Thursday, October 17, 2013

வருகின்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும்!

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது!
தமிழக மீனவர்கள் காக்கப்பட வேண்டும் சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் முழக்கம்

சென்னை, அக்.15-  வருகின்ற 23 ஆம் தேதி சட்டமன்றம் கூடவிருக்கின்ற நிலையில், அக்கூட்டத்தில், ஒருமித்த கருத்தோடு,  மத்திய அரசு - இந்திய அரசு இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்குச் சென்று கலந்துகொள்ளக்கூடாது என்கிற தீர்மானத்தை முதலமைச்சர் அவர்கள் கொண்டுவர வேண்டும்; அதை ஒரு மனதாக அனைவரும் நிறைவேற்ற வேண்டும் என்பதை மாநில அரசிற்கு வேண்டுகோளாக வைக்கின்றோம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு பங்கேற்கக்கூடாது என்றும், தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையாலும், இலங்கை மீனவர்களாலும் தாக்கப் படுவதையும், சிறையில் அடைக்கப் படுவதையும் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் 61 இடங்களில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்முன் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் உரை வருமாறு:
இலங்கையில் எந்தவிதமான உரிமைகளும் இல்லாமல் செய்து, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்கிற பெயராலே அவர்களு டைய விடுதலைப் போராட்டத்தை - இன அழிப்பு வேலையை செய்து அதிலே வெற்றிகரமாக ஆக்கி விட்டேன் என்று தோள் தட்டி, அந்தச் சின்னங்கள்கூட இருக்கக் கூடாது என்று அழித்துக் கொண் டிருக்கக்கூடிய ராஜபக்சே ஒரு போர்க் குற்றவாளி என்று அய்.நா. தெளிவாகக் கூறியிருக்கிறது.
மனித உரிமை மீறல் என்பது தெளிவாக்கப்பட்டிருக்கிறது போர்க்குற்றவாளி என்று பிரகடனப்படுத்தப்பட்டு, மனித உரிமைகள் மீறல் என்பது தெளி வாக்கப்பட்டிருக்கிறது; அய்.நா. வின் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவநீதம்பிள்ளை போன் றவர்கள் அங்கு சென்று திரும்பிய நேரத்தில்கூட தெளிவாக்கி இருக் கிறார்கள்.
இந்தச் சூழலில், இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறு கின்றது என்று சொன்னால், அந்த மாநாட்டிற்கு ராஜபக்சே தலைமை தாங்கக்கூடிய சூழல் ஏற்படும்.  இன்னும் இரண்டு ஆண்டுகள் அதற்குத் தலைமை தாங்கக்கூடிய ஒரு மிகப்பெரிய வேதனையான, வெட்கப்படத்தகுந்த சூழ்நிலை ஏற்படக்கூடும். இதைக் கருதித் தான், ஏற்கெனவே டெசோ அமைப்பின்மூலமாகவும், தலைவர் கலைஞர் அவர்களின் தலைமை யில், திராவிடர் கழகம் உள்பட, விடுதலைச் சிறுத்தைகள், திராவிட  இயக்கப் தமிழர் பேரவை மற்ற அனைத்து இயக்கங்களும் சேர்ந்து குரல் கொடுத்து, காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு கலந்து கொள்ளக்கூடாது; இன்னுங் கேட்டால், இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடைபெறுவதே விரும்பத்தக்கதல்ல; அந்தச் சூழ் நிலையில், இதையும் மீறி அந்த மாநாட்டை அங்கே நடத்து கின்றனர்.  இங்கிலாந்து ராணி அங்கே செல்வதே சந்தேகமாக இருக்கிறது - மனித உரிமை ஆணையம் பச்சையாகச் சொன்ன தையெல்லாம் வைத்துக்கொண்டு, அங்கே நடைபெற்ற இனப்படு கொலைக்குப் பிறகு, அந்த மாநாட் டிலே கலந்துகொள்வது, சிறிதுகூட மனிதாபிமானம் ஆகாது என்று, கனடா நாட்டினுடைய பிரதமர் முடிவு செய்து, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட் டில் கலந்துகொள்ளமாட்டேன் என்று அறிவித்துள்ளார்.
இதுபோல, பற்பலரும் யோசிக் கின்ற இந்தக் காலகட்டத்தில், நம்முடைய தமிழினத்தை அழித்து, பல லட்சக்கணக்கான தமிழர்களை - தமிழ்த் தாய்மார்களை விதவை களாக்கி, அவர்கள் இன்னமும் வாழ்வுரிமையைப் பெற முடியாத நிலைக்கு உள்ளாக்கி, ஏதோ ஒப்புக்கு ஒரு தேர்தல் நடைபெற்று, அதை ஒரு பொம்மை அரசாக ஆக்கிக் காட்டவேண்டும் என்ற முயற்சி எடுத்து, அரசியல் தீர்வுக்கு இடமில்லாமல் செய்திருக்கிறார்கள். 61 இடங்களில் போராட்டம்!
எனவேதான், எங்களுடைய முதல் வேண்டுகோள், காமன் வெல்த் மாநாட்டில், இந்திய அரசு, இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்துகின்றோம். இது திராவி டர் கழகத்தினுடைய குரல் மட்டு மல்ல; டெசோ அமைப்பின் குரல் மட்டுமல்ல; ஆங்காங்கு எங்க ளோடு இணையாதவர்களும்கூட தனித்தனியே இதனை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒருபக்கம் மாணவர்கள் போராட்டம்; இன் னொரு பக்கம் தியாகு போன்றவர் களின் பட்டினிப் போராட்டம்; மற்றொரு பக்கம் விவசாயி களுடைய போராட்டம்; எனவே தமிழகத்தைப் பொறுத்தவரை யிலே, எல்லோரும் ஒருமித்த குரலிலே, காமன்வெல்த் மாநாட் டில் இந்திய அரசு கலந்து கொள்ளக்கூடாது என்பதை வலி யுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனை அலட்சியப்படுத்தக் கூடாது; ஏனென்றால், இதனை அலட்சியப்படுத்தினால், நீதியின் குரலை, நியாயத்தின் குரலை அலட்சியப்படுத்தியிருக்கிறார்கள் - வெறும் தமிழர்களை மட்டும் அலட்சியப்படுத்தவில்லை என்றாகிவிடும். ஆகவேதான், அதனை வலியுறுத்துவதற்காகத் தான் இன்றைய இந்தப் போராட் டம்; முதல்கட்டமாக தமிழகம் முழுவதுமிருக்கின்ற முக்கிய பகுதி களில் 61 இடங்களில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சட்டமன்றத்தில் தீர்மானம் தேவை!
ஆகவே, இந்தப் போராட்டம் மட்டுமல்ல; மாணவர்கள், மற்ற வர்கள், அவரவர்களுக்குத் தோன் றிய வகையில், இதனை செய்து கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு இந்தச் சுவரெழுத்தைப் படிக்கவேண்டும்; மத்திய அரசு உடனடியாக இன்னும் காலம் தாழ்த்தாமல், தங்களுடைய நிலையை தெளிவுபடுத்தவேண்டும்.
இந்த நேரத்தில், மத்திய அரசுக்கு அதனை வேண்டுகோளாக வைக் கின்ற நேரத்தில், மாநில அரசுக்கும் ஒரு வேண்டுகோளை வைக்க விரும் புகிறோம். அது என்னவென்று சொன்னால், இதுவரையில் இந்தப் பிரச்சினைக்காக நீங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, எத்தனையோ தலைவர்கள் சொன்ன பிறகும்கூட, கூட்ட வில்லை என்றாலும், பரவா யில்லை; அதேநேரத்தில், வருகின்ற 23 ஆம் தேதி சட்டமன்றம் கூடவிருக்கின்ற நிலையில், அக் கூட்டத்தில், ஒருமித்த கருத்தோடு, இதே தீர்மானத்தை, மத்திய அரசு - இந்திய அரசு இலங்கையில் நடை பெறும் காமன்வெல்த் மாநாட்டிற் குச் சென்று கலந்துகொள்ளக் கூடாது என்கிற தீர்மானத்தை முதலமைச்சர் அவர்கள் கொண்டு வர வேண்டும்; அதை ஒருமனதாக அனைவரும் நிறைவேற்றவேண்டும் என்பதை மாநில அரசிற்கு வேண்டு கோளாக வைக்கின்றோம்.
அதுபோலவே, நண்பர் தியாகு அவர்கள், இன்றைக்கு 14 நாள்களுக்கு மேலாக, உண்ணாவிரதம்  இருக் கிறார்; பொதுவாக கலைஞர் வேண்டு கோள் விடுத்தார்; எங்களைப் போன் றவர்கள் வேண்டுகோள் விடுத்தோம். அவரை மருத்துவமனைக்கு அழைத் துப் போய், மீண்டும் வெளியே வந்து, உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார்; இப்பொழுது அவரை மருத்துவ மனையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் வைத்திருப்பதாக நாங்கள் அறிகின் றோம்.
தோழர் தியாகு உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளவேண்டும்
எனவே, தோழர் தியாகு அவர் களுக்கு எங்களுடைய அன்பான வேண்டுகோள், இதற்காக கலைஞர் அவர்கள் முயற்சி எடுத்து, டில்லியில் பிரதமரைப் பார்த்து, கடிதத்தின் மூலமாக வலியுறுத்தி, பிரதமரும் இதைப்பற்றி நாங்கள் இணக்கமாக சிந்திக்கின்றோம் என்கிற ஒரு வாக் குறுதியை, தோழர் டி.ஆர்.பாலுவி டம் கொடுத்திருக்கின்ற காரணத் தால், அருள்கூர்ந்து, தோழர் தியாகு அவர்கள் தன்னுடைய உண்ணா விரதத்தினை நிறுத்திக் கொள்ள வேண்டும். அத்தகைய போராளி களின் உயிர் என்பது மிகமிக முக் கியம்; இந்த ஒரு கட்டத்தோடு இந்தப் போராட்டம் முடிவதல்ல; எனவே தான், போராளிகள் மிக முக்கியம். இலட்சியத் தலைவர்கள் மிக முக்கியம். எனவே, அவர்களுடைய உயிர் என்பது மிக முக்கியமானது. அது மிகப்பெரிய அளவிற்கு ஈர்த் திருக்கிறது; மத்திய அரசு வரையில் அதனைக் கொண்டு போய் கலைஞர் போன்றவர்கள் சேர்த்திருக்கிறார்கள். எதிர்பார்க்கிற விளைவுகள் நல்ல விதமாக இருக்கும். ஆகவே, தோழர் தியாகு அவர்கள் அருள்கூர்ந்து தன்னுடைய உண்ணாவிரதத்தை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். தமிழக மீனவர்களுடைய உயிர் மிக முக்கியம்!
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது என்பது ஒரு அன்றாட வாடிக்கை யான நிகழ்வாக ஆகிவிட்டது. மீண்டும் மீண்டும் அவர்களைப் பிடித்து சிறையில் வைக்கிறார்கள். நேற்று குஜராத்தில் ஒரே ஒரு மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று சொன்னவுடன், குஜராத் மீனவருக் காக, பாகிஸ்தானில் இருக்கின்ற அந்தத் தூதுவரை அழைத்து, அலுவ லகத்தில் அவரை எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பியிருக்கிறார்கள் என்று சொன்னால், குஜராத் மீனவ ரின் உயிர் எவ்வளவு முக்கியமோ, அதுபோலதான், தமிழக மீனவர்களு டைய உயிரும் அதைவிட மிக முக் கியம் என்பதை நாங்கள் உணரு கிறோம்.
அதுபோலவே, ஏற்கெனவே கேர ளாவில் நடைபெற்றது எல்லோருக் கும் நன்றாக நினைவிருக்கும். அந்த வழக்கும் நன்றாக நினைவிருக்கும். ஆகவே, மற்ற மாநிலங்களில் நடை பெற்றால் ஒரு நியாயம்; தமிழகத்தில் நடைபெற்றால் வேறொரு நியாயமா? தமிழக மீனவர்களுக்கு அன்றாடம் இந்தக் கொடுமைகள் ஒரு தொடர் கதையாக இருந்தால், இதனை வேடிக்கை பார்ப்பதா? வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கைக்குச் சென்று தேநீர் அருந்திவிட்டு வந்தால் போதுமா? இதனால் என்ன விளை வுகள் ஏற்பட்டன?
ஜனநாயக அரசின் கடமை!
எனவே, தமிழக எம்.பி.,க்கள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத் தனைப் பேரும் உடனடியாகச் சென்று இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும்; மக்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இந்த ஆர்ப் பாட்டத்தினுடைய நோக்கம். இதனை அவர்கள் தெளிவாகச் செய்யவேண்டும். இல்லையென்றால், தமிழகமே இப்பொழுது கொதி நிலையில் இருந்துகொண்டிருக்கிறது. கொதி நிலையில் இருக்கின்ற தமிழ கத்தை மேலும் மேலும் சீண்டிப் பார்க்கக்கூடிய எண்ணம் நம்முடைய எதிரிகளுக்கு இருக்கக்கூடாது; அது போல, மத்திய - மாநில அரசுகளுக்கு இருக்கக்கூடாது. மக்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அந்த உணர்வுகளைப் பிரதிபலிப்பது தான் ஜனநாயக அரசின் கடமை யாகும்.
ஆகவே, அதற்காக ஒருவருக் கொருவர் விமரிசிக்காமல், அவரவர் களுக்கு ஏற்பட்டதை, ஈழப் பிரச் சினையில் எல்லோரும் தனித்தனியாக இருந்தாலும், எல்லோரும் ஒத்தக் குருலில், ஒரு குரலில் ஒரே கோரிக்கை வைக்கிறோம். அதுதான் இலங் கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்திய அரசு புறக் கணிக்கவேண்டும் என்கிற கோரிக்கை. ஆகவே, இந்தக் கோரிக்கையி னுடைய முதல் கட்டம் இப்பொழுது நடைபெற்றிருக்கிறது. அடுத்த கட்டம் இன்னும் வேகமாக, விரை வாக இருக்கும்.
புயலுக்கு முன் இருக்கின்ற அமைதி!
அமைதியாக இருக்கின்ற கார ணத்தினால், புயல் எழாது என்று பொருளல்ல; புயலுக்கு முன் இருக்கின்ற அமைதிதான், இப்பொ ழுது தமிழகத்தில் இருக்கின்ற அமைதி என்பதையும் மத்திய அரசு புரிந்துகொள்ளவேண்டும் என்று கேட்டு முடிக்கின்றேன்.
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>


அக்டோபர் 16-31 - 2013

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...