உலகம் முழுவதும் நடக்கும் குழந்தைத் திருமணங் களால் பாதிக்கப்படும் சிறுமிகளில், மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவைச் சேர்ந்த சிறுமிகள் என்கிறது யுனிசெஃப் நிறுவனம்(அய்க்கிய நாடு களின் சிறுவர் நிதியம்). குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்படா விட்டால், 2050-க்குள் நூறு கோடி சிறுமிகள் குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்படுவார்கள் என்ற அதிர்ச்சித் தகவலைத் தருகிறது அந்த நிறுவனம்.
2009ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் ஜனவரி 24ஆம் தேதி, தேசிய பெண் குழந்தைகள் நாள் கடை பிடிக்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு தேசிய பெண் குழந்தை நாளை முன்னிட்டு இந்தியத் தொழிற் கூட்டமைப்பும், யுனிசெஃப் நிறுவனமும் சென்னைப் பல்கலைக் கழகத் துடன் சேர்ந்து வளரிளம் பெண் களுக்கான ஒருநாள் கருத் தரங்கிற்கு ஏற்பாடு செய் திருந்தன.
இந்தியா மட்டு மல்லாமல் சர்வதேச அளவில் பெண்களும், பெண் குழந்தைகளும் சந்திக்கும் பிரச் சினைகள் குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் பெண்களின் நிலை உயர்ந்திருக்கிறது என்று யுனிசெஃப்பின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் சமூக, பொருளாதாரக் காரணிகளில் குறிப் பிடத்தக்க முன்னேற்றத்தைத் தமிழகப் பெண்கள் அடைந் திருக்கின்றனர் என்று சொல்லலாம். ஆனால், தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக் கையில் பெரிய மாற்றம் எதுவும் நடக்கவில்லை.
கிருஷ் ணகிரி இதில் முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் தருமபுரி, சேலம், நாமக்கல் போன்ற மாவட் டங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் 24 சதவீதப் பெண்களுக்கு பதினெட்டு வயதுக்கு முன்னால் திருமணம் செய்யப் படுகிறது என்று தெரிவிக்கிறது யுனிசெஃப்பின் அறிக்கை.
மேலும் தமிழகத்தின் கிராமப்பகுதிகளில் நடக்கும் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை 25.5 சதவீதம் என்றால், நகரங்களில் அது 21.4 சதவீதமாக இருக்கிறது என்கிறார் பேராசிரியர் ரீட்டா ஜான்.
குழந்தைத் திருமணத்தால் வளரிளம் பெண்கள் பாதிக்கப்படுவது உலகளவிலும் அதிகமாகவே இருக்கிறது. மூன்றாம் உலக நாடுகளுக்கு மட்டுமல்லாமல் அய்ரோப்பிய நாடுகளிலும் குழந்தைத் திருமணங்களைக் கட்டுப் படுத்துவது சவாலாகவே இருக்கிறது. இந்தியாவில் 27 சதவீத பெண்களுக்குப் பதினைந்து வயதுக்குள் திருமணம் முடிந்து விடுகிறது.
இந்தப் பெண்கள் குடும்ப வன்முறை, குழந்தைப் பேறு சிக்கல், பிரசவகால மரணம் போன்ற பல்வேறு பிரச்சினைகளை சந்திக் கின்றனர். சமீபத்தில், தருமபுரியில் நிகழ்ந்த சிசு மரணங் களுக்கு இந்தச் சிறுவயதுத் திருமணமும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்கிறார் தமிழகக் குழந்தைகள் உரிமை ஆய்வகத்தின் மாநிலத் தலைவர் ஆண்ட்ரூ சேசுராஜ்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- சிங்கங்களுக்காக வாழும் ஷிவானி
- புதிய ஆப்ஸ்: அசத்திய மதுரை மாணவிகள்
- கருப்பையில் வரக்கூடிய பிரச்சினைகளுக்கு ஆலோசனை

- சட்டத்தின் முன்னோடிகள்
No comments:
Post a Comment