Wednesday, December 5, 2012

கோவில்கள் பேதங்களின் உறைவிடங்களே!


பேதங்களை வளர்க்கும், ஊக்குவிக்கும் ஜாதிகளை நிரந்தரப்படுத்தும் முக்கியமான இன்றைய நிறுவனங்கள் கோவில்கள்தான்.
இந்தக் கோவிலுக்குள் எந்தெந்த ஜாதி யினர், எந்தெந்த இடம்வரை செல்லலாம் என்பதுகூட வரையறுக்கப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட ஜாதியினர் அறவே கோவிலுக் குள் நுழையக்கூடாது என்ற நிலை இருந்த துண்டு. இவையெல்லாம் பல்வேறு போராட்டங் களின் காரணமாக அதனைத் தொடர்ந்து அரசின் ஆணைகள், செயல்பாடுகள் காரண மாக மாற்றப்பட்டுள்ளன.
இருந்தாலும் கோவில் கருவறைக்குள் பார்ப்பானைத் தவிர மற்ற ஜாதியினர் செல்லக் கூடாது; அர்ச்சகராகக் கூடாது என்ற நிலை இன்றுவரை பாதுகாப்புடன் இருந்து வருகிறது.
இதனை எதிர்த்துத்தான் தந்தை பெரியார் மரண சாசனம்போல போர்க்களத்தில் நின்றார்.
தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பிறகு அன்னை மணியம்மையார் தலைமை யிலும், அதனைத் தொடர்ந்து தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமை யிலும் தொடர்ந்து பல்வகைப் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன.
தந்தை பெரியார் வாழ்ந்த காலத்திலும், தந்தை பெரியார் மறைந்த பின்பு, தமிழர் தலைவர் காலகட்டத்திலும் இரண்டு முறை இதற்கான சட்டங்கள் தி.மு.க. அரசால் மானமிகு கலைஞர் அவர்களின் தலைமை யிலான அரசால்  இயற்றப்பட்டும், பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்று சட்டத்தைச் செயல்படுத்த முடியாமல் முடக்கி யுள்ளனர்.
தமிழ்த் தேசியம் பேசுவோர், ஜாதியவாதம் பேசுவோர் இவற்றைப்பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை. ஒட்டுமொத்தமாக எல்லா ஜாதி தமிழர்களையும் சேர்த்துத்தான் சூத்திரன் (கீழ்ஜாதி மகன், வேசி மகன்) என்று சொல்லும் கேவலம் இன்றுவரை நீடிக்கிறது.
தாழ்த்தப்பட்டவர்கள் உள்பட, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கிட்டும் போது, ஒடுக்கப்பட்ட மக்களிடத்தில் உள ரீதியான பெரிய மாற்றம் நிகழும் - இதனை சென்னையில் கடந்த முதல் தேதி நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆழ்ந்த பொரு ளோடு சுட்டிக்காட்டுகிறது. தாழ்த்தப்பட்டவர் களை கீழ்ஜாதியினர் என்று நோக்கும் பார்வை அடிபட்டு வீழும்.
இன்னொரு கொடுமையை தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறை ஒரு சுற்றறிக்கையின்மூலம் செய்துள்ளது.
மாற்றுத் திறனாளிகள் தோல் செயற்கை உறுப்புகளுடன் கோவிலில் வழிபட உரிமை இல்லை என்பதுதான் அந்தச் சுற்றறிக்கை.
சிவபெருமானே புலித்தோலை இடுப்பில் அணிந்துள்ளான் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக்கொண்டு, மாற்றுத் திறனாளிகள் தோல் செயற்கை உறுப்புகளுடன் செல்லக் கூடாது என்பது முரண்பாடு அல்லவா என்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவின் தீர்மானத் திற்கு என்ன பதில் சொல்ல முடியும்?
இந்தச் சுற்றறிக்கை உடனே விலக்கிக் கொள்ளப்படவேண்டும். இல்லையெனில், இந்தப் பிரச்சினையை திராவிடர் கழகம் கையில் எடுத்துக்கொள்ளும் என்பதை எச்சரிக் கையாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...