வெளியுறவுத் துறைச் செயலாளர் சுஜாதா சிங்
எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வெளியுறவுத் துறை போன்ற முக்கியமான பதவியில் உள்ளவர்கள் தங்கள் பணி பற்றிய
குறிப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து புதிதாக பதவியேற்கும் ஒருவரிடம்
ஒப்படைப்பார்கள். அதற்காக குறைந்தது இரண்டு முதல் 5 வேலை வாரங்கள்
எடுத்துக்கொள்வார்கள்.
இது முக்கிய பணிமாற்றம் குறித்த விதிகள்
ஆகும். ஆனால் பாஜக பதவியேற்றதில் இருந்தே தலைமைப் பதவியில் உள்ள அதிகாரிகளை
ஒரே இரவில் பதவியில் இருந்து வெளியேற்றி வைப்பது தொடர்கிறது. ஆட்சிக்கு
வந்த பிறகு சிபிஅய் தலைவர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்புப்
பிரிவுத் தலைவர், தேசிய பாதுகாப்பு ஆய்வு மய்யத் தலைவர் (DRDO) என பல
முக்கிய அதிகாரிகள் இதே போன்று ஒரே இரவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
முக்கியமாக சிறப்புப் பாதுகாப்பு படைத்தலைவர் நேபாளத்தில் மோடியுடன்
இருக்கும்போதே டில்லியில் உள்ள அவரது அலுவலகத்திற்கு பதவி பறிப்பு தகவல்
குறித்த கடிதம் தொலைநகலில் அனுப்பப்பட்டுள்ளது.
தனது பதவி பறிக்கப்பட்டது தெரியாமல் நேபாள
நாட்டில் மோடியின் பாதுகாப்புப் பணிகளை நேரடியாக கண்காணித்துக்
கொண்டிருந்தார்.
அதேபோல் பாதுகாப்பு ஆய்வு மய்யத் தலைவர் அவினாஷ் சந்திரா
முதல்நாள் இரவு வீட்டிற்குத் திரும்பி மறுநாள் காலை அலுவலகம் செல்ல
இருந்தபோது அவரது அலுவலகத்தில் இருந்து நீங்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு
விட்டீர்கள் என்று தகவல் தொலைப்பேசியில் வருகிறது.
இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்குக்
காரணம் பத்திரிகைகள் மோடியை படம் எடுக்கும்போது பாதுகாப்பு வீரர்கள்
குறுக்கே நிற்கிறார்களாம்; இதன் காரணமான அதன் தலைவர் பதவி நீக்கம்
செய்யப்பட்டு இருக்கிறார்.
இதுபோன்ற முக்கிய அதிகாரிகளின் பதவி
நீக்கத்திற்குப் பின்புலமாக காவிகளின் கரங்கள் இருக்கின்றன என்பது மிகவும்
தெளிவாகத் தெரிகிறது. பாதுகாப்பு ஆய்வு மய்யத் தலைவர் நவீன கண்டு
பிடிப்புகளுக்கு புராணப் பெயர்களை வைப்பதை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து
வந்தவர்.
பன்னாட்டளவில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு
அந்த நாட்டுப் பெயருடன் சில குறிப்பு எழுத்துக்களை பயன்படுத்துவது
எதிர்காலத்தில் அந்த கண்டு பிடிப்புகளைபற்றிய தகவல்கள் பெற மிகவும் வசதியாக
இருக்கும் என்று கூறிவந்தார். மேலும் ராணுவத்தில் காவிகளின் ஆதிக்கம்
குறித்தும் பல்வேறு கட்டங்களில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தார்.
இதன் காரணமாக அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதன் வரிசையில்
தற்போது சுஜாதா சிங் இவர் பதவி நீக்கம் செய்ய பல்வேறு காரணங்கள்
கூறப்பட்டுள்ளன.
இது குறித்து ஃபர்ஸ்ட் போஸ்ட் என்ற ஆங்கில இணையதளம்
வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க அதிபரின் இந்தியப்பயணத்தின் போது
காந்தியார் நினைவிடத்திற்கு ஒபாமாவுடன் சென்றது, ஒபாமாவின் வருகையின் போது
ஊடகங்களில் மோடிக்குச் சமமாக வெளியுறவுத்துறைச் செயலாளரான சுஜாதாசிங்கின்
படம் வந்தது, வெளியுறவுத்துறை குறித்த பல்வேறு பதவிகளுக்கு மோடிக்கு
நெருக்கமானவர்கள் கொடுத்த பட்டியலைப் புறக்கணித்து தகுதியான நபர்களை
பணியில் அமர்த்தியது, அதை விட முக்கியமாக இவரது தந்தை தமிழரான டி.வி.ராஜேஷ்
வர் காங்கிரஸ்காரர் என்ற ஒரு காரணமும் இதில் இணைந்திருக்கிறது.
இந்தியாவில் மதவாதம் பற்றி ஒபாமா தெரிவித்த கருத்துக்கு வெளியுறவுச்
செயலாளர் காரணமாக இருக்கலாம் என்ற அய்யப்பாடு மோடி அரசுக்கு இருந்ததும் ஒரு
காரணமாம்!
இதுபோன்று பல்வேறு காரணங்கள் கூறப்பட்
டுள்ளன. ஆனால் இதுவரை உள்துறை அமைச்சகமோ அல்லது பிரதமர் அலுவலகமோ சுஜாதா
சிங் பதவி நீக்கத்திற்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை. சுதந்திர
இந்தியாவின் சி.பி.முத்தம்மா, நிருபமா ராவ் போன்ற பெண் வெளியுறவுத்துறை
அதிகாரிகளுக்குப் பிறகு சுஜாதா சிங் நியமிக்கப்பட்டிருந்தார்.
முக்கியமாக பாஜக ஆட்சிக்கு வந்ததில்
இருந்து பெண்களுக்கான முக்கியத்துவம் குறைக்கப்படுவது - அதிகரித்து
வருகிறது. பெண் வெளியுறவுத் துறை அதிகாரிகளை காரணம் எதுவும் கூறாமல்,
நீக்கிய மோடி சில நாள்களுக்கு முன்பு அரியானாவில் பெண் குழந்தைகளைப்
படிக்க வைப்போம்; பெண் குழந் தையை காப்பாற்றுவோம் என்று முழங்கி
இருக்கிறார். என்னே முரண்பாடு!
நிருபெந்திர மிஸ்ரா ஆர்.எஸ்.எஸ்.காரர்;
மோடி ஆட்சிக்கு வந்த முதல் வேலையாக தொலைத் தொடர்பு ஆணையத்தின் செயலாளராக
இருந்து ஓய்வு பெற்ற இவரை பணி நியமனத்திற்கான விதியில் மாற்றம் செய்து
பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளராக நியமித்தார்.
அஜித் தொவல் பாதுகாப்பு ஆலோசகர் மே மாதம்
30 (2014) ஆம் தேதி மோடியால் நேரடியாக தேர்ந் தெடுக்கப்பட்டவர். இவர் தனது
சொந்த வலைதளத்தில் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை தேச வளர்ச்சி கொள்கை என்ற
கருத்தை மய்யப்படுத்தி பல்வேறு கட்டுரைகளை எழுதியவர் ஆவார்.
இந்திய வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவராக
தீவிர இந்து வெறியரான எல்லப் பிரகலத சுதர்ஷன் ராவ் (ஒய்.பி.சுதர்ஷன் ராவ்)
என்பவர் நியமிக்கப்பட்டார்.
சோசலிஸம் என்ற வார்த்தையே பிடிக்காது,
சர்வமும் இந்துத்துவா மயம் என்ற பாதையில்தான் மோடி தலை மையிலான ஆட்சி நடை
போடுகிறது - எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment