பெரியார் பூமியில் மதவெறி அச்சுறுத்தலை தடுக்கவே
திராவிடர் விழிப்புணர்வு மாநாடுகளை நடத்துகிறோம்
தமிழர் தலைவர் பேட்டி
காஞ்சிபுரம், ஜன.25- தந்தை பெரியார் பூமியில் ஜாதி வெறி - மதவெறி என்கிற அச்சுறுத்தலை உருவாக்கலாம் என நினைப்பவர்களின் செயலைத் தடுக்கவே திராவிடர் விழிப்புணர்வு மாநாடுகளை நடத்தி வருகிறோம் என தமிழர் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திராவிடர் விழிப்புணர்வு மாநாடுகளை நடத்துகிறோம்
தமிழர் தலைவர் பேட்டி
காஞ்சிபுரம், ஜன.25- தந்தை பெரியார் பூமியில் ஜாதி வெறி - மதவெறி என்கிற அச்சுறுத்தலை உருவாக்கலாம் என நினைப்பவர்களின் செயலைத் தடுக்கவே திராவிடர் விழிப்புணர்வு மாநாடுகளை நடத்தி வருகிறோம் என தமிழர் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் நேற்று (24.1.2015 மாலை
நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் பங்கேற்க சென்ற
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்,
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழக முழுவதும் திராவிடர்
கழகத்தின் சார்பில் 2000 திராவிடர் விழிப்புணர்வு மாநாடுகள் நடத்தப்படுவது
குறித்து கூறியதாவது:
பெரியார் பூமியில் ஜாதி வெறி, மத வெறி
என்கிற அச்சுறுத்தலை உருவாக் கலாம் என்று நினைக்கின்ற காலக் கட்டத்திலே
கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னாலேயே திராவிடர்கழகம் இதை மக்களுக்கு
எச்சரித்தது. வளர்ச்சி என்ற பெயராலும், இளைஞர்களுக்கு புதிய வேலை
வாய்ப்புகள் என்கிற மாயையைக் காட்டியும், ஏற்கெ னவே இருந்த
ஆட்சியின்மீதிருந்த அதிருப்திகளையும் பயன்படுத்தி மோடி ஆட்சிக்கு வந்தார்.
மதவெறிகளை வெளிப்படையாக செய்கிறார்கள்
இப்போது வெளிப்படையாகவே கோட்சேவுக்கு சிலை
வைக்கக்கூடிய அளவுக்கு, அறிவிக்கக்கூடிய அளவுக்கு மதவெறிகளை வெளிப்படையாக
செய் கிறார்கள். 10 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும், எங்களுக்கு
ஓட்டுப்போடாதவர்கள் எல்லாம் யாருக்கோ பிறந்தவர்கள் என்று அவதூறுகளைப் பேசி
வருகிறார்கள். அதுமட்டுமல்ல அமைச்சர்களாக இருப்பவர்களே கண்டிக்கப்படக்கூடிய
அளவிலே இருக்கிறார்கள். என்றாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல்,
நாடாளுமன்றத்திலேகூட சரிவர சட்டங்கள் இயற்றாத அளவுக்கு, இன்றைக்கு வேலை
வாய்ப்புகள் பறிபோய் இருக்கின்றன.
வேலை வாய்ப்புகளுக்கு உத்தரவாதம் இல்லை
ஏற்கெனவே இருந்த வேலை வாய்ப்புகள் இப்போது
இளைஞர்களுக்கு கணினித்துறையில் இல்லை. இந்த ஊருக்கு அருகிலேயே
இருக்கக்கூடிய இரண்டு மிகப் பெரிய தொழிற்சாலைகள் ஃபாக்ஸ்கான், நோக்கியா
போன்றவையெல்லாம் மூடப்பட்டிருக்கின்றன. ஆலங் குளம் அரசு சிமெண்ட்
தொழிற்சாலையும் மூடப்பட் டுள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகளிலே புதிய
வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், ஏற்கெனவே இருந்த வேலைவாய்ப்புகளுக்கு
உத்தரவாதம் இருக்கிறதா என்றால் கிடையாது. இவையெல்லாம் ஏன் செய்யவில்லை
என்று மக்கள் நினைப்பார்கள் அல்லது கேட்பார்கள் என்று திசைதிருப்புவதற்காக
முழுக்க முழுக்க பல்வேறு பிரச் சினைகளை, கோட்சே பிரச்சினைகள் ஆகியவைகளை
அவர்கள் சுலபமாக சொல்லுகிறார்கள். எனவே, மதவெறியை மாய்த்து, மனித நேயத்தை
உருவாக்குவோம் என்று தெளிவான நிலையை உருவாக்க, திராவிடர் இயக்கம் அதனுடைய
கொள்கைகள்தான் ஒரே விடியல் என்பதை விளக்குவதற்காக திராவிடர் விழிப்புணர்வு
மாநாடு தமிழ்நாடு முழுக்க 2000 மாநாடுகளை திராவிடர் கழகம் ஒத்த கருத்துள்ள
நண்பர்களை எல்லாம் அழைத்து வெகு சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறது.
இதுவரையிலே தென்கோடியிலிருந்து 20, 25 மாநாடுகளை நாங்கள்
நடத்திக்கொண்டிருக்கிறோம். இன்றைக்கு காஞ்சிபுரத்தில் மாநாடு நடைபெறுகிறது.
ஆகவே, இந்தப்பணி தொடரும்.
அடுத்த தேர்தலைப்பற்றிக் கவலைப்படு
வதைவிட, தலைமுறையைப்பற்றிக் கவலைப்படுவதுதான் திராவிடர் இயக்கத் தினுடைய
குறிக்கோள். பதவிக்காக திராவிட இயக்கங்கள் இல்லை. மாறாக, உண்மையான
திராவிடர் இயக்கம் தமி ழர்கள் மானத்தோடு, அறிவோடு, உரிமை யோடு வாழ
வேண்டும். பகுத்தறிவோடும் வாழவேண்டும். மதவெறி மாய்த்து மனித நேயத்தைக்
காக்க வேண்டும் என்பதுதான்.
சிறீரங்கத்தில் பொது வேட்பாளர்
செய்தியாளர் கேள்வி: சிறீரங்கத்தில்
அமைச்சர்கள் அனைவருமே முகாமிட்டுள் ளனர். சட்டசபை வெறிச்சோடி எல்லோ ருமே
அங்கேதான் இருக்கிறார்களே?
தமிழர் தலைவர் பதில்: தெரிந்த விஷயம்தானே.
எல்லாருமே அங்கு இருந்தாலும், வாக்களிக்க வேண்டியவர்கள் மக்கள்தானே. அதில்
ஒன்றும் சந்தேகமே இல்லை. அதனாலே, மக்களுக்குத் தெளி வாக தெரியக்கூடிய
உணர்வுகள் அங்கே இருக்கிறது. ஏன் அந்தத் தேர்தல் வந்தது என்ற கேள்வி
கேட்டாலே அதற் குப் பதிலிலேயே மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண் டுமோ அதைச்
செய்வார்கள். அதுமட்டுமல்ல, இதற்கு இடையிலே எதிர்க்கட்சிகள் என்பவர்கள்
கலைஞர் அவர்கள் கேட்டுக்கொண்டபடி ஒரு பொது வேட்பாளரை அவர்கள் நிறுத்தி
இருந்தால், யார் உண்மையான எதிரி என்று அவர்களை வீழ்த்துவதற்கு வாய்ப்பு
ஏற்படும். அதற்கு வாய்ப்பு இல்லாமல், மற்றவர்களை பிரித்தாளக்கூடிய
அளவுக்கு, அதன்மூலமாக ஆட்சி அதிகாரம், பலவீனங் களைப் பயன்படுத்தலாம் என்று
நினைக்கிறார்கள். இன்னொரு முக்கியமான செய்தி என்னவென்றால், பாஜக திராவிடர்
இயக்கங்களையே வீழ்த்திவிடுவோம் என்று சொல்லி வந்திருக்கிற இயக் கத்தைப்
பொறுத்தவரையிலே, ஏற்கெனவே, பாராளு மன்றத் தேர்தலில் யார்யார் அவர்களோடு
இருந்தார்களோ, அவர்கள் எல்லாம் காணாமற் போய் விட்டார்கள். அவர் களுடைய
எண்ணிக்கை குறைந்திருக்கிறது. காணாமல் போய் இருக்கிறார்கள். இந்த நிலையில்
நாங்கள் பலத்த கூட்டணி என்று சொல்கிறார்கள். கேள்வி: மதவெறி சக்தி என்று
சொல்லியும் அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள், அவர்களுக்கு இந்த இடைத்
தேர்தல் மூலம் பாடம் புகட்டுவதற்கு இந்த இடைத் தேர்தலை வாய்ப்பாக
பயன்படுத்திக்கொள்ளாமல் விட்டது யாருடைய தவறு?
பதில்: மக்களுடையது. ஜனநாயகத்திலே மக்கள்
தெளிவாக இருந்திருந்தால், நீங்கள் ஏற்கெனவே சொன்னதுபோல எச்சரித்தோம்.
அதையும் தாண்டி ஏமாந்தார்கள். ஒரு தடவை ஏமாறலாம். மறுபடியும்
திரும்பத்திரும்ப ஏமாந்துகொண்டிருக்கலாமா? தவத்திரு குன்றக்குடி
அடிகளார்தான் சொல்வார், விழுவது தப்பில்லை, நேற்று விழுந்த இடத்திலேயே
இன்றைக்கும் விழுவது இருக்கிறதே அதைவிட வேறு என்ன கொடுமை? அதேமாதிரி
தமிழர்களுடைய நிலை இருக்கிறது. அதை எடுத்துச்சொல்லி, விழிப்புணர்வு
ஊட்டுவதற்குத்தான் நாங்கள் அந்தப்பணியைச் செய்து வருகிறோம்.
கேள்வி: பொது வேட்பாளர் நிறுத்துவதில் தவறு எங்கு நேர்ந்தது?
பதில்: தவறியதற்கு பல
காரணங்கள் உண்டு. அதிலே குறிப்பாக என்னவென்றால், எல்லோருமே தங்களை
முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, உண்மை
நிலையையோ, அல்லது பொதுக்கருத்தையோ முன்னிலைப்படுத்த வேண்டும் என்கிற பொது
எண்ணங்கள் இன்னும் தமிழ்நாட்டில் வரவில்லை. தீப்பிடித்து எரிகின்ற
நேரத்தில் அணைப்பவர்கள் எல்லோரும் சேர்ந்து அணைக்க வேண்டுமே தவிர, எனக்கு
முன்னால் வாய்ப்பு இருக்கிறதா? உனக்கு முன்னால் வாய்ப்பு இருக்கிறதா? என்று
நினைத்தால், தீ முழுமையாக வெற்றி பெற்றுவிடும். அணைப்பவர்கள் தங்களை
முன்னிலைப் படுத்துவதாலேயே பின்னாலே அவர்கள் பழியை ஏற்கவேண்டி வரும்.
கேள்வி: 2016ஆம் ஆண்டிலே இந்த நிலை மாறும் என்று நினைக்கிறீர்களா?
பதில்: நிச்சயமாக
மாறும். ஏனென்றால், அரசியல் என்பதே, நாளை காலை என்ன செய்தி என்பது தெரி
யாமல் இருப்பதுதான் அரசியல். நேற்று இருந்த செய்தி வேறு, இன்று இருக்கிற
செய்தி வேறு. ஆக்ராவுக்கு போகிறார்ஒபாமா என்று சொன்னார்கள். இன்றைக்கு
ஆக்ராவுக்கு போகவில்லை என்று சொல்கிறார்கள். உடனே செய்தி மாறுகிறது. அதே
போல்தான் எத் தனையோ செய்திகள் மாறும். கால நிலையே இவ்வளவு வேகமாக
மாறும்போது, அரசியலில் மாறுவதற்கு என்ன? தாராளமாக மாறும். அவ்வளவுதான்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- காஷ்மீர் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் பால்வசந்தகுமாரை பாராட்டுகிறோம்
- சிறீரங்கம் இடைத் தேர்தலில் திமுகவையே ஆதரிக்க வேண்டும் - ஏன்?
- மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் அரசின் கொள்கையை ஆளும்
கட்சியைச் சேர்ந்தவர்களே எதிர்த்து பேசுகிறார்கள் - நிதி நெருக்கடியில் திண்டாடும் மத்திய அரசு கோயில் நிதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாமே!
- 69 சதவீதத்தை எதிர்த்துத் தீர்மானம் போட்டுள்ளது பார்ப்பன சங்க மாநாடு
- சாமியார்களுக்குத் துணை போகும் மத்திய பிஜேபி அரசு குற்றவாளி சாமியார் பற்றிய திரைப்படத்தை வெளியிட அத்துமீறி அனுமதி
- தமிழர் என்றால் வெறும் மொழிப்பற்று உள்ளவர்கள். திராவிடன் என்றால், மொழியுணர்வோடு சொரணையும் இனப் பற்றும் உள்ளவர்கள்!
- கங்கையில் எங்கு பார்த்தாலும் பிணங்கள் மிதக்கும் கோரக்காட்சி
- கருநாடகத்தில் அனைத்து ஜாதியினருக்கும் ஒரே சுடுகாடு
- பெரியார் திடலில் திராவிடர் திருநாள் : மூன்று நாள் விழாவையும் காண வாரீர்!
No comments:
Post a Comment