Tuesday, January 20, 2015

திருவாளர் வைத்தியநாதய்யரும்! ராமகோபால அய்யரும்


- மின்சாரம்

தினமணி ஆசிரியர் திருவாளர் வைத்தியநாதய்யரின் பேச்சு ஒன்று  தினமணியில் வெளி வந்துள்ளது. (3.1.2015)

1947ஆம் ஆண்டு தொடங்கி 2014 ஆம் ஆண்டு வரை சுதந்திர இந்தியாவில் எத்தனையோ கட்சிகள் ஆட்சியில் இருந் திருக்கின்றன. தமிழர்கள் நாடாளுமன்றத் திலும் இருந்திருக்கின்றனர். திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க யாரும் சொல்ல வில்லையே என்ற குற்றப் பத்திரிகை படித்துள்ளார்.

பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டு விடாது; வைத்தியநாத அய்யர்கள் ஒன்றை மறைத்து விடுவதால் உண்மைகள் ஓடி ஒளிந்து விடப் போவதில்லை.

6.7.2002 அன்று சேலத்தில் நடந்த திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டில் திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

அதுபோலவே 4.3.2006 அன்று திருச்சி யில் நடைபெற்ற தி.மு.க. 9ஆவது மாநில மாநாட்டிலும், தி.மு.க. இளைஞரணி வெள்ளி விழா மாநாட்டிலும் திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை மறைப்பானேன்?
 
வேறு ஒன்றும் இல்லை பிஜேபியைச் சேர்ந்த தருண் விஜய் திருக்குறள்பற்றி சொன்னவற்றைத் தூக்கிப் பிடிக்க வேண்டும். அதே நேரத்தில் திராவிடர் இயக்கத்தை மட்டம் தட்ட வேண்டும் என்ற வேதிய உள்ளத்தின் பீறிடல் அது!

இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமானால், திராவிடர் இயக்கத்தை விட பி.ஜே.பி.தான் தமிழுக்குத் தொண்டு செய்கிறது என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற தந்திரம்தான் இதற்குள் புதைந்து கிடக்கிறது (தந்திர மூர்த்தியே போற்றி! என்று ஆரியத்தை ஆரிய மாயை நூலில் படம் பிடித்தார் அறிஞர் அண்ணா)
 
இதே  வைத்தியநாதரைக் கேட்க வேண்டிய ஒரு கேள்வி உண்டு.

வாஜ்பேயி பிரதமராக இருந்த மத்திய ஆட்சியின் போது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி ஓர் ஆண்டையே சமஸ்கிருத ஆண்டாக அறிவித்த நேரத்தில் தமிழ் நாட்டிலிருந்து முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், தமிழையும் அதுபோல அறிவிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தாரே, அதனை பிஜேபி ஆட்சி நிறைவேற்றியதா?

பி.ஜே.பி.யின் தருண்விஜய் ஒரு பக்கத்தில் சொல்லுவார். இன்னொரு பக்கத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கீதையை தேசியப் புனித நூலாக அறிவிக்கப் போவதாகச் சொல்லுவார்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது திருக்குறள் - பிறப்பின் பெயரால் வருணபேதம் கற்பிப்பது கீதை! பாவ யோனியில் பிறந்தவர்கள் வைசியர்களும், சூத்திரர்களும், பெண்களும் என்று கூறு வதுதானே பகவத் கீதை! அய்யர், அய்யங் கார் வீட்டுப் பெண்கள் முதலில் இதனை ஏற்றுக் கொள்வார்களா? ...பிஞ்சி விடும் பிஞ்சி.. என்று ஆத்திரப்பட மாட்டார்களா!? 

எந்தத் தைரியத்தில் இன்னும் கீதைப் பிரச்சாரம்? எந்த ஆணவத்தில் கீதையை தேசியப் புனித நூலாக அறிவிக்கப் போகிறார்களாம்? ஒரே நேரத்தில் திருக்குறளும் - கீதையும் - எத்தகைய முரண்பாடு - ஊரை ஏமாற்றும் வேலை!

ஆண்டாளின் திருப்பாவையில் தீக்குறளைச் சென்றோதோம் என்ற வரிக்கு தீய திருக்குறளை ஓத மாட்டோம் என்று விளக்கம் சொன்னவர் தானே இவாளின் ஜெகத் குரு ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்னும் காஞ்சி சங்கராச்சாரியார் (தீக்குறளை என்றால் தீய பழக்கமான கோள் சொல்லுதல் என்பதைக்கூட அறியாத ஆச்சாரிகள் எல்லாம் இவாளுக்கு லோகக் குரு! (ஹி... ஹி...!)

ஒரே நேரத்தில் இந்த இரண்டையும் அறிவிக்கிறார்கள் - என்றால் இது அசல் ஏமாற்று வேலைதானே? இது குறித்து எல்லாம் திருவாளர் வைத்தியநாதர் தினமணியில் எழுதாதது ஏன்? அவர் எப்படி எழுதுவார்? அவருக்குத் தெரியாதா என்ன? எல்லாம் ஏமாற்று வேலை - தகடுதத்தம் என்பது அவாளுக்கே உரித் தான - தனிக் குத்தகையான சமாச்சாரங்கள் ஆயிற்றே!

இரண்டாவதாக திருவாளர் இந்து முன்னணி இராம கோபாலனுக்கு வரு வோம். அதே தேதியில்  தினமணியில்தான் அந்த சேதியும் வெளி வந்துள்ளது.
சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று கதறி இருக்கிறார். ராம. கோபாலனிடம் ஒரு கேள்வி. தமிழ்ப் புத்தாண்டு என்றால் அந்த 60 ஆண்டு களில் ஒரே ஒரு பெயர் மருந்துக்காவது தமிழில் இருக்கிறதா? பிரபவ தொடங்கி அட்சய வரை எங்கு தமிழ் இருக்கிறது? இதற்கு அறிவு நாணயமாகப் பதில் சொல்லட்டும் பார்க்கலாம். நாரதன் என்ற ஆண் கடவுளுக்கும் கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்ததுதான் இந்த 60 தமிழ் ஆண்டுகளும் என்று சொல்லுவதற்கு வெட்கம் இல் லையா? கூச்சம் இல்லையா?

பார்ப்பனர்களுக்கு எங்கிருந்து வரப் போகிறது? இந்து மதத்தில் இந்த ஆபாசக் கூளங்களைத் தவிர மிஞ்சுவதற்கு வேறு என்ன இருக்கிறது?

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று அறுதியிட்டவர்கள் மறைமலை அடிகளும்,  காசு பிள்ளை, நாவலர் சோம சுந்தர பாரதியார், மு.வ. போன்ற தமிழ்க் கடல்கள் என்பதை மறக்க வேண்டாம்.

தமிழை நீஷ பாஷை என்று கூறும் கருதும் சங்கராச்சாரியார்களின் சீடர்கள் தமிழ்மீது அக்கறை கொண்டவர்களாக நடிக்க வேண்டாம். உங்கள் முகமூடியைக் கிழிக்க சாயத்தை வெளுக்கச் செய்த கருஞ்சட்டைப் பட்டாளம் உண்டே!

இங்கிலிஷ் புத்தாண்டில் இந்துக் கோயில்களைத் திறக்காதீர் - அபவாதம் செய்யாதீர் என்று இந்து முன்னணி இராம கோபாலன்களும் காஞ்சி சங்கராச்சாரி யார்களும் கரடியாகக் கத்துகிறார்களே - அதனைப் பொருட்படுத்துகிறார்களா இந்துக் கோயில் அர்ச்சகப் பார்ப்பனர்கள்!?

உச்சம பூஜை நடந்த பிறகு கோயில் நடை சாத்தப்படுவதுதானே அய்தீகம், ஆகமம் என்பவர்கள், அர்ச்சனைத் தட்டில் பணம் கத்தைக் கத்தையாக விழுகிறது என்றதும் ஆகமமாவது வெங்காயமாவது என்று குப்பைக் கூடையில் தூக்கி எறிகிறார்களே.

முதலில் அங்குப் போய் சவடால் காட்டட்டும் இந்து முன்னணி தினமணி வரையறாக்கள்! தாழ்த்தப்பட் டவர் உட்பட அர்ச்சகராக வேண்டும் என்று சட்டம் செய்தால் அய்யய்யோ ஆகமம் போச்சே என்று உச்சநீதிமன்றப் படிக் கட்டுகளில் ஏறி ஒப்பாரி வைக்கும் கூட்டம் பார்ப்பனத் தொப்பைக்குப் பணம் விழுகிறது என்றவுடன் அவை எல்லாம் பஞ்சாய்ப் பறப்பதைப் பஞ்சம் சூத்திர மக்கள் உணரட்டும் - உணரட்டும்!! வெடிக்கட்டும்! வெடிக்கட்டும் ஒடுக்கப் பட்டோர் புரட்சி!

தொடர்புடையவை :

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...