Friday, January 23, 2015

மீண்டும் மதக்கலவரங்களா?

பிகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் இரு சமூகத் தினரிடையே வன்முறை வெடித்தது, இதில் 40க்கும் மேற்பட்ட வீடுகள் தீவைத்துக்கொளுத்தப்பட்டன. 4 பேர் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டனர். முசாபர்பூர் நகரில் ஞாயிறன்று இரவு மதக்கலவரம் வெடித்தது.  

சிறுபான்மையினர் உள்ள பகுதியில்  நுழைந்த 200 பேர் அடங்கிய கும்பல் முதலில் வீடுகளுக்குத் தீவைத்தது, வீடுகளில் தீப்பிடித்ததும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வெளியே வந்தவர் களைத் தாக்க ஆரம் பித்தனர்; இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.  இந்த வன்முறையில் 40க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. சபாரா, முசாபர்பூர், சமேலி, சமஸ்திபூர், சீதாமாடி போன்ற பகுதிகளில் தற்போது கலவரம் பரவும் சூழ்நிலை உள்ளதால், அப்பகுதியில் மத்திய பாதுகாப்புப் படை மற்றும் பிகார் வன்முறை தடுப்புப் பிரிவு காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.  இது குறித்து பிகார் மாநில இணை ஆணையர் குசேஷ்வர் பாண்டே பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, சில நாட்களுக்கு முன்பு ஓர் இளைஞர் காணாமல் போய்விட்டார். அந்த இளைஞர் ஞாயிறன்று முசாபர்பூர் நகர் பகுதியில் பிணமாக கிடந்தார். இதனைத் தொடர்ந்து இறந்து போனவன் நண்பர்களிடம் விசாரணை செய்து வருகிறோம்.

இந்த நிலையில் சிலர் இவ்விவகாரத்தை இரண்டு சமூகத் தவரிடையே வன்முறையைத் தூண்டும் விதத்தில் வதந்தியைப் பரப்பி விட்டனர். இதனால் கலவரம் ஏற்பட்டுவிட்டது. கலவரத்தைத் தடுக்கும் விதமாக மத்திய பாதுகாப்புப் படை மற்றும் வன்முறைத் தடுப்புப் பிரிவுகளைச் சேர்ந்த பல்வேறு பிரிவுகள் 5 மாவட்டங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரம் மேலும் பரவிவிடாதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக இது வரை யாரையும் கைது செய்யவில்லை என்று கூறினார்.   

பிகாரில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட இந்த திடீர்க் கலவரம் குறித்து கேள்விப்பட்ட முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி தனது மும்பை பயணத்தை ரத்து செய்தார். மாநில காவல்துறை ஆணையர் மற்றும் 5 மாவட்ட ஆட்சியாளர்களை நேரில் அழைத்து நிலவரம் குறித்து அறிக்கை ஒன்றினைக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். கடந்த வியாழனன்று (15.1.2015) குஜராத் மாநிலம் பரூச்சில் குறிப்பிட்ட பிரிவினர் ஒலிபெருக்கி பயன்படுத்துவதை எதிர்த்து சிலர் வழிபாட்டுத்தலத்தின் சுவரில் அருவருப்பான வார்த்தைகளை எழுதியது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. 

இது வன்முறையாக மாறி பரூச் மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் மத மோதலாக மாறியது.   இதனை அடுத்து குஜராத் அரசு குஜராத்தில் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் இணையதள சேவை களை நிறுத்தியது. பருச்சின் சில பகுதிகளின் அலை பேசி சேவையும் நிறுத்தப்பட்டது.   இந்த மோதல்களில் 4 பேர் உயிரிழந்தனர். 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பரூச் ஹன்சோட் நகரில் சிறுபான்மையினரின் வணிகத் தலங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆனால் இவ்விவகாரம் குறித்து பரூச் மாவட்ட காவல்துறை ஆய்வாளர் டி.சவுதிரி கூறியதாவது: 

பட்டம் விடுவது தொடர்பான விவகாரத்தில் இரண்டு இளைஞர்கள் கொலை தொடர்பாக சில இடங்களில் மோதல்கள் நடந்தன தற்போது அமைதி திரும்பி யுள்ளது. இதுவரை யார் மீதும் வழக்கு பதிவு செய்யவில்லை, யாரும் கைதுசெய்யப்படவும் இல்லை  இருப்பினும் அடையாளம் தெரியாத 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
கடந்த நான்கு நாட்களாக பரூச் உள்ளிட்ட மேற்கு வடக்கு குஜராத் மாவட்டங்களில் பதற்றமான சூழல் தான் உருவாகி வருகிறது. மதமாற்றம் தொடர்பான விவகாரங்களில் இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து தலையிட்டு வருவதால் இரு சமூகத்தினரிடையே பதற்றமான சூழல் உருவாகிக்கொண்டிருக்கிறது என்று இந்துஸ்தான் டைம்ஸ் (19.1.2015) விவரித்துள்ளது.

மேற்கண்ட செய்திகளைப் பெரும்பாலும் ஏடுகள் இருட்டடித்து விட்டன.

மத்தியில் பிஜேபி தலைமையிலான அரசு அமைந்தாலும் அமைந்தது - நாடே கலவரப் பூமியாக உருமாறி விட்டது. ஆட்சி அதிகாரப் பூடத்தில் இருக்கும் பிஜேபியும், அதன் சங்பரிவார்களும் நடந்து கொள்ளும் போக்கும் வெறியூட்டும் பேச்சுகளும் சிறுபான்மை மக்களுக்கு எதிராகக் கொழுந்து விட்டு எரியும்படிச் செய்து வருகின்றன.

குஜராத் கலவரத்திற்கு முதல் அமைச்சர் மோடிக்குத் தளகர்த்தராக இருந்தவர் இப்பொழுது பிஜேபியின் அகில இந்தியத் தலைவராகவும் ஆகிவிட்ட நிலையில் இந்துத்துவா காவிக் கும்பலுக்கு மேலும் கொம்புகள் முளைத்து விட்டன. அரசியல் காரணங்களுக்காக மதச் சார்பற்ற சக்திகள் பிரிந்து கிடக்கும் நிலையில் ஒரு மாற்றம் நடந்தே தீர வேண்டிய கால கட்டம் இது.

பிஜேபியின் போக்குக்கு முதற்கட்டமாக மூக் கணாங் கயிறு போட்டாக வேண்டும். குறுகிய கால திட்டம், தொலை திட்டங்கள் தீட்டப்பட்டு ஒரு கட் டத்தில் மதவாத சக்திகள் ஆணி வேரோடு வீழ்த்தப் பட்டாக வேண்டும். அதன் மூலம்தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள மதச் சார்பின்மையின் உயிர் காப்பாற்றப்பட முடியும். இது மிக மிக முக்கியம் அவசியமாகும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...