Saturday, May 4, 2013

பா.ஜ.க. காட்டில் பண மழை!

குஜராத் மாநிலம் ஜீனகர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று கோசாலை அமைத்துள்ளது. பசுக்களைப் பாதுகாக்கும் இந்த அமைப்பு கடந்த சனியன்று (27.4.2013) விழா ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. அவ்விழாவில் குஜராத் மாநில அமைச்சர்கள், மாநில பா.ஜ.க. தலைவர் கட்சியின் முன்னணியினர், பெரும் பணக் காரர்கள் எல்லாம் பங்கு கொண்டனர்.
அமைச்சர்களுக்குப் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கும் வகையில் பிஜேபி தொண்டர்கள் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வீசிப் பண மழை பொழிந்தனராம். அதனைக் கண்டு அமைச் சர்கள் மிகவும் நெகிழ்ந்து போனார்களாம்.
கோசாலைக்கும் நிறைய நன்கொடைகளை அமைச்சர்களும், பிரமுகர்களும் வாரி வழங்கியிருக்கிறார்கள்.
இதுகுறித்து என்.டி. டி.வி. தெரிவித்துள்ள செய்தி மிகவும் முக்கியமானது. இந்த நிகழ்ச்சி நடந்த பகுதியைச் சுற்றியும் உள்ள கிராமங்கள் கடுமையான வறட்சிக்கும் தண்ணீர்த் தட்டுப்பாட்டுக்கும் ஆளாகியுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்படிப்பட்ட பகுதியில் இயற்கை மழை பொழியவில்லை என்பதற்காகப் பண மழையைப் பொழிய வைத்துள்ளனர் போலும்!
குஜராத் மாநிலத்தில் உள்ள பிஜேபி ஆட்சி யும், அமைச்சர்களும், பிஜேபி பிரமுகர்களும் எத்தகைய மனப்பான்மையில் குளிர் காய்கின் றனர் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நரேந்திரமோடி தலைமையிலான பிஜேபி ஆட்சி மேல் தட்டு மக்களுக்கான ஆட்சி, நகர்ப்புற மக்களுக்கான ஆட்சி என்ற விமர்சனம் உண்டு.
பார்ப்பன மற்றும் இந்துத்துவா ஊடகங்கள் இந்த உண்மைகளை மறைத்து - இந்தியா விலேயே வளர்ச்சியில் முதன்மையான மாநிலம் நரேந்திரமோடி முதல்வராக இருக்கும் குஜராத் மாநிலம் தான் என்று விளம்பரக் காற்றை ஊதி ஊதி ஆகாயத்தில் பறக்க வைக்கின்றனர். உலகம் விளம்பரத்துக்குக் கட்டுப்பட்டது என்பதில் அசாத்தியமான நம்பிக்கை வைத் துள்ளவர் நரேந்திரமோடி.
சவுராஷ்டிரா மாநிலத்தில் சித்தாலியா, கட்வாவாடி, கணேசரா, பரிவாலா, ஜீவபூர், நாணி லக்காவதி, கொதி, பரவாலா மற்றும் கோதாவரி முதலிய கிராமங்கள் வறட்சியின் உச்சக் கட்டத்தில் உள்ளன.
ஊருக்குப் பொதுவான தண்ணீர்த் தொட்டி யில் தண்ணீர் எடுக்க தாழ்த்தப்பட்டவர்கள் தடை செய்யப்படுகின்றனர். இந்த நிலையில், தாழ்த்தப்பட்டவர்கள் கொளுத்தும் கொடிய வெயிலில் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீரைச் சுமந்து வரும் அவலநிலை நீடித்துக் கொண்டு இருக்கிறது. இதுதான் குஜராத்தின் உண்மையான நிலை. உண்மையான இந்தியா கிராமத்தில்தான் இருக்கிறது என்று வக்கணையாகச் சொல்லிக் கொள்வதில் ஒன்றும் குறைச்சல் இல்லை.
கிராமத்தின் உண்மை நிலையோ இந்தப் பரிதாப நிலையில்தான் தவித்துக் கொண்டு இருக்கிறது. இன்னொரு சோமாலியா என்று குஜராத் மாநிலத்தில் உள்ள ஊட்டச்சத்து குறைந்த நிலையைப்பற்றி செய்தி வருகிறது.
என்ன கொடுமை இது! தனது மாநிலத்தில் உண்மையான  நிலையை மறைத்து, பொய்யாக ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் பரப்பக் கூடிய ஓர் ஏமாற்றுப் பேர்வழியாக இருக்கக் கூடிய ஒருவர் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று சொல்லும் துணிவு எங்கிருந்து குதித்தது?
பொய்ப் பேசுவதிலும், பொய்யைப் பரப்புவ திலும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்களை வெல்ல உலகில் யார் தான் இருக்க முடியும்?
பண மழை பொழியும் அளவுக்கு பா.ஜ.க. வினர் அங்கே இருக்கிறார்கள் என்றால் ஆட்சி அதிகாரம் யாருக்குப் பயன்படுகிறது என்பதும் தெளிவாகிறது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...