Wednesday, July 17, 2013

திருத்தப்படவே முடியாத மதவெறியர் மோடி!

நீ இந்து என்றால் எனக்கு வாக்களிக்கவும் என்பதுதான் நரேந்திரமோடியின் பிரச்சாரமாக இருந்தது. இந்துத்துவாவை குஜராத்தின் பெருமை என்று குஜராத்திகளிடம் மோடி விற்பனை செய்தார். குஜராத் மாநிலத்தின் ஒரு பகுதிதான் இந்தியா என்று குஜராத்திகளை மோடி நம்ப வைத்து விட்டார். குஜராத்துதான் இந்தியா என்ற கோஷத்தை நானும் எனது செவிகளால் கேட்டேன்.
- பிரபல பத்திரிகையாளர் குல்தீப் நய்யார்
குலதீப் நய்யார் போன்றவர்களுக்கு அரசியல் முத்திரையை யாரும் குத்தி விட முடியாது. மோடியின் முகத்தை மிகச் சரியான வகையில் தானாகவே சாட்சியாகவே இருந்து, படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
இப்படி எதற்கெடுத்தாலும் இந்து என்று கூறி, ஒரு வெறியைக் கிளப்பி அரசியல் நடத்தக் கூடியவர் இந்தியாவின் பிரதமருக்கான வேட்பாளர் என்று முன்னிறுத்தப்படும் அறிமுக நிலையிலேயே அது தள்ளுபடி செய்யப்பட வேண்டாமா?
நாம் ஒரு காரை ஓட்டிச் சென்றால் அல்லது வேறு ஒருவர் ஓட்ட நாம் பின்னால் அமர்ந்து செல்லும்போது எதிர்பாரா விதமாக காரின் சக்கரத்தில் ஒரு நாய்க்குட்டி (Puppy) சிக்கிக் கொண்டால்கூட மனதுக்கு கஷ்டமாக இருக்குமா? இருக்காதா? நிச்சயம் அது வேதனை அளிப்பதாகத் தானிருக்கும். நான் முதல் அமைச்சராக இருக்கிறேனோ இல்லையோ, நான் ஒரு மனிதன். எங்கு எந்த கெட்ட விஷயம் நடந்தாலும் மனதுக்கு வேதனை யாகத் தானிருக்கும் என்றும் தன் பேட்டியிலே குறிப்பிட்டுள்ள நரேந்திரமோடி.
குஜராத்தில் முசுலிம்கள் கொல்லப்பட்டது - விபத்தில் நாய்க் குட்டி சிக்கியதற்குச் சமமாக மோடி விளக்கம் அளித்தது மூலம் அவர் எவ்வளவுப் பெரிய மனநோயாளி என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
இதுபற்றிக் கடுமையான வகையில் எதிர்ப்புப் புயல் வெடித்து எழுந்த நிலையில், அதற்குச் சமாதானம் கூறுவதாக நினைத்துக் கொண்டு வெளியிட்ட வார்த்தைகள் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தது போலிருக்கிறது.
நமது கலாச்சாரத்தில் அனைத்துவிதமான உயிர்களும் மதிக்கப்படுகின்றன என்று குறிப்பிட் டுள்ளார்.
அதாவது நாய் என்றால் அற்பமாக நினைத்து விடாதீர்கள்! நாயும் ஓர் உயிர்தானே என்று முஸ்லிம்களின் உயிரோடு நாயின் உயிரை ஒப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.
கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் குஜராத்தில் ஒரே  ஒரு முசுலிமுக்குக்கூட பிஜேபி சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லையே! மோடி மனப் பான்மைக்கு வேறு என்ன எடுத்துக்காட்டுத் தேவை?
இந்த மனிதனை எதைக் கொண்டும் திருத்த முடியாது - திருத்தவே முடியாது என்பது மிக மிக வெளிப்படை! இந்துக்கள் அல்லாத பிற மதத்தவர் மதம் அற்றவர்கள் மோடியை நிராகரிக்க வேண்டும் என்பதை விட உண்மையிலேயே இந்துக்கள் என்பவர்கள்தான் மோடியை ஒதுக்க வேண்டும்.
அவர் கூறும் இந்துத்துவாவாதத்தில் மக்களிடையே கடும் பிளவுகளை ஏற்படுத்திப் பெரும் மோதலை ஏற்படுத்தக் கூடிய அபாயம் இருக்கிறது; அமைதியான இந்தியா வேண்டுமா? அமளியான இந்தியா வேண்டுமா என்ற முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு இந்திய மக்களுக்கு இருக்கிறது.
இந்தியா - குஜராத்தாக மாற வேண்டும் என்று கூறுவது எந்தப் பொருளில் என்பது புரியாத புதிராக இருக்கிறது; கோத்ராவைத் தொடர்ந்து அரச பயங்கரவாதமாக சிறுபான்மை மக்கள் நர வேட்டை ஆடப் பட்டார்களே - அந்த குஜராத்தாக இந்தியா மாற வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லுகிறார்களா என்று தெரியவில்லை.
ஒருக்கால் குஜராத் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் முண்டியடித்துக் கொண்டு முதல் வரிசையில் தலையைத் தூக்கி நிற்கிறது என்று ஒரு திட்டமிட்ட பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே அந்த எண்ணத்தில் சொல்கிறார்களா?
அதுவும்கூட அவர்களுக்கே உரித்தான கோய பெல்சுப் பிரச்சாரம்தான்! இந்தியாவின் சோமாலியா குஜராத் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அந்த அளவுக்கு ஊட்டச் சத்துக் குறைவால் குழந்தைகள் 44.6 சதவீதத்தினர் குஜராத் மாநிலத்தில் அவதிப்படு கின்றனர்.
பிஜேபிக்குப் பிரதமருக்கான வேட்பாளராக நரேந்திர மோடிதான் கிடைத்திருக்கிறார் என்பது அக்கட்சியின் பரிதாப நிலையையும், பலகீனத்தையும் தான் வெளிப்படுத்தும்.
பிரதமருக்கான வேட்பாளர் என்று விளம்பரப் படுத்தப்பட்டுள்ள இந்தக் கால கட்டத்தில், மோடியின் பேச்சு எப்படி இருக்கிறது தெரியுமா? எனக்குப் பைத்தியம் தெளிந்து விட்டது. உலக்கையைக் கொண்டு வா! கோவணம் கட்டிக் கொள்கிறேன்! என்ற  ரீதியில் தான் இருக்கிறது. மோடி அப்படித்தான் - அவர் திருந்தப் போவதில்லை. பொது மக்கள்தான் தங்கள் தலையில்  மண்ணைப் போட்டுக் கொள்ளாமல் விழிப்பாக இருக்க வேண்டும்.

1 comment:

Anonymous said...

〈img src="http://sphotos-a.ak.fbcdn.net/hphotos-ak-ash3/q71/1070108_10200407351199554_908591333_n.jpg"〉

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...