணிக்கை கொண்டவர்கள் கிறித்தவர் களும், முசுலிம்களும்தான்; அந்த எண்ணிக் கையோடு ஒப்பிடும்போது இந்துக்கள் சிறுபான்மையினர்தானே?
சிறுபிள்ளைத்தனமாக சீறி எழுந்து கிளறி விட்டு வெளிநாடுகளில் பிழைக்கப் போன இந்திய மக்களுக்கு இந்துக்களுக்கு வீணான தொல்லையைக் கொடுக்காதீர்கள் - எச்சரிக்கை!

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: