Tuesday, December 18, 2012

சார்வாகம்


டாக்டர் ரொமிலா தாபர் இன்று வாடும் வரலாற்று ஆசிரியர் களில் - சிறப்பு மிக்க வரலாற்றுப் பெண்மணி. வரலாற்றைப் புதிய கோணத்தில் பார்த்து வருபவர்.
2002இல் பண்டைய இந்திய வரலாறு எனும் அவருடைய நூலை பெங்குயின் நிறுவனம் வெளியிட்டுள் ளது. அந்நூலில் பக்.164ல் சமீப காலம் வரை இந்தியத் தத்துவம் ஏறக்குறைய உலோகயதவாதத்தைப் புறக்கணித்து வந்துள்ளது என்று பொதுவாக எண்ணப்பட்டது என்று குறிப்பிட்டார்.
ஆனால் அறிஞர்கள் இப்போது பரவலாக பண்டைய ஆன்மிக இந்தியாவில் நாத்திக உலோகாயத வாதம் எதிர்கொள்ள வேண்டிய சக்தியாக விளங்கியது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அதாவது பண்டைய இந்தியாவில் 2500 ஆண்டுகளுக்கு முன் நாத்திகக் கோட்பாடு வலிமை மிக்க தத்துவமாக விளங்கியுள்ளது.
பொதுவாக இந்துச் சமயத்திற்கு பார்ப்பனீயத்திற்கு, ஆரியக் கோட் பாடுகளுக்கு எதிரானவற்றையெல் லாம் நாத்திகம் என்றே கூறினர். அந்த வரிசையில் புத்தரும், வர்த்த மான மகாவீரரும் நாத்திகர்கள்; பௌத்தமும், சமணமும் நாத்திகத் தத்துவங்கள்.
ஆனால் இந்தியத் தத்துவத்தில் சார்வாகம் என அழைக்கப்பட்ட இந்த உலோகயதக் கோட்பாடுகள் புத்த மதத்திற்கும் முந்தியவை. இதன் ஆசிரியரான சார்வாகர் என்பவர் பெயராலேயே சார்வாகம் என்று அழைக்கப்பட்டது. சார்வாகா என்பது சார்வாக எனும் வடமொழியிலிருந்து தோன்றியது. பார்ஹஸ்பத்ய சூத்ரம் என்பதின் ஆசிரியரான சார்வாகா பெயரில் தோன்றியது. இந்தக் கோட்பாட்டை நிறுவியவர் விஹேஸ்பதி என்று கருதப்படுகிறது.
சார்வாகாவிற்கு மற்றொரு பெயர். லோகாயதம் (உலோகாயதம்) ஆங்கிலத்தில் Materialism என்று பெயர்.
உலோகாயதம் என்பதற்குப் பல் வகையில் பொருள் கூறப்படுகிறது. அவைகளில் சிலவற்றைக் காண்போம்.
1) பொதுவான புனித நிலைமை யற்ற கடவுள் அல்லது புனித மானவை என்பவற்றின் மீது வெறுப் பைக் காட்டும் அடிப்படையைக் கொண்ட முறை.
2) போலியான வாதம் அல்லது சொற்புரட்டைக் கையாளும் கலை (Sophistry).
3) நாம் வாழும் இந்த உலகத்தைத் தவிர வேறு உலகம் அதாவது நரகலோகம், சொர்க்கலோகம், பரமண்டலம், விண்ணுலகம் என்று வேறு உலகங்கள் எதுவும் கிடையாது என்னும் தத்துவம்.
சார்வாகரின் கோட்பாடு இன் றைய கடவுள் மறுப்பாளர், நாத்திகர் டேவிட் ஹியூம், அளவையியலார் கருத்துக்களில் எதிரொலிக்கக் காணலாம்.
சார்வாகா உணர்வினால் அறியப்படுவது மட்டுமே தகுதியான அறிவு என்று குறிப்பிட்டு, யூக அறிவை எதிர்த்துக் குரல் கொடுத் தார். யூக அறிவு என்பது உண்மை யான அறிவு இல்லை, தகுந்த அறிவு இல்லை என்பதால், தலைவிதி, ஆன்மா, மரணத்தின்பின் வாழ்க்கை என்று எதுவும் கிடையாது. அவை இருக்கின்றன என்று கூறுவது மடத்தனமானது. ஏனென்றால் பரிசோதித்துப் பார்க்க முடியாத இது போன்ற கூற்றுகள் உண்மையற்றவை.
எல்லாப் புனித நூல்களையும் - அதாவது வேதம், வேதாந்தம், புராணம் உள்ளிட்ட அனைத்தையும் சார்வாகர் மறுத்துரைத்தார். அவர்கள் புனிதமானவை என்று கூறும் புனித நூல்கள் எனப்படுபவை மூன்று குறைபாடுகள் உள்ளவை. அதாவது பொய்யானவை, ஒன்றுக்கொன்று தானே முரண்பாடுடையவை,. அய்யத்திற்குரியவை.
ஆம்? நாம் இன்றைக்கு எதிர்த்து உரைப்பதைத் தந்தை பெரியார் தம் சுய சிந்தனையில் பட்டதை அன்றே சார்வாகா கூறினார்.
எல்லா வடிவங்களுக்கும் மண், நீர், நெருப்பு, காற்று ஆகியவை தான் அடிப்படை எல்லாம் பொருள்களும் அதனால் உருவானவை. உடலின் பருப்பொருளினால் விழிப்புணர்வு ஏற்படுகிறதுடன் உடலையே உருவாக்குகிறது. ஆன்மா என்பது எதுவுமில்லை. உடலோடு எல்லாம் அழிந்து போகின்றன.
அஜிதா கேஷகாம்பலின் எனும் மிகவும் குறிப்பிடத்தக்க சார்வாக தத்துவ ஞானி, புத்தர் காலத்தில் வாழ்ந்தவர்கள் உண்மையில் மனிதர் கள் மண்ணிலிருந்து மண்ணுக்கு, சம்பலிலிருந்து சாம்பலுக்கு, தூசியிலி ருந்து தூசிக்குச் செல்கிறார்கள் என்றார்.
மனிதனின் உடல் நான்கு மூலகங் களால் ஆனது (மண், நீர், நெருப்பு, காற்று) மனிதன் இறக்கிற, போது மொத்த மண்ணில் மண் சேர்கிறது, தண்ணீர் தண்ணீரோடு சேர்கிறது, நெருப்பு நெருப்போடு சேர்கிறது, காற்று காற்றோடு கலக்கிறது. அவனுடைய உணர்வுகள் விண்ணில் மறைகின்றன. நான்கு மனிதர்கள் சவத்தைச் சுமந்து செல்கிறார்கள். சுடுகாடு வரை அவர்கள்  அவர்களின் கற்பனைப் பேச்சு செல்கிறது. அதன்பின் இறந்தவனின் எலும்புகள் புறாவின் இறகுகளின் நிறத்தை அடைகின்றன. அவனுடைய தியாகங்கள் நெருப்பில் முடிகின்றன. தானம் செய்யச் சொல்பவர்கள் முட்டாள்கள் பொய் பேசுபவர்கள் அதன்பிறகு ஆன்மா வாழ்கிறது என்பவர்கள் வீண் பேச்சுப் பேசுபவர்கள் உடல் இறக்கிறபோது முட்டாளும், அறிவாளியும் அழிந்து போகிறார்கள். அவர்கள் இறப்பிற்குப் பின் வாழ்வதில்லை.
(திகாரிகாயா 1.55 மொழி பெயர்ப்பு ஆங்கிலத்தில் ஏ.எல். பாஷாம், தி ஒண்டர் தேட் வால் இண்டியா, பக்.296).
சார்வாகாவின் கருத்துப்படி ஆன்மா என்பது உடலோடு சேர்ந்தது. அதன் பிறகு அது உடலை விட்டுத் தனியே கிடையாது. உலகம் மட்டும் இருக்கிறது. அதற்குப் பிறகு எதுவுமில்லை.
வேதங்கள் என்பவை பொய் புனை சுருட்டு - பயத்தினாலும், சடங்குகளா லும்  மனிதர்களைப்  பணிய வைக்க பயன்படுபவை; இயற்கையில் நல்லது கெட்டது கிடையாது. தெய்வீக ஆற்றல் என்பது இருந்தது என்பதற்கு வரலாற்றில் எந்த ஆதாரமும் கிடையாது.
மகிழ்ச்சியும், வலியும் வாழ்க்கை யின் மய்ய உண்மைகள். நல்லது கெட்டது என்பவை எல்லாம் நிலை யானவை அல்ல. அவை சமூகப் பழக்க வழக்கங்கள்.
எனவே சார்வாகர் போதித்தார் வாழ்க்கை என்பது உன்னுடையது. எனவே மகிழ்ச்சியாக வாழ் யாரும் மரணத்தின் தேடுகண்களிலிருந்து தப்பிக்க முடியாது.
இந்த நம்முடைய சட்டத்தை அவர்கள் எரித்துவிட்ட பிறகு அது எப்படி மீண்டும் தோன்றும் சார் வாகர் சமயச் சடங்குகளைக் கேலி செய்தார். அவை பார்ப்பனர்களால் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு என்று கண்டுபிடிக்கப்பட்டவை என்றார்.
வேதங்களின் படைப்பாளிகள் பபூன்கள், கோமாளிகள், பிசாசுகள் என்றார். இறந்தவர்களுக்குச் சடங்கு கள் என்ற பெயரில் உணவு படைப் போர் தங்களைச் சுற்றியுள்ள பசித் தவர்களுக்கு ஏன் உணவளிப்ப தில்லை.
பவுத்தம் சமணத்தைப் போல் சாரவாகர்கள் சாதி முறையைக் கடுமையாக விமர்சித்தார்கள். விலங்கு களைப் பலியிடும் சடங்குகளை எதிர்த்தார்கள்.
பார்ப்பனர்கள் தாங்கள் பலியிடும் விலங்குகள் நேரே சொர்க்கலோகம் போவதாக விலங்குகளைப் பலியிடு தலுக்கு ஆதரவாகக் கூறியபோது, பார்ப்பனர்கள் ஏன் வயதான தங்கள் பெற்றாரைக் கொன்று அவர்கள் விரைந்து சொர்க்கலோகம் சேரச் செய்யவில்லை.
உடலிலிருந்து பிரியும் அவன மற்றொரு உலகிற்குச் செல்கிறான் என்றால் மீண்டும் அவன்மீது அன்பு செலுத்தும் உறவினர்களிடத்துத் திரும்பி வருவதில்லை.
இவ்வாறான தத்துவங்களைப் பார்ப்பனீயம், ஆன்மா, மோட்சம், வேதம், மரணத்தின்பின் மறுபிறப்பு ஆகியவற்றிற்கு எதிராகக் கூறிய சார்வாகர் யார்? அவருடைய வாழ்க்கை வரலாறு யாது? நமக்குத் தெரிவதெல்லாம், நமக்குக் கிடைத்திருப்பதெல்லாம் பண்டைய இந்தியாவில் வாழ்ந்த, புத்தருக்கும் முன் வாழ்ந்த நாத்திகர் களில் ஒருவர் சாராகர் என்பரே அறிஞர்கள் சாராகரின் கோட் பாடுகள் அவருக்கும் முந்திய நாத்திகக் கோட்பாடு ஆன லோகாயதம் என்பதன் அடிப்படையில் அமைந் தது. அதனைத் தம் லோகாயத சூத்திரங்கள் என்பதில் பிருஹஸ்பதி எனும் தத்துவ ஞானி உருவாக்கினார் என்பர். சாராகரின் வாழ்க்கை குறித்தோ, பிருஹஸ்பதியின் வாழ்க்கை குறித்தோ அல்லது அவர்களின் மூலப்படைப்பு கள் குறித்தோ எதுவும் கிடைக்க வில்லை. இந்தியத் தத்துவ ஞானிகள் அவர்களின் படைப்பு களில் தங்கள் மறுப்புக்களைத் தெரிவிக்க மேற்கோளாகக் குறிப்பிட்டவை தான் நமக்குக் கிடைக்கின்றன.
சாராகா கோட்பாட்டில் கிடைத் துள்ள ஒரே ஒரு படைப்பு தத்வோ பாப்லாவசிம்ஹா (எல்லாக் கோட் பாடுகளையும் புரட்டிப் போடுவது என்பது இதன் பொருள்)
இதனை எழுதியவர் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெயரசி பட்டா என்பவர் ஆவார். முழுமை யான நிஹிலியக் கோட்பாட்டை எடுத்துக் கூற இந்தநூலில் ஜெயரசி பட்டா எதிரான கோட்பாடுகள் - ஆத்திகம், நாத்திகம் ஆகியவற்றை மறுக்க முயலுகிறார்.
சார்வாகாவைப் பின்பற்றியவர்கள் இறையியல், ஊகக் கோட்பாடு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதை நம்பினார்கள். எல்லாப் பொருள்களின் உண்மையான இயல்பைக் கண்டறியும் உண்மை யான வழி நேரடியாக உணர்வு பூர்வமாக உணர்ந்து அறிவதே. பிரத்யக்க்ஷா என்று இதற்குப் பெயர்.
வேதத்தைப் பின்பற்றியவர்கள், புத்தர்கள் கடைப்பிடித்த துறவறம், தவம் என்றும் உலகப் பழக்க வழக் கங்களை சார்வர்கள் மறுத்தனர். அதற்குப் பதிலாக உடல் இன்பத்தை எடுத்துக் கூறினர். நல்ல வாழ்க்கை என்பது நெய் சாப்பிடுவது பண்டைய சிந்தியர்கள் வாழ்வை உறுதிப்படுத்து வது, செல்வத்தின் அடையாளம் என்று நெய்யைக் கருதினார்கள்.
(தொடரும்)
- முனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...