Thursday, July 24, 2014

பிஞ்சு உள்ளத்தின் கொஞ்சும் புரட்சி!


ஆப்ரிக்க குழந்தைக் கவிஞர் ஒருவரது கவிதையை, 2005ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிதை (Best Poem of 2005) என்று தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நிறம் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அக்கவிதையின் தமிழாக்கம் இதோ:

நான் பிறந்தபோதும் நான் கறுப்புதான்;
நான் வளர்ந்தபோதும் நான் கறுப்புதான்;
நான் வெயிலில் நடந்தபோதும் நான் கறுப்புதான்;
நான் நோயில் வதிந்தபோதும் நான் கறுப்புதான்;
நான் இறக்கும்போதும் நான் இன்னமும் கறுப்புதான்;
ஆனால் வெள்ளை ஆட்களான நீங்களோ நீங்கள் பிறந்த போது நீங்கள் பழுப்பு நிறத்தவர்
நீங்கள் வளர்ந்தபோது நீங்கள் வெள்ளை நிறத்தவர்
நீங்கள் வெயிலில் நடந்தபோது நீங்கள் சிவப்பு நிறத்தவர்
நீங்கள் குளிரில் நனைந்தபோது நீங்கள் நீல நிறத்தவர்
நீங்கள் பயத்தால் நடுங்கியபோது நீங்கள் மஞ்சள் நிறத்தவர்
நீங்கள் நோயில் வாடியபோது நீங்கள் பச்சை நிறத்தவர்
நீங்கள் மரணம் அடையும்போது நீங்கள் சாம்பல் நிறத்தவர்
இருந்தபோதிலும் எங்களைப் பார்த்து நிறத்து மக்கள் (“Coloured”)
என்று அழைக்கிறீர்களே - இதுதான் அந்தக் கவிதை.

இணையதளத்தில் எத்தனையோ சிறந்த தகவல்களும், காட்சிகளும் வரத்தான் செய்கின்றன! (சில நேரங்களில் அதே தளம் குற்றவாளிகளின் வாளாகவும், கேடயமாகவும் கூடப் பயன்படுகிறது என்பது உண்மையானாலும்கூட!)

இரண்டு நாள்களுக்கு முன் என் மின் அஞ்சலில் பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் நம் நண்பர்களுக்குக் கிடைத்த ஓர் அற்புதமான கவிதை, போற்றற்கரிய இலக்கியப் புதையல் ஆகும்!

பிஞ்சுகளின் நெஞ்சுகளிலும் எரிமலை வெடிக்கத் துவங்கி விட்டது!

எத்தனைக் காலம்தான் இத்தனை அவமானங்களைச் சுமந்து, சுமந்து  வேதனைத் தீயில் அவர்கள் வெந்து கருகுவது? அந்தக் குமுறல்கள் - கொஞ்சும் மொழியாக இல்லாமல், புரட்சியின் பூபாளங்களாக இசைக்கத் தோன்றி விட்டன!
 
விடியலை நோக்கி விரைகின்றனர் புதிய தலைமுறையினர் -

மனிதம் மறுமலர்ச்சி பெறத் துவங்கி விட்டது!

(மொழி பெயர்ப்பு என்றால் அந்த மொழி யில் கேட்கும் சுவையை அப்படியே கொடுத்து விட முடியாதல்லவா அதனால் ஆங்கிலக் கவிதையையும் அப்படியே கீழே தந்துள்ளேன் - வாசகர்கள் சுவைக்காக).
(This poem, written by an African child was nominated for the best poem 2005).
Colour
When I born, I Black;
When I grow up, I Black;
When I go in Sun, I Black;
When I scared, I Black;
When I sick, I Black;
And when I die, I still black;
And U White fellows;
When U born, U Pink;
When U grow up, U White;
When U go in Sun, U Red;
When U cold, U Blue;
When U scared, U Yellow;
When U sick, U Green;
When U die, U Gray;
And you call me Coloured

- கி.வீரமணி -
- வாழ்வியல் சிந்தனைகள்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...