Wednesday, July 17, 2013

இதோ ஒரு இந்துத் தேசியவாதி!

இந்துத் தேசியவாதி ஒருவர் இந்தியாவின் பிரதமராக வரத் துடிதுடித்துக் கொண்டு இருக்கிறார். குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடி வாய் சும்மா இருக்காது. தனது இந்துத்துவா வெறியை எந்த வகையிலும் மறைக்க முடியாத அளவுக்கு அதி வெறி பிடித்தவர்.
கடந்த 12ஆம் தேதி அவர் அளித்துள்ள பேட்டி ஊடகங்களில் முதன்மையான இடத்தைப் பிடித் துள்ளது.
நான் தேசியவாதி; நான் ஒரு தேசப் பக்தர். இதில் ஒன்றும் தவறு இல்லை. நான் இந்துவாகப் பிறந்தவன் எனவே இந்துத் தேசியவாதி என்று நீங்கள் கூறிக் கொள்ளலாம் என்று இவ்வளவுப் பச்சையாகவே கூறியுள்ளார்.
இந்தியாவில்  எத்தனைத் தேசியங்கள் இருக் கின்றன என்ற கேள்வி எழுகிறது!
ஒரே ... இந்தியத் தேசியம் என்று பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. இன்னும் சொல்லப் போனால் காங்கிரசைவிட பிஜேபியினர் தங்களை 22 காரட் தேசியவாதிகள் என்று மார்தட்டக் கூடியவர்கள்தான். அவர்கள் அப்படி சொல்லுவது, இந்துத் தேசியம் என்ற அடிப்படையில்தான் என்பது, இதன் மூலம் அம்பலமாகி விட்டதே!
இந்தியாவில் இந்து மதம் என்ற ஒரு மதம் மட்டுமல்ல; பல மதங்கள் உள்ளன. மத நம்பிக் கையற்ற மக்களும் வாழுகின்றனர்.
இந்த நிலையில் தான் இந்தியா மதச் சார்பற்ற நாடு என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் உறுதி படுத்துகிறது. ஆனால் பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடியோ தன்னை இந்துத் தேசியவாதி என்று பிரகடனப்படுத்தியுள்ளார்.
அவர் அப்படிப்பட்டவர்தான் என்பதைத் தன் நடவடிக்கைகள் மூலம் அவ்வப்போது காட்டிக் கொண்டும் வருகிறார்.
இந்தியாவில் உள்ள இந்துக்கள் அல்லாத மற்ற மதக்காரர்கள் தங்கள் மதங்களையும், கடவுள் களையும் இந்துத்துவமயமாக்கிக் கொள்ள வேண்டும்; கிறிஸ்துவர்கள் கிருஷ்ணனை வணங்க வேண்டும். ராமனை வணங்க வேண்டும் என்று சொல்பவர்கள் என்பதை நினைவு கூர்ந்தால் மோடி கூறியதன் சூட்சுமம் விளங்கும்.
அதன் அடிப்படையில் தான் மோடி கோத்ரா கலவரத்தின் போது செயல்பட்டும் இருக்கிறார்; பொடா சட்டத்தின் கீழ் 287 பேர் அம்மாநிலத்தில் சிறைபடுத்தப்பட்டனர். அதில் 286 பேர் முசுலிம்கள் ஒருவர் சீக்கியர்.
பாதிப்புக்குக் காரணமான இந்துக்கள் சிறைப்படுத்தப்படவில்லை. மாறாகப் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்கள் தான் கைது செய்யப்பட் டுள்ளனர் என்பதிலிருந்தே மோடி நடைமுறையில், யதார்த்தத்தில்  இந்துத் தேசியவாதியாக - முதல்வராகச் செயல்பட்டு இருக்கிறார் என்பது  விளங்கவில்லையா?
மோடியின் பேட்டியில் கண்டுள்ள இன்னொரு கருத்தும் கவனிக்கத்தக்கது.
எனது பார்வையில் மதச்சார்பின்மை என்பது அனைவருக்கும் நீதி, யாரையும் தாஜா செய்வதாக இருக்கக் கூடாது என்று சொல்லுவதில் உள்ள விஷமத்தைக் கணிக்க வேண்டும்.
சிறுபான்மை மக்களின் உரிமைகள், நலன்கள் பற்றி ஓர் அரசு அக்கறை கொண்டால் அது அம் மக்களைத் தாஜா செய்வது என்று கூறகிறார் மோடி.
இந்தியப் பிரதமரின் அமைச்சகத்தில் சிறுபான் மையினரின் நலனுக்காகவே ஒரு பிரிவு உண்டு. சிறுபான்மை மக்களுக்காக இந்தப் பிரிவு ரூபாய் பத்துக் கோடியை ஒதுக்கியது. ஆனால் மோடி என்ன செய்தார் தெரியுமா?
அந்தத் தொகையை சிறு பான்மை மக்களுக்காகப் பயன்படுத்தாமல், நிதியை அப்படியே திருப்பி அனுப்பி விட்டார். இது பாகுபாடு காட்டுகிறது - இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அடித்துக் கூறிவிட்டார்.
இதுபோல சிறுபான்மையினரின் கல்வியில் கை வைப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வரு கிறார். குஜராத்தைப் பொறுத்தவரை மெட்ரிக்குலேசன் வரை படிக்கக் கூடிய முஸ்லிம்கள் வெறும் 26 சதவீதம்தான்; முசுலிம் அல்லாதவர்களோ இது 41 சதவீதமாகும்.
மோடி தன்னை இந்துத் தேசியவாதி என்று அறிமுகப்படுத்தியதன் பொருள் இப்பொழுது புரிந்திருக்க வேண்டுமே!
மதச் சார்பற்ற அரசமைப்புச் சட்டம் நிலவும் இந்தியாவுக்குப் பிரதமராக ஒரு இந்துத் தேசியவாதி வர முடியுமா? வரலாமா? அது சட்ட விரோதம் அல்லவா? நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...