Tuesday, July 23, 2013

சிங்களமயமாக்கல்!

ஜூலை 16ஆம் தேதி டெசோ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் 4ஆவது தீர்மானம் தமிழர் பகுதிகளில் சிங்களவர் களுக்கு உருவாக்கப்பட்டுள்ள புது மாவட்டம் பற்றியதாகும்.
வடக்கு மாகாணத்தில் உள்ள வவுனியா மாவட்டத்திற்கும், கிழக்கு மாகாணத்தில் உள்ள திரிகோணமலை மாவட்டத்திற்கும் இடையே வரலாற்று ரீதியாக இருந்த இணைப்பைத் துண்டிக்கும் வகையிலும், சிங்களப் பகுதியான அனுராதபுரம் மாவட்டத்தோடு இணைந் திருக்கும் வகையிலும் வெளி ஓயா என்ற சிங்களப் பெயரிலேயே ஒரு புதிய மாவட்டத்தை சிங்கள அரசு உருவாக்கி, அங்கே சிங்கள வர்களை மட்டுமே குடியேற்றி வருகின்ற நிகழ்வுகளும் தற்போது நடைபெற்று வருவதை டெசோ இயக்கம் சுட்டிக்காட்டி அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப் பட்டுள்ள தீர்மானத்தின்படி பொதுத் தேர் தல்கள் நடைபெறும் காலத்தில் இது போன்ற மாவட்டங்களை உருவாக்குவதோ, எல்லை களை மாற்றுவதோ, புதிய குடியேற்றத்தை ஊக்குவிப்பதோ கூடாது என்று திட்டவட்டமாக கூறப்பட்ட போதிலும்; அதை மீறுகின்ற வகையில் சிங்கள அரசு ஈடுபடுவதையும் இந்திய அரசு கவனத்தில் கொண்டு, இதனை உலக நாடுகள் மற்றும் அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றின் கவனத் திற்கு எடுத்துச் சென்று, உடனடியாகத் தடுத்து நிறுத்திட ஆவன செய்ய வேண்டுமென்று இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள் கிறது என்ற டெசோவின் 4ஆம் தீர்மானம், இலங்கையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் தமிழினத்தின் அடையாளத்தையே முற்றிலுமாக அழிக்கும் பேராபத்தைச் சுட்டிக் காட்டியுள்ளது.
தொடர்ந்து 1948ஆம் ஆண்டு முதலே கிழக்கு மாகாணத்தில் மிகப் பெரிய அளவில்  தமிழ் ஈழத்தில் 9 ஆயிரம் சதுர மைல்களில் 2000 சதுர மைல்களை ஆக்கிரமித்துள்ளது.
தமிழர்கள் வீடுகளிலேயேகூட சிங்கள வர்கள் குடியேறிய கொடுமையை இலங்கையில் அப்பொழுது இருந்த இந்திய அமைதிப் படை நிருவாகிகளிடம் புகார் செய்யப்பட்டது. ஆனாலும் எந்தப் பரிகாரமும் கிட்டவில்லை. இப்பொழுது 89 தமிழ் ஊர்களின் பெயர்கள் சிங்கள மயமாக்கப்பட்டுள்ளன. (தமிழ்நாட்டில் தமிழ் ஊர்கள் சமஸ்கிருத மயம் ஆக்கப் பட்டதையும் நினைவில் கொண்டால் சிங்கள வர்கள் ஆரியர்களே என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது அவர்களின் அணுகுமுறைகள் ஒன்றாகவே இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்)
இலங்கையில் தமிழர் பகுதிகள் ஆக்கிர மிக்கப்படுவதை எதிர்த்தும், சர்வதேச அளவில் இந்தப் பிரச்சினையைக் கொண்டு சேர்க்கவும் தமிழக மக்கள் பேரவைத் தலைவர் திருச்சேத்தி தலைமையில் பிரான்சு நாட்டு தமிழீழ மக்கள் பேரவை சார்பில் பாரீசில் அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டதும் உண்டு (ஜூன் - 2012)  வாரா வாரம் பல வாரங்கள் அப்படி நடத்தினர்.
நியாயமான இந்த அறவழிப் போராட்டங் களையெல்லாம் இலங்கைப் பாசிச அரசு கிஞ்சிற்றும் பொருட்படுத்தவில்லை. தான் நினைத்த - விரும்பிய தமிழீழ அழிப்பை மூர்க்கத் தனமாகவே செய்து கொண்டு இருக்கிறது.  அதனைத் தடுத்து நிறுத்தும் கடமை இந்திய அரசுக்கு இல்லையா? அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இப்படிப் பச்சையாக இலங்கை அரசு நடந்து கொண்டுள்ளதே - இதன்மீது நடவடிக்கை என்ன?
டெசோ இதனைத்தான் சுட்டிக் காட்டு கிறது; உலக நாடுகள் மத்தியில் இவற்றைக் கொண்டு செல்ல வரும் ஆகஸ்டு 8ஆம் தேதி தமிழ்நாடு தழுவிய அளவில் டெசோ நடத்த இருக்கும்  அறவழி ஆர்ப்பாட்டம் நல்ல அளவுக் குத் திருப்பத்தைத் தரும் என்று எதிர் பார்ப்போம்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...