பெண்களின் கண்ணியத்தை காக்க வேண்டும்
மதத்தின் பெயரால் வன்முறைகள் வேண்டாம்
குடியரசுத் தலைவர் உரை
மதத்தின் பெயரால் வன்முறைகள் வேண்டாம்
குடியரசுத் தலைவர் உரை
புதுடில்லி, ஜன.26: நாட்டின் 66வது குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று ஆற்றிய உரை:
பாலியல் வன்முறை, கொலைகள், சாலைகளில்
நடக்கும் துன்புறுத்தல்கள், குழந்தைகள் கடத்தல், வரதட்சணை கொடுமை யால்
நிகழும் மரணங்கள் ஆகியவற்றால், தங்களது சொந்த நாட்டிலேயே பெண்கள்
அச்சத்துடன் வாழ்கின்றனர். எந்த விதத்தில் வன்முறை நடந் தாலும், பெண்களின்
கண்ணியத்தை காக்க வேண்டும் என ஒவ்வொரு இந்தியரும் உறுதியேற்க வேண்டும்.
பெண்களுக்கு மரியாதை அளிப்பது, அவர்களை வலிமைப்படுத் துவது ஆகியவற்றின்
மூலமே, ஒரு நாடு உலக அளவில் சக்தி மிக்கதாக மாறும்.
நாம் ஏராளமான சட் டங்களை இயற்றுகிறோம்.
இருப்பினும், பாதிக்கப் படாதவர்களும் குரல் எழுப்பாதவரை நீதி கிடைக்காது
என்கிற பெஞ்சமின் பிராங்ளினின் கருத்தை இங்கு குறிப்பிடு கிறேன். மதத்தால்
வன்முறை வேண்டாம்:
மதம் என்பது மக்களை ஒன்றுபடுத்தும் சக்தி
என்றார் காந்தியார். வன்முறை நடப்பதற்கு மதம் ஒரு காரணமாக அமைந்து
விடக்கூடாது. நம்முடைய அரசியல மைப்பு சட்டம் என்பது ஜனநாயகத்தின் புனித
நூல். அது, வேற்றுமையில் ஒற்றுமை என்பதை கொண்டாடும் இந்தியா வின், சமூக
பொருளாதார மாற்றத்துக்கான துருவ நட்சத்திரம். அது பொறு மையை
வலியுறுத்துகிறது. வேறுபாடு கொண்ட சமூகங்களுக்கு இடையே, நமது அரசியலமைப்பு
சட்டம் நல்லெண் ணத்தை தூண்டுகிறது. இந்த மதிப்பு மாண்புகள் காப்பாற்றப்பட
வேண்டும்.
வளர்ச்சியை தடுக்க முடியாது:
இந்தியாவுடைய வளர்ச்சியை அதனுடைய
எதிரிநாடுகள் ஒருபோதும் தடுத்துவிட முடியாது. தீவிரவாதமும், வன்முறை யும்
நம்முடைய எல்லை யில் நிலவி வருகிறது. அமைதி, அகிம்சை, அண்டை நாடுகளுடன்
நட்புறவு ஆகியவை நம்முடைய வெளியுறவுக் கொள் கையின் அடிப்படையாக உள்ளன.
எல்லையில் மீண்டும் மீண்டும் நடக்கும் அத்து மீறல்கள், தீவிரவாத தாக்
குதல்கள் ஆகியவற்றுக்கு வலிமையான ராஜதந்திரத் தின் மூலமாகவும், அசைக்க
முடியாத ராணுவ வலி மையாலும் நமதுநாடு தக்க பதிலடி கொடுக்கிறது.
தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா தொடுத்துவரும் போரில், உலக நாடுகளும்
இணைந்து கொள்ள வேண்டும். நாட்டு மக் களுக்கு எதிரான எந்த வொரு
அச்சுறுத்தலையும் எதிர்கொண்டு, அதனை முறியடிக்கக்கூடிய வலிமை, நம்பிக்கை,
மன உறுதி ஆகியவை நமது நாட்டுக்கு உண்டு.
30 ஆண்டுகாலத்துக்கு பிறகு, தனிக்கட்சி
ஒன் றுக்கு மக்கள் பெரும் பான்மை அளித்துள்ளார் கள். அவர்களது நம்பிக்
கையை, அரசு காப்பாற்ற வேண்டும். தூய்மையான, ஆற்றல் மிக்க, வெளிப் படையான,
நட்புறவு மிக்க அரசு அமைவதற்காக நாட்டு மக்கள் வாக் களித்துள்ளனர்.
மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், சட்டங் களை இயற்றவது
நாடா ளுமன்றத்தின் கடமை. விவாதமின்றி சட்டங் களை இயற்றுவது என்பது, சட்டம்
இயற்றும் விஷயத்தில் நாடாளு மன்றத்துடைய பங்க ளிப்பை பாதிக்கும். அரசு மீது
மக்கள் நம்பிக்கை இழப்பதற்கு, அவசர சட்டங்கள் வழி வகுக்கும். இது
ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.
No comments:
Post a Comment