நிதின்கட்கரிக்கு ஒரு நீதி - ஆ.இராசாக்களுக்கு மற்றொரு நீதியா?
மத்திய
சாலைப் போக்குவரத்து அமைச்சரும், முன் னாள் பா.ஜ.க. தலைவருமான
நிதின்கட்கரி அவர்களின் தொழில் குழுமமான பர்தி குழுமம் - இவரது குடும்ப
உறுப்பினர்களின் தொழில் குழுமமாகும். இக்குழுமத் திற்கு இரிடா என்ற அரசு
அமைப்பு புத்தாக்க எரிசக்தி மின்சாரத்திற்கான கடனை ரத்து செய்து சலுகை காட்
டியுள்ளது. பல கோடி ரூபாய் சலுகையைப் பெற்றுள் ளார்கள் என்று மத்திய
தணிக்கைக் குழு அதிகாரியின் அறிக்கை (C.A.G. Report) தெளிவாக
எழுதியுள்ளது.
இதைச்
சுட்டிக்காட்டி, இந்த அதிகார துஷ்பிர யோகத்திற்காக உடனடியாக நிதின்கட்கரி
பதவி விலகவேண்டும். அவரை பதவியிலிருந்து பிரதமர் விலக்கவேண்டும் என்று
காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையிலும், மாநிலங்களவை
யிலும் வற்புறுத்தியதால், இரண்டு அவைகளும் நேற்று இரண்டு, மூன்று முறை
ஒத்தி வைக்கப்பட்டன.
பேரவைத்
தலைவர் அவரை குறுக்கிட அனு மதித்தபோது, எதிர்க்கட்சித் தலைவர் (காங்கிரஸ்)
மிகுந்த கோபத்திற்குள்ளாகி, வேண்டுமானால் தன் னைப் பதவி நீக்கம்
செய்யுங்கள் என்று ஆவேசமாகக் கூறினார்!
அதற்கு
(தீவிர ஆர்.எஸ்.எஸ்.கார பார்ப்பனரான) அமைச்சர் நிதின்கட்கரி, குற்றம்
நிரூபிக்கப்பட்டால், தான் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவேன் என்று அடம்
பிடித்த பதிலைச் சொன்னார்.
இந்த மனுநீதி - இவர் முகத்தில் பிறந்த ஜாதி என்பதால்தானோ?
2ஜிபற்றி
சி.ஏ.ஜி. மத்திய தணிக்கை அதிகாரி வெறும் யூகத்தில் சொன்னதற்காகவே, அப்போது
ஆ.இராசா பதவி விலகவேண்டும் என்று நாடாளுமன் றத்தில் வற்புறுத்தினர்.
அவரது
பெருந்தன்மை, அவரது கட்சித் தலைமையின் ஆணைக்கிணங்க, இராஜினாமா செய்தார்.
திகார் சிறையில் ஜாமீன் வாங்காமல்கூட, ஒன்றரை ஆண்டு இருந்தார்!
குற்றச்சாட்டுக் கூறப்பட்ட உடனே அவர் பதவி விலகினார்.
காரணம், மனு தர்மப்படி, ஆ.இராசா கீழ்ஜாதியில் பிறந்தவர்.
என்னய்யா நீதி?
நம் நாட்டில் ஆளுக்கொரு நீதி!
நாளும் வெவ்வேறு அளவுகோலில்!
No comments:
Post a Comment