Tuesday, January 22, 2013

தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தலைவர் தந்த 20 அம்ச திட்டங்கள்



திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (19.1.2013) திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தெரிவித்த கருத்துக்களும், திட்டங் களும் வருமாறு:
1. 2013ஆம் ஆண்டின் முதற் பருவத்தில் விடுதலை சந்தா சேர்ப்பதற்குத்தான் முன்னுரிமை.
2. விடுதலை ஆசிரியராக 50 ஆண்டுகள் பணியாற்றியதற்காக கொடுக்கப்பட்ட விடுதலை சந்தாக்  கள் எண்ணிக்கை 50 ஆயிரம். சந்தா முடிவு காலம் வந்து விட்டமையால் அந்த எண்ணிக்கையில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் குறைவு ஏற்பட்டு விடக் கூடாது. அரசு நூலகங்களில் விடுதலை நிறுத்தப் பட்டதால் சில ஆயிரம் சந்தாக்கள் இழப்பு ஏற்பட்டுள் ளது. அரசு விளம்பரமும் அறவே கிடையாது. இவற்றை எல்லாம் சவாலாக ஏற்றுக் கொண்டு சாதித்து முடிக்க வேண்டும்.
3. கழக உறுப்பினர்கள் அனைவரும் விடுதலை சந்தாதாரராகவும், வாசிப்பாளராகவும் இருந்திட வேண்டும். விடுதலை வாசகர்கள் எல்லாம் கழக உறுப்பினர்கள் அல்லர்; அதே நேரத்தில் கழக உறுப் பினர் ஒவ்வொரும் விடுதலை சந்தாதாரர், வாசகர் என்பது கட்டாயம்.
4. மாநிலப் பொறுப்பாளர்கள் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் இவ்வளவு சந்தாக்களுக்குப் பொறுப்பு என்று ஆக்கப்பட வேண்டும்.
5. விடுதலை விநியோகத்தில் புகார் வந்தால் உடனடியாக காலதாமதம் செய்யாமல் சரி செய்யப்பட வேண்டும். (குடிடிட ஞசடிடிக ஆயஉநேசல ளுலளவநஅ).
6. அஞ்சல் மூலம் அனுப்பப்படுவதால் சந்தாதாரர் களுக்கு அன்றாடம் விடுதலை கிடைப்பதில்லை. எனவே முகவர்கள் மூலம் விடுதலை அன்றாடம் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். குறைந்த பட்சம் 25 விடுதலை சந்தாக்கள் இருக்கும் ஊர்களில் எல்லாம் முகவர் முறை கடைப் பிடிக்கப்பட வேண்டும்.
விடுதலை எல்லாத் தரப்பு மக்களும் பாராட்டும் வகையில் பல அம்சங்களுடன் வந்து கொண்டிருப்  பது பாராட்டத்தக்கது. மேலும் பல புதிய அம்சங்கள் இடம் பெற உள்ளன.
7. ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரம், பெண்ணுரிமைக் கோட் பாடுகள் இவை இயக்கத்தின் அடிப் படைக் கொள்கைகள் - இவற்றை பற்றிப் பிரச்சாரம் செய்வதற்கு இந்தக் காலக் கட்டம் கழகத்திற்குக் கிடைத்துள்ள வாய்ப்பும் - கடமையும் ஆகும். கோவையில் புரட்சிப் பெண்கள் மாநாடு ஏப்ரலில் நடைபெற உள்ளது.
பார்ப்பனர் அல்லாதோர் இயக்கத்தைத் தந்தை பெரியார் தொடங்கினார். அதன் காரணமாக பார்ப்பனர் அல்லாதார் குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் சமுக அந்தஸ்தும், கல்வி, வேலை வாய்ப்பும் பெற்றனர். அதற்கு மாறாக தாழ்த்தப்பட்டோர் - தாழ்த்தப்  பட்டோர் அல்லாதார் என்று பிளவுபடுத்துவது கடைந் தெடுத்த பிற்போக்குத்தனமும் தமிழர் ஒற்றுமையைச் சிதைப்பதும் ஆகும். இதனைக் கையில் எடுத்துக் கொள்  பவர்கள் யாராக இருந்தாலும் மிகப் பெரிய வீழ்ச்சியை அடை வார்கள் என்பதில் அய்யமில்லை. நம் பிரச்சாரம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
8. ஜாதி பற்றிய கண்ணோட்டம், பெண்கள் மீதான பாலியல் வன்முறை பிரச்சினைகளில் ஆர்.எஸ்.எஸ். வசமாகச் சிக்கிக் கொண்டு விட்டது. இதுதான் சந்தர்ப்பம் என்று ஒரு கல்லால் இரண்டு காய்களை வீழ்த்த வேண்டும்.
9. இயக்க வெளியீடு நமது பிரச்சாரக் களத்தில் மிக முக்கியமானது. சிறு சிறு வெளியீடுகளும், அதே நேரத் தில் அய்யா பற்றிய ஆவணங்களும் கொண்டு வரப்பட வேண்டும். தொழில் ரீதியாகப் பதிப்பகம் நடத்துபவர்களே கூட நமது வெளியீடுகள், நூல்களின் நேர்த்தியைக் கண்டு வியந்து பாராட்டுகின்றனர். புத்தகச் சந்தைகள் இடையறாது நடந்து கொண்டே இருக்க வேண்டும்.
10. என்னைப் பொறுத்தவரை கொஞ்சம் சுற்றுப் பயணத்தைக் குறைத்துக் கொண்டு, நூல்கள் எழுதுவதில் அதிகம் கவனம் செலுத்தவே விரும்புகிறேன்.
11. மாநிலக் கழகப் பொறுப்பாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்களிடமிருந்து அடுத்து என்ன செய்ய வேண்டும் - எந்த கிளர்ச்சியை நடத்த வேண்டும்? பிரச்சாரத்துக்கு இப்பொழுது எதற்கு முன்னுரிமை என்ற ஆலோசனை எனக்கு வரவேண்டும். அது ஒரு வகையில் மற்றவர்களுக்குப் பயிற்சியும் கூட!
12. தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்பது சமூக நீதித் திசையில் இந்தக் காலக் கட்டத்தில் நாம் கையில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய முக்கியப் பிரச்சினையாகும்.
13. வட மாநிலங்களில் சமூக நீதியைக் கையில் எடுத்துக் கொண்டு அதன் மூலம் தந்தை பெரியார் கருத்துகளைப் பரப்புதல் வேண்டும். வெளிநாடுகளில் கல்வி மூலம் தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்  களைக் கொண்டு செல்ல வேண்டும்.
14. நமது பிரச்சாரத்தில் தென் மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதற்கு மதுரையை மய்யப்படுத்தி தென் மாவட்டங்களில் மாவட்டத்திற்கு 2 நாட்கள் என்று எனது நிகழ்ச்சிகள் அமையும் வகையில் திட்டமிடப்படவேண்டும்.
15. மகளிர் அணி, மருத்துவ அணி தனிக் கலந்துரை யாடல் கூட்டம் விரைவில் கூட்டப்பெற்று அவற்றின் பணிகள் முடுக்கி விடப்படும்.
16. சுயமரியாதைத் திருமண நிலையத்தின் செயல் பாடுகள் விரிவுபடுத்தப்பட வேண்டும். சென்னையிலும், திருச்சியிலும் நாம் நடத்திய ஜாதி மறுப்பு, மத மறுப்பு, மணமுறிவு பெற்றோர் மற்றும் விதவைத் திருமணங் களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அனைத்துப் பகுதிகளுக்கும் அதனை விரிவுபடுத்துவோம்.
17. கழக உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியில் அமைப்புச் செயலாளர் உரத்தநாடு குணசேகரன் சிறப்பாக ஈடுபட்டு வருகிறார். 31 கழக மாவட்டங்களில் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய மாவட்டங்களில் இன்னும் ஒரு மாதத்தில் முடிக்கப்படவேண்டும்.
18. இளைஞரணி மாநில மாநாடு மே 4ஆம் தேதி இராசபாளையத்தில் நடைபெற உள்ளது. ஆயிரக்கணக் கில் இளைஞர்கள் - மாணவர்களின் அணிவகுப்பு நடத்தப்பட வேண்டும். போதிய அவகாசம் இருப்பதால் திட்டமிட்டுப் பணியை நேர்த்தியாகச் செய்ய வேண்டும்.
19. மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் கண்டிப்பாக மாவட்ட அளவில் சுற்றுப் பயணம் செய்ய வேண்டும். கிளைக் கழகக் கூட்டங்களை நடத்தவேண்டும். கூட்டம் நடக்கும் ஊர்களிலேயே மீண்டும் மீண்டும் நடத்தக் கூடாது. கிராமப் பகுதிகளிலும், புதிய இடங்களிலும் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.  அறிவியல் கண்காட்சி ஒன்றியத் தலைநகரங்களில் நடத்தப்பட வேண்டும்.
20. இலவச சட்ட முகாம்களை மூன்று மாதங் களுக்கு ஒரு முறை வெவ்வேறு இடங்களில் நடத்தலாம். வேறு யாரும் சிந்திக்காத துறை இது. மேற்கண்ட 20 அம்ச திட்டங்களை திராவிடர் கழகத் தலைவர் அளித்தார்.


திராவிடர் கழக சட்டத் துறை
தலைவர்: த.வீரசேகரன்
துணைத் தலைவர்கள்: ஓய்வுபெற்ற நீதிபதிகள் மதுரை பொ. நடராசன், சென்னை இரா. பரஞ்சோதி.
மாநில செயலாளர்: ச.இன்பலாதன், சிவகங்கை
அமைப்பாளர்: தெ.வீரமர்த்தினி.
இணைச் செயலாளர்: ப. இராசேந்திரன், மதுரை
துணைச் செயலாளர்கள்: தம்பி பிரபாகரன், சத்தியமூர்த்தி.
பொருளாளர்: கரூர் மு.க.  இராசசேகரன்.


கூட்டம் நடத்துவோர்களுக்கும், பிரச்சாரகர்களுக்கும்...
நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வோர் சொற் பொழிவாளர்களின் ஒப்புதல் இல்லாமல் பெயர்களை விளம்பரப்படுத்தக்கூடாது. நிகழ்ச்சிகளுக்கு இசைவு தந்த சொற் பொழிவாளர்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமலும் இருக்கக் கூடாது. - இவை மிக முக்கியம்!          - தலைமை நிலையம்


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...