Thursday, January 22, 2015

பனிக்காலத்தில் குழந்தைகளின் உணவில் மாற்றம் தேவையா?



பனிக்காலம் தொடங்கியதுமே குழந்தைகளைப் பல நோய்கள் தொற்றிக்கொள்ளும். அதுவும் இப்போது இருக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகமிக குறைவாக இருப்பது ஒரு காரணமென்றால் மற்றொரு புறம் சுற்றுப்புறச்சூழலால் புதிதுபுதிதாக கிளம்பும் கிருமிகள்.

இவற்றிடமிருந்து குழந்தைகளை பாதுகாக்க நம் வீட்டை கிருமிகள் அண்டாமல் சுத்தமாக வைத்திருப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் குழந்தைகளின் உணவு முறைகளை கையாள்வதும். பனிக்காலத்தில் ஒரு சில உணவுகளை கொடுக்க வேண்டும், சில உணவுகளை தவிர்க்கவேண்டும் என பெற்றோர்கள் நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறான கருத்து. நம் ஊர் குளிரோ, மழையோ,  பனியோ எதுவும் நம் செரிமானத்தை பாதிக்காது.. குழந்தைகளுக்கு வெயில் காலத்தில் தாகம் அடிக்கடி எடுக்கும். நிறைய தண்ணீர் குடிப்பார்கள்.

அதனால் சாப்பாடு அதிகம் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் பனிக்காலத்தில் தண்ணீர் குடிப்பது குறைவதால் அதிகம் பசிக்கும். இக்காரணத்தினால் அவர்களுக்கு சத்து நிறைந்த உணவுகளை அதிகம் கொடுக்கவேண்டும். ஆனால் பல அம்மாக்கள் செய்யும் தவறு. தயிர், ஆரஞ்சு, வாழைப் பழம் சாப்பிடுவதால் சளி பிடிக்கும் என குழந்தை களுக்கு கொடுப்பதில்லை. பனிக்காலத்தில் தொற்றுக் கிருமிகளால் சளி பிடிக்கும்.

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு திறனை பொறுத்து சளி பிடிக்கும் இது ஒரு இயல்பான செயல்.  இதற்கும் உணவு முறைகளுக்கும் சம்பந்தமில்லை. வைட்டமின் சி நிறைந்த காய்கனிகள், பழங்கள், மற்றும் மோர் போன்றவற்றை அதிகம் கொடுத்தால் தான் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்திகூடும்.

டெங்கு, ஸ்வைன் ஃப்ளு போன்றவற்றில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற உதவும். வைட்டமின் சி நிறைந்த உணவுகள் எலுமிச்சை, ஆரஞ்சு, உருளைக்கிழங்கு, தக்காளி, முட்டைக்கோஸ், மிளகு, கீரை வகைகள் குழந்தைகளுக்கு வழங்கலாம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...