Tuesday, February 5, 2013

நாத்திகனாக இருப்பதால் சாரணர் இயக்கத்தில் இடமில்லையா?


ஒரு 11 வயது  சிறுவன் சாரணர் இயக்கத்தில் சேருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளான். காரணம், அவன் கடவுள் நம்பிக்கை இல் லாதவன்!
இங்கிலாந்து நாட்டில் உள்ள சாமர்செட் என்ற ஊரில் உள்ள ஜார்ஜ் பிராட் உள்ளூர் சாரண இயக்கத்தில் கடந்த 10 மாதங்களாக பங்கு கொண்டிருந்தான்.
சாரண இயக்கத்தின் முழுமையான உறுப்பினராவதற்கு, சாரணர்களுக்கான உறுதிமொழி ஏற்க வேண்டும்.
என்னுடைய கவுரவத்தின் பேரில், நான், என்னால் முடிந்தவற்றைச் செய்வேன் சென்று உறுதியளிக்கிறேன். அதன்படி, கடவுளுக்கும் ராணிக்கும் உண்டான என் கடமையையும், மற்ற மனிதர்களுக்கு உதவி செய்வதையும், சாரணர் சட்டத்தின்படி நிறை வேற்றுவேன் என்பதுதான் அந்த உறுதிமொழி.
ஒவ்வொரு மதத்துக்கும் தக்கவாறு, உறுதிமொழியில் சிறுமாற்றங்கள் செய் யப்பட்டுள்ளன இஸ்லாமியர்களுக்கு கடவுள் என்ற சொல்லுக்குப் பதிலாக அல்லா என்று குறிப்பிடலாம்.
ஜார்ஜ் பிராட்டின் தந்தையான நிக் (45 வயது) மிகவும் கோபப்பட்டு உள்ளார். கிறித்துவ இயக்கம் மிகவும் பொதுமை யற்றதாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். கிருத்துவம், பொறுமை, மன்னிப்பு, புரிந்து கொள்ளுதல் ஆகிய பண்புகளுக்காக உள்ளது. நீங்கள் கிறிஸ்துவராகவோ, இஸ்லாமியராகவோ இருந்தால், சாரண இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளப் படுகிறீர்கள்.
ஆனால் கடவுளை நம்பாமல் இருக்கக் கூடாது. இது, உணர்ச்சியுள்ளவராக, பெருந்தன்மை யுள்ளவராக, அன்புள்ளவராக, உண்மையிலேயே  நல்ல மனிதராக இருப்பதைப் புறந்தள்ளி விடுகிறது. பல கிறித்துவ அமைப்புகள் யாரையும் வெளியேற்றுவது இல்லை. ஆனால், இந்தப் பகுதி சாரணர் இயக்கம் மட்டும் அவ்வாறு இல்லை என்று தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட ஜார்ஜ், நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன். தொடர்ந்து நான் அங்கு செல்ல முடியாததற்கு நான் கடவுளை நம்பாததைக் காரணம் காட்டுகிறார்கள். சாரண இயக்கத் தலைவருடன் நாங்கள் பேசிப் பார்த்து விட்டோம். அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. இது நியாயமானது அல்ல.
மற்ற எல்லோரும், நான் பார்த்து இராத ஓரிடத்துக்குப் போக இருக் கிறார்கள். நானும்  ஆசைப்படுகிறேன். ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறேன். அதற்காக, நான் என் முடிவை மாற்றிக் கொள்வதாக இல்லை என்று சொல்கிறான்.
சாரண இயக்கம் 1907ஆம் ஆண்டில் ராபர்ட் பேடன்,  பவ்வல் என்பவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.  பியர் கிரிலிஸ் என்ற சாகச வீரர்தான் பிரிட்டனின் இன்றைய சாரண இயக்கத் தலைவர் அவர், தனது கிருத்துவ உணர்வுகளைப் பற்றி முன்பு நிறைய பேசி இருக்கிறார்.
சாரண இயக்கத்தைச் சார்ந்த சைமன் கார்ட்டர்  என்பவர் சிறு வர்கள் அனைவரும் சாரணராக வேண்டுமென்றால் அதற்கான உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்.
அவர்கள் வளர்ந்து பெரியவர்களான பிறகு சில இளைஞர்கள்  சிந்தனை வளர்ந்த பிறகு கடவுள் இருப்பதை கேள்வி கேட்கவோ சந்தேகப்படவோ செய்யலாம். இதை சாரணர் இயக்கம் ஒப்புக் கொள்ளுகிறது என்று சொன்னார். இந்த முறைப்படி சாரண இயக்கத்தில் இணைந்தவர்கள், எப்பொழுதும் சாரணராகவே இருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...