Monday, November 19, 2012

திராவிடத்தை ஏற்காதவர்களை தமிழர்கள் ஏற்க மாட்டார்கள்


தி.மு.க. இளைஞரணி கூட்டத்தில் கலைஞர் பேச்சு
சென்னை, நவ.19- திராவிடத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களை, தமிழர்கள் ஏற்க மாட்டார்கள்  என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார். மறைமலை நகரில் நேற்று (18.11.2012) திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் - துணை அமைப்பா ளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம், கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்  தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-
1944ஆம் ஆண்டு வாக்கில், திருச்சி மாநகரத்திலே தந்தை பெரியார் அவர்களின் தலைமையிலே, திராவிடர் கழக வாலிபர்கள் மாநாடு ஒன்று நடத்தப்பட்டு, அதில் கலந்து கொண்ட பெரியார் அவர்கள், வழக்கம் போல் எதிரே அமர்ந்திருக்கின்ற மக்களை விளிக்கும் போது, ``தலைவர் அவர்களே! அமைப்பாளர் அவர்களே! என்று கூறி விட்டு, ``என் வாலிப ஜீவரத்தினங்களே! என்று நா தழுதழுக்கக் கூறினார். அதையே நான் உங்களையெல்லாம் பார்க்கும்போது கூறலாம்போல் இருக்கிறது (பலத்த கைதட்டல்).
பெரியார் சொன்னது போல் ``என் வாலிப ஜீவரத்தினங்களே!
பெரியார் அவர்களுடைய உள்ளத்திலே எத்தகைய கிளர்ச்சி, எத்தகைய உணர்வு பீரிட்டு எழுந்தது என்பதற்கு ``என் வாலிப ஜீவரத்தினங் களே! என்று அவர் குறிப்பிட்டது இன்னமும் என்னுடைய நினைவிலே நிழலாடிக் கொண்டிருக் கிறது. அது நினை விற்கு வந்ததற்குக் காரணம்,  உங்களையெல் லாம் பார்த்ததும், ``என் வாலிப ஜீவரத்தினங் களே! என்று சொல்லத் தோன்றுகிறது (பலத்த கைதட்டல்). ஆகவே, அவ்வாறே விளிக்கின்றேன். பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களே! வரவேற்புரையாற்றிய தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே! முதன்மைச் செயலாளர் அவர்களே! துணைப் பொதுச் செயலாளர் தம்பி துரைமுருகன் அவர்களே!  துணைப் பொதுச் செயலாளர்களே,  பட்டி மன்றம் நடத்தி உங்களை யெல்லாம் மகிழ்வித்த நகைச் சுவைத் தென்றல் திண்டுக்கல் லியோனி அவர்களே! காலையிலே உரையாற்றிய தம்பி திருச்சி சிவா எம்.பி. அவர்களே! பேராசிரியர் சபாபதி மோகன் அவர்களே! பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களே! காஞ்சி புரம் மாவட்டக் கழகத்தினுடைய செயலாளர் தம்பி தா.மோ.அன்பரசன் அவர்களே! இளைஞர் அணியின் அமைப்பாளர், துணை அமைப்பாளர் களே! தலைமைக் கழக, மாவட்டக் கழகச் செயலாளர்களே! வருகை தந்துள்ள என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே!
இன்று காலையிலே இருந்து இதுவரையில் மறைமலைநகரில், தமிழ்ப்  பிரவாகமெடுத்து பொங்கி வழிந்தது. அருமையான கருத்துக்கள், சுய மரியாதைக் கருத்துக்கள், சீர்திருத்தக் கருத்துக்கள், அரசியலில் அனுபவமிக்க கருத்துக்கள்; அனைத்தும் எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இளை ஞர் அணி என்று சொல்லும்போது சில நண்பர்கள், ஏன் - சில மகா வித்வான்களே கூட, `திராவிட என்ற சொல் தீய சொல். `திராவிடம் என்ற சொல்லை, அந்த இயக்கத்தை நாங்கள் அழித்தே தீருவோம் - என்று புஜம் தட்டிப் புறப்பட்டிருக்கிறார்கள். நான் அவர்களுக்காகப் பரிதாபப்படுகின்றேன். நீங்கள் திராவிடத்தை அழிக்க புஜம் தட்டி இன்றைக்குப் புறப்பட்டிருக்கிறீர்கள் என்றால், ஏன் புறப்பட்டி ருக்கிறீர்கள் என்றால், முன்பொரு காலத்தில் அதே புஜத்தைத் தட்டி எங்களிடத்திலே, `எத்தனை சீட்டுகள் தருவீர்கள்? என்று கேட்கின்ற காலமும் ஒன்று வரும். ஆகவே, நாங்கள் திராவிடத்தை அழித்தே தீருவோம் என்று சொல்லுகின்றவர் களுக்கு ஒன்று கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன். திராவிடத்தால்தான் நீங்கள் உங்களுடைய கட்சியைக் கூட  நிற்க வைத்திருக்கின்றீர்கள்.
ஏன் `திராவிடம் என்றால் சில பேருக்கு இன்றைக்குக் கசக்கிறது? `திராவிடம் என்றால் பேராசிரியர் அன்பழகனார் அவர்களோ, அல்லது இந்தக் கருணாநிதியோ, அல்லது காலையிலே  பேசியே மூன்று தம்பிமார்களோ, ஸ்டாலினோ,  கொண்டு வந்து இங்கே  வைத்திருக்கின்ற புதிய செடி அல்ல. அது ஏற்கெனவே - நம்முடைய சுப. வீர பாண்டியன் இன்றைக்கு மாலையிலே பேசும்போது குறிப்பிட்டாரே, அதைப்போல, நடேசனார் நட்டு வைத்த செடி. அந்தச் செடி இன்றைக்கு வளர்ந்து மரமாகி, வேர் விட்டு, பல பறவைகள் வந்து தங்கவும், சில நன்றி கெட்ட பறவைகள், நிழல் தந்த மர மாயிற்றே  என்று பார்க்காமல், எச்சம் இட்டுச் செல்லவும் - இப்படியெல்லாம் விளங்குகின்ற இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். `திராவிட  என்பது ஒரு இனத்தின் பெயர் - தமிழ் பேசும்  மக்களின் பெயர்!
`திராவிட என்ற சொல்லை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று யார் யாரோ புறப்பட்டிருக் கிறார்கள். அகில உலகத்தில், ஏன் இன்னும் சொல்லப் போனால் --குறிப்பாகச் சொல்ல வேண்டு மேயானால், அனைத்து இந்தியாவில் இவர்க ளுடைய அங்கீகாரம் கிடைக்காத காரணத் தால்தான் நாங்கள் திராவிடம் பற்றிப் பேசக்கூடாது என்று சொல்லுகிறார்கள்போலும். `திராவிட எங்கே இல்லை? `திராவிடம் என்பது பெரியார் எங்களுக்கு நினைவுபடுத்திய வார்த்தை. அவர் உருவாக்கிய வார்த்தை என்று சொல்லமாட்டேன். அண்ணா உருவாக்கிய சொல் என்று சொல்லமாட் டேன். அண்ணாவும், பெரியாரும், திரு.வி.க. போன்ற வர்களும் எங்களுக்கு நினைவுபடுத்திய வார்த் தைதான் `திராவிட என்ற அந்த இனப் பெயர்.  `திராவிட என்ற சொல்லில் என்ன இழிவு இருக்கிறது? அது விஷம் என்று கலை உலகத்திலே உள்ள ஒரு தம்பி கூடச் சொல்வதாக நான் ஒரு பத்திரிகையிலே படித்தேன். இங்கே பேசியவர்களும் குறிப்பிட்டார்கள். ஆனால், நான் அவர்களுக்கும் சொல்லுகின்றேன், அந்தச் செய்திகளை ஏடுகளிலே படித்து விட்டு, பெருமூச்சு விடுகின்ற தம்பி மார்களுக்கும் சொல்லுகின்றேன். யாரும் கவலைப் படத் தேவையில்லை. `திராவிடம் என்பது நச்சுச் சொல்; `திராவிடம் என்பது விஷச் சொல்; `திராவிடம் என்பது நம்மையெல்லாம் மௌடீகத்திற்கு ஆளாக் குகின்ற ஒரு சொல் என்று குறிப்பிடுகின்றவர் களையும் சேர்த்து நான் கேட்க விரும்புகின்றேன்; `திராவிடம் என்ற சொல்லை யாரும் பயன் படுத்தியதே கிடையாதா?
``ஜன கண மன அதிநாயக ஜெயஹே பாரத பாக்ய விதாதா
பஞ்சாப சிந்து குஜராத்த  மராட்டா திராவிட உத்கல வங்கா
என்று பாடுகிற தேசிய கீதத்திலே இருக்கிற `திராவிட என்ற வார்த்தையை அழித்து விட்டு எங்களிடத்திலே வாதாட வாருங்கள். அதற்கு உங்களுக்கு  வீரம் இருந்தால், விவேகம் இருந்தால், அதை மறைத்து விட்டு, அதை `ஜன கண மன என்ற பாடலிலே இருந்து எடுத்து எறிந்து விட்டு, எங்களோடு வாதாட வாருங்கள்.
``நீராரும் கடலுடுத்த என்று பாடிய சுந்தரம் பிள்ளை `திராவிடத்தை ஏற்றுக் கொள்ளவில் லையா? இந்த நகருக்குப் பெயராக அமைந்துள்ள மறைமலை அடிகளார் திராவிடத்தை ஏற்றுக் கொள்ளவில்லையா? திரு.வி. கல்யாணசுந்தரனார் திராவிடத்தை ஏற்றுக் கொள்ளவில்லையா? ஒரு காலத்திலே அண்ணா அவர்களிடத்திலே வாதாடி னார் திரு.வி.க. `திராவிட என்ற சொல்லை சில பேர் மறுக்கிறார்களே, அதை விட்டுவிட்டால் என்ன என்று கூட கேட்டார். பிறகு, கடலூரில் நடை பெற்ற திராவிட இயக்க மாநாட்டில் அவரும் கலந்து கொண்டு, மூன்று முறை சொல்வேன், நான் சொல் வதை நீங்களும் சொல்லுங்கள் என்று சொல்லி விட்டு, அங்கு கூடியிருந்த மக்கள் பெரு வெள்ளத் தில், ``திராவிட நாடு, திராவிட நாடு, திராவிட நாடு என்று திரு.வி.க. அவர்கள் மூன்று முறை சொல்லி, அதை அங்கே குழுமியிருந்த லட்சக்கணக்கான மக்கள் எதிரொலித்தார்கள். ஏன் இதைச் சொல்லு கின்றேன் என்றால், ஜன கண மன பாட்டிலே மாத்திரமல்ல.... இன்றைக்கும் சென்னை கடற்கரை யிலே நடந்து செல்லுகின்றவர்கள் கொஞ்சம் திரும்பி அங்கே இருக்கின்ற மாநிலக் கல்லுரியைப்  பார்த்தால், அங்கே  கடற்கரைச் சாலையிலே இருக்கின்ற ஒரு பெரிய கட்டிடத்திற்கு முன்னால் ஒரு பெரிய கல் வைக்கப்பட்டிருக்கும் - கறுப்புக் கல். அந்தக் கல்லில் என்ன எழுதப்பட்டிருக்கும் தெரியுமா? டாக்டர் உ.வே.சாமிநாத அய்யருடைய சிலை. அந்தச் சிலைக்குக் கீழே அவரைக் குறிப்பிடு கின்ற புகழுரையும், பட்டமும், பெயருமாக  என்ன குறிப்பிடப்பட்டிருக்கிறது தெரியுமா? ``மகா மகோ பாத்யாய, டாக்டர் திராவிட வித்யா பூஷண உ.வே. சாமிநாதய்யர் என்று எழுதப்பட்டிருக்கும். முதலில், திராவிட என்ற வார்த்தையை கூடாது என்ப வர்களே! உங்களுக்கு  வீரம் இருந்தால் அதைப் போய் உடைத்தெறியுங்கள்! உடைத்தெறிந்து விட்டு, `திராவிடம் என்று யாரும் பேசக்கூடாது என்று சொல்லுங்கள்.   `திராவிடம் என்பது நச்சுச் சொல் அல்ல! உச்சரிக்கக் கூடாத  வார்த்தை அல்ல! குறிப்பிடக்கூடாத வார்த்தை அல்ல, அந்தச் சொல் ஒரு இனத்தின் பெயர். தமிழன் என்றால் அந்த மொழி பேசுகின்ற மக்களின் பெயர்.  அந்தத் தமிழனும்  சேர்ந்திருக்கின்ற இடத்திற்குப் பெயர் திராவிட இனம். அந்தத் திராவிட இனத்தின் பெயரைத்தான் நாம் இன்றைக்கு சூட்டிக் கொண்டிருக்கிறோம்.
திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு அல்ல, எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி, ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு  முன்பிருந்து இன் றைக்கு தமிழ்நாட்டு மக்களுடைய உள்ளத்திலே ஊடுருவி திராவிட இனம் என்று ஒன்று உண்டு, அந்த இனம் - ஆரிய இனம் வேறு, திராவிட இனம் வேறு என்று சுட்டிக்காட்டுவதற்காகமட்டுமே பெரியார் அவர்களால், அண்ணாஅவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சொல் அல்ல.  அந்த இனம் நம்மு டைய பூர்வீக இனம், நம் முடைய முப்பாட்டன் வாழ்ந்த இனம், இன்றைக் கும் நம்முடைய வீரவரலா றுகளை ஒலித்துக் கொண்டி ருக்கின்ற இனம் திராவிட இனம். அப்படிப் பட்ட இனத்தை, அந்த இனத்தி னுடைய உரிமை களைப் பெறுவதற்காகப் பாடுபடு கின்ற, பணியாற்று கின்ற இயக்கம் திராவிட முன் னேற்றக் கழகம் என்பதை நான் இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
தி.மு.கழகத்தின் லட்சியங்களை - எண்ணங்களை மக்களிடம் சேர்க்கும் தூதுவர்களாக மாற வேண்டும்
அய்ந்தாயிரம் பேர் தம்பி ஸ்டாலின் அவர்க ளுடைய முயற்சியால் ஆங்காங்கு உள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களுடைய அயராது பணியினால் இன்று இளைஞர் அணியிலே சேர்ந்திருக்கின்றீர்கள்.  உங்களு டைய பணிகள் எல்லாம்  என்ன என்பதை வகுத்துக் கொள்ள வேண்டும்.  ஒரு நாள் இப்படி மறைமலை நகரிலே கூடினால் மாத்திரம் போதாது, அடிக்கடி சிறு சிறு குழுக்களாக அமர்ந்து பேச வேண்டும்.  அந்தக் குழுக்கள் கட்சிக்குள் ஏற்படு கின்ற வேறு கட்சியிலே ஏற்படுகின்ற குழுக்களைப் போன்ற குழுக்களாக இருக்கக்கூடாது.  அந்த குழுக்கள் எல்லாம் நம்முடைய லட்சியங்களை வென்றெடுக்க என்ன திட்டங்களைத் தீட்டலாம், என்னென்ன செயல்களிலே இறங்கலாம், என்று சிந்திக்கின்ற, செயல்படுகின்ற குழுக்களாக அந்தக் குழுக்கள் அமைய வேண்டும் என்று உங்களை யெல்லாம் நான் கேட்டுக் கொள்கிறேன்.
அப்படிப்பட்ட குழுக்களில் நீங்கள் வென்றெடுக் கின்ற - நீங்கள் தேர்ந்தெடுக்கின்ற பல்வேறு கருத்துக் களை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து மக்கள் இடத்திலே பிரச் சாரத்தைச் செய்ய வேண்டும்,  மக்கள் இடத்திலே எடுத்துச் செல்ல  வேண்டும். நாங்கள் பேசுகின்ற பேச்சுக்கள், எழுதுகின்ற எழுத்துக்கள், எடுக்கின்ற முடிவுகள் இவைகளையெல் லாம் மக்களிடத்திலே எடுத்துச் சொல்லுகின்ற தூதுவர் களாக நீங்கள் எல்லாம் மாற வேண்டும் என்று இன்றைக்கு காலையிலே இருந்து இங்கே அமர்ந்து எங்களு டைய உரையைக் கேட்டுக் கொண்டிருக்கின்ற நண்பர்களுக்கு, இளைஞர்களுக்கு, வாலிபர்களுக்கு நான் மிகுந்த பணிவன்போடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். பெரியார் சொல்லுவார்; ஒரு கட்சியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு,  என்று நீங்கள் சொன்னால் - கடமையும், கண்ணியமும் கூட அடுத்தபடியாக  இருக்கட்டும், முதலாவதாக கட்டுப்பாடு மிக மிக முக்கியம் என்று பெரியார் எங்களிடத்திலே  சொல்லி யிருக்கின்றார்.  `உங்க ளுடைய கட்சியிலே அண்ணா சொன்னார் என்று கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். அந்தக் கடமையும், கண்ணிய மும் இரண்டாவது, மூன்றாவதாக இருக்கட்டும். கட்டுப்பாடுதான் மிகமிக முக்கியம் என்று - `கட்டுப்பாடு மீறினால் அந்தக் கட்சி உருப் படாது என்று பெரியார் பலமுறை சொல்லியிருக்கிறார். அப்படி உருப்படாமல் போன கட்சிகளை இன் றைக்கு நாட்டிலே பார்க்கின்றோம்.
அந்தக் கட்சி களில் ஒன்றாக நாம் சேர்ந்து விடாது இருக்க வேண்டுமேயானால் கட்டுப்பாட்டோடு நம்முடைய உணர்வுகளை, நம்முடைய எண்ணங்களை, லட்சியங்களை எடுத்துச் சொல்லவேண்டிய அந்தக் கடமையை ஆற்ற வேண்டும், ஆற்ற வேண்டும் என்று நான் இங்கே பயிற்சி பெற்றிருக்கின்ற என்று சொல்லமாட்டேன். இங்கு வந்து காலையிலே இருந்து குழுமியிருக்கின்ற ஐந்தாயிரத் திற்கும் மேற்பட்ட நம்முடைய  இளைஞர்களை யெல்லாம் கேட்டுக் கொள்கிறேன். உங்களுடைய எதிர்காலம், தமிழகத்தினுடைய எதிர் காலம்  (பலத்த கைதட்டல்) உங்களுடைய வருங் காலம்தான் தமிழகத்தை வாழ வைக்கக் கூடிய காலம்.  ஆகவே உங்களை நம்பித் தான் நாங்கள் இருக்கின்றோம். (பலத்த கைதட்டல்) உங்களை நம்பித்தான் இந்த இயக்கம் இருக்கிறது.  (பலத்த கைதட்டல்)  எங்களை நம்பி பெரியார் இயக்கத்தை ஆரம்பித்தார், எங்களை நம்பி அண்ணா இயக்கத்தை வளர்த்தார், நான் உங்களை நம்பி இந்த இயக்கத்தை உங்களுடைய கரங்களிலே ஒப்படைக்கின்றேன். காப்பாற்றுங்கள்! தமிழர்களு டைய மானத்தைக் காப்பாற்றுங்கள்! (பலத்த கைதட்டல்), தமிழர்களுடைய சுயமரியாதையைக் காப்பாற்றுங்கள்! (பலத்த கைதட்டல்) யாரோ சில பேர் திராவிடர் என்ற சொல்லை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றால் போனால் போகிறார்கள், ஏற்றுக் கொள்ள வேண்டாம் போகட்டும்! திராவி டன் என்றால், நான் தாசி மகன் அல்ல, திராவிடன் என்றால் நான்  சூத்திரன் அல்ல, திராவிடன் என்றால் நான் அடிமை அல்ல,  திராவிடன் என்றால் ஆண்ட பரம்பரை (பலத்த கைதட்டல்).
``ஆண்ட இனத்தால் மீண்டும் முற்றுகை மாண்டிடும் புழுவே மகுடம் கழற்று!
என்று அன்றைக்குக் கவிதை எழுதியவன் நான்.  ஆண்ட இனத்தால் மீண்டும் முற்றுகை, மாண்டிடும் புழுவே மகுடம் கழற்று என்று கூறியவன் நான். அந்தக் கருணாநிதி இன்றைக்குச் சொல்லுகின்றேன்.  திராவிடத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களை இந்த நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை, திரா விடத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். திராவிடத்தை ஏற்றுக் கொள் ளாதவர்கள் நல்லதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். திராவிடத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் தமிழை ஏற்றுக் கொள்ள மாட் டார்கள்.  திராவிடத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் தமிழ் உணர்வை ஏற்றுக் கொள்ளாதவர்கள். திராவிடத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள், அண் ணாவை ஏற்றுக் கொள்ளாதவர்கள், பெரியாரை ஏற்றுக்கொள்ளாதவர்கள், தன்மானத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள், ஆகவே அவர்களை புறந்தள்ளி நாம் நம்முடைய பாதையிலே நேர்மையாக, நெறியாக, கட்டுப் பாடாக, கண்ணியமாக, அனை வரையும் நண்பர்களாக ஆக்கிக்கொண்டு குழு மனப்பான்மைக்கு துளியும் இடம் தராமல் இந்த இயக்கத்தைக் கட்டிக்காக்க இந்த நாளில் - மறை மலைநகரில் உறுதி கூறுவோம், உறுதி கூறுவோம் என்று கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன். -இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் உரை யாற்றினார்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...