Friday, February 15, 2013

காதலர் தினத்தை எதிர்க்கும் இந்துத்துவாவாதிகள் நவராத்திரியைத் தடை செய்வார்களா?


காதலர் தினமா? கூடவே கூடாது. அது ஒழுக்கக் கேடு என்று முண்டா தட்டிக் கிளம்பியிருக்கிறது ஒரு மதவெறிக் கும்பல்!
இந்த இந்துத்துவா கும்பல் நம்பும் கடவுள்கள் காதல் புரியவில்லையா?
கடவுள்களின் விபச்சாரத்தை ஏற்றுக் கொள்பவர்கள் உன்னத மான காதலைக் கண்டால் கணை களை வீசுவது ஏன்?
இவர்களின் கடவுளான கிருஷ்ண பரமாத்மா 60 ஆயிரம் கோபிகை களுடன் கொஞ்சுவதை ஏற்றுக் கொள்ளும் கபோதிகள் மனிதனின் இயற்கை உணர்வான காதலைக் கடிந்து பேசுவது - ஏன்?
இவர்களின் தேவலோகக் கடவு ளான இந்திரன் கவுதம முனிவரின் மனைவி அகலிகையை கவுதம முனிவர் போல வேடங்கொண்டு, திருட்டுத்தனமாகப் புணரவில்லையா?
கவுமத முனிவரில் சாபத்தினால் இந்திரனின் உடல் முழுவதும் பெண் குறியாகவில்லையா? இதனை மாற்றி ஆயிரம் கண்ணுடையவன் என்று எழுதி வைத்துக் கொள்ள வில்லையா?
இந்து மதக் கடவுள்களின் ஒழுக் கக் கேட்டை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தால் ஏடு தாங்காது.
ஆண்டாள் என்ற பக்தை, கடவுளான பெருமாள்மீது காதல் கொண்டு அவனுடன் புணர வேண் டும் என்ற விரகதாபத்தைப் பாடலாக வரிக்கவில்லையா?
வெட்கம் கெட்ட கூட்டம் பக்திப் போர்வையில் மார்கழி மாதத்தில் பஜனையாக இத்தகைய பாடலைப் பாடுவதில்லையா?
விபச்சாரத்தைப் பக்தி சிரத் தையோடு ஏற்றுக் கொள்ளும் கும்பல்தான், காதலை வெறுக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.
இந்து ஜனஜாக் ருதி சமதி - என்ற அமைப்பின் தலைவர் ஒருவர் அப்படியே ஆர்ப்பரித்திருக்கிறார் -போங்கோ!
காதலர் தினம் மேற்கத்திய கலாச்சாரம்; அதை இந்திய இளைஞர்கள் பின்பற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். காதலர் தினத்தன்று ஆணுறை விற்பனை அதிகரிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. காதலர் தினத்தில் ஈடுபடுபவர்கள் கற்பழிப்புவரை செல்லும் ஆபத்துள் ளது என்று கூறியிருக்கிறார் அந்த அமைப்பின் தலைவரான மனோஜ் சோலங்கி.
ஓர் உண்மை தெரியுமா?
நவராத்திரி நவராத்திரி என்று இந்து மதக்காரர்கள் ஒன்பது நாள் விழா கூத்தடிக்கிறார்களே!
சக்திக்குப் பார்வதி, கல்விக்குச் சரஸ்வதி, செல்வத்துக்கு லட்சுமி என்று கூறி ஒவ்வொரு கடவுளச் சிக்கும் மும்மூன்று நாட்கள் என்று உத்திப் பிரித்து விழாக் கொண்டாடு கிறார்களே - அந்த ஒன்பது நாள் இரவில் என்ன நடக்கிறது?
இதோ அந்த நவராத்திரி லீலா வினோதங்கள்பற்றி வெளிவந்துள்ள தடபுடல் செய்திகள் இணைய தளத்தில்.
நவராத்திரியும் - பாலியல் ஒழுக்கக் கேடும்
மும்பை, அக். 17- நவராத் திரி விழாவின்போது ஆயிரக் கணக்கான இளமை யான ஆண்களும் பெண்களும் நள்ளிரவு வரை ஆடல் பாடலில் ஈடுபடுவது வழக்கம். ஒன்பது இரவுகள் இவ்வாறு கொண் டாடப்படுகின்றன. நவராத்திரிக் கொண்டாட்டத்துடன், எய்ட்ஸ், எச்.அய்.வி., மற்ற பிற பாலியல் நோய்கள் பரவுவதைப் பற்றியும், விரும்பத்தகாத கருத் தரித்தல் பற்றியும் அச்சம் நிலவு கிறது.
ஜாஸ்லோக் மற்றும் லீலாத் வதி மருத்துவமனைகளில் ஆலோசகராக இருக்கும் பிள்ளைப்பேறு மருத்துவர், டாக்டர் திருமதி ரேஷ்மா பாய் இதைப் பற்றிக் கூறும்போது, கடந்த இரண்டு ஆண்டுகளாக, நவராத்திரிக்குப் பின்பு கருவைக் கலைக்கக் கோரி மருத்துவ மனைகளுக்கு வரும் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, என்றார்.
வேண்டாத கருவைக் கலைக்க வருவோர் பெரும் பாலும் நடுத்தர மற்றும் கீழ் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந் தவர்கள் ஆவர். பொதுவாக இவர்கள் பழைய சம்பிரதாயங் களைப் பின்பற்றுவோர். ஆனால் நவராத்திரியின் பொழுது கட்டுப் பாடுகள் இல்லை. ஆதலால் இளசுகள் எல்லை மீறுகிறார்கள், என அவர் மேலும் கூறினார்.
நவராத்திரி மண்டல்களுக்கு (மன்றங்களுக்கு) அருகில் அரசு சாராத அமைப்புகள், எச்.அய்.வி., மற்றும் எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு மய்யங்களைத் திறந்துள்ளன. கருக் கலைப்பில் உள்ள ஆபத்துகள் குறித்தும் அவை சொல்லுகின்றன. வீதி நாடகங்கள், கண்காட்சிகள் முதலிய வற்றின் மூலம் எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடைபெறுகிறது. அந்த அமைப் புகளில் சில கருத்தடை உறை களையும் விநியோகிக்கின்றன. மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற மராத்திய நடிகர் ஆதேஷ் பந்தேகர் பெயரில் உள்ள நவ ராத்திரி மன்றம், மற்றும் போரி வலியில் உள்ள நாயுடு நவராத்திரி மன்றம் ஆகியவற்றிற்கு அருகில் விழிப்புணர்வு மய்யங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்று, மும்பை மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தைச் சேர்ந்த ஷீடல் மாத்ரி கூறினார்.
கடந்த 4-5 ஆண்டுகளாக, அவர்ட் சங்கம் எனும் அமைப்பு நவராத்திரி, மன்றம் கணேஷ் மன்றங்களுடன் இணைந்து செயல்படுகிறது. அந்தச் சங்கம் கருத்தடைச் சாதனங்களை இலவசமாக விநியோகிக்கிறது. அதிக மானவர்கள் அவற்றை இந்தக் கொண்டாட்டங்களின் போது பெற்றுச் செல்லுகிறார் கள் என,  சங்க ஒருங்கிணைப் பாளர் மங்கள மூர் கூறினார். (இணையதளச் செய்தி 20.10.2010)
இதற்கு என்ன பதில்? காதலை- காதல் தினத்தை எதிர்க்கும் சவடால் பேர் வழிகள் இந்த இந்து மதப் பண்டிகையான நவராத் திரியைத் தடை செய்வார்களா? எங்கே பார்ப்போம்!
- கருஞ்சட்டை -


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

1 comment:

viyasan said...

///இதோ அந்த நவராத்திரி லீலா வினோதங்கள்பற்றி வெளிவந்துள்ள தடபுடல் செய்திகள் இணைய தளத்தில்.//
எந்த இணையத்தளத்தில் வந்த செய்தி என்ற இணைப்பையும் தந்தால் அதில் பார்த்து உண்மையைத் தெரிந்து கொள்ளலாம் அல்லவா? :)

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...