Thursday, July 3, 2014

கச்சத்தீவு வழக்கு மத்திய அரசு கொடுத்த தகவல் தவறானது மீனவர் சங்க நிர்வாகி கண்டனம்



ராமேசுவரம், ஜூலை 3_ கச்சத்தீவில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று மீனவர் பாதுகாப்பு பேரவை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நடந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் கச்சத்தீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை. வலைகளை உலர்த்திக் கொள்ளவும், ஓய்வெடுக்கவும் மட்டுமே அனுமதி உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த பதில் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தி உள்ளது.

இதுகுறித்து இந்திய _இலங்கை மீனவர் பேச்சு வார்த்தையின்போது தமிழகம் சார்பில் பங்கேற்ற தேவதாஸ் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

கச்சத்தீவு பிரச்சினையில் நரேந்திரமோடி அரசு, முந்தைய காங்கிரஸ் அரசு பின்பற்றிய கொள்கையை தான் பின்பற்றுகிறது. ஜனவரி மாதம் பாம்பனில் நடைபெற்ற போராட்டத் தில் பங்கேற்ற பா.ஜ.க. தலைவர் சுஷ்மா சுவராஜ் கச்சத்தீவு பகுதியில் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக் கும் உரிமையை பெற்றுத் தருவதாக கூறினார். ஆனால் ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்ளேயே பா.ஜ.க. அரசு அதற்கு மாறான நிலைபாட்டை எடுத்துள்ளது.

மத்திய அரசு உயர்நீதி மன்றத்தில் கூறிய தகவல் தவறானது. வலைகளை உலர்த்திக் கொள்ளவும், ஓய்வெடுக்கவும் உரிமை உள்ளபோது மீன்பிடிக்க உரிமை இல்லை என்று கூறுவது ஏற்க முடியாது.

மீன்பிடிக்க உரிமை இல்லையெனில், அங்கு வலைகளை உலர்த்தவும், ஓய்வெடுக்கவும் என்ன தேவை இருக்கிறது. கச்சத் தீவை இலங்கைக்கு இந்தியா கொடுத்த ஒப்பந் தத்தில் மீன்பிடிக்க முழு உரிமை உண்டு என்று தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் மீன் பிடி உரிமையை ஒரு போதும் விட்டுக்கொடுக்க முடியாது.

தேவைபட்டால் எங்களது உரிமையை நிலை நாட்டு வதற்கு மீனவர்கள் அனை வரும் படகுகளில் சென்று கச்சத்தீவை முற்றுகை யிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...