Thursday, November 1, 2012

நவம்பர் 4இல் சிறீரங்கம் திருவானைக்காவலில் தமிழர் தலைவர் பேசுகிறார்!



காவல்துறை அனுமதி மறுப்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது
இனஉணர்வாளர்களும், கருஞ்சட்டை வீரர்களும் திரளுகின்றனர்!

- நமது தனிச் செய்தியாளர்

மதுரை நவ.1- சிறீரெங்கத்தில் பிராமணாள் உணவு விடுதி விளம் பரத்தை எதிர்த்து திராவிடர் கழகம் நடத்தவிருந்த பொதுக் கூட்டத்திற்குக் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் உயர்நீதிமன்றம் (மதுரை) காவல்துறையின் அனுமதி மறுப்பை ரத்து செய்து நவம்பர் 4ஆம் தேதி திராவிடர் கழகம் பொதுக் கூட்டத்தை நடத்திட ஆணை பிறப்பித்தது.

திருச்சி - சிறீரெங்கத்தில் கிருஷ் ணய்யர் டிபன் சென்டரின் விளம்பரப் பலகையில் திடீரென்று பிராமணாள் என்ற பெயர் முளைத்தது.

1957இல் - தந்தை பெரியார் அறிவிப்பு

தமிழ்நாட்டில் உணவு விடுதிகளில் பிராமணாள் என்று விளம்பரப் பலகைகளில் இடம் பெற்று இருந்ததை எதிர்த்து அதனை அழிக்கும் போராட்டம் 1957ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் அவர்களால் அறிவிக்கப்பட்டு, திராவிடர் கழகத் தோழர்கள் அதற்கான போராட் டத்தில் குதித்த நிலையில் பிராமணாள் என்பது முற்றிலும் நீக்கப்பட்டு விட்டது.

அதற்குப்பின் அவ்வப்போது சில இடங்களில் உணவு விடுதிகளில் பிரா மணாள் தலை நீட்டியபோதெல்லாம் திராவிடர் கழகம் தலையிட்ட போது சம்பந்தப்பட்ட உணவு விடுதிக்காரர்கள் பிராமணாள் வார்த்தையை நீக்கி விட்டனர்.
1978இல் நடந்தது என்ன?

1978இல் மீண்டும் சில இடங்களில் பிராமணாள் தலைகாட்டியபோது திராவிடர் கழகத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்கள் எழுதிய கடிதத்திற்கு தமிழ்நாடு உணவு விடுதிகள் சங்கத்தின் தலைவர் திரு எம்.பி. புருசோத்தமன் அவர்கள்,

உணவு விடுதிகளில் இடம் பெற்றுள்ள பிராமணாள் என்ற பெயர் நீக்கப்பட்டு விடும்; அதுபற்றி சுற்றறிக்கை எல்லா உணவு விடுதி உரிமையாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது; போராட்டம் தேவையில்லை என்று கூறி இந்தப் பிரச் சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

திடீரென்று பிராமணாள்!

இப்பொழுது சிறீரங்கத்தில் திரு. கிருஷ்ணய்யர் என்பவர் நடத்தி வரும் உணவு விடுதியில் திடீரென்று பிரா மணாள் என்று எழுதப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக நடந்து வந்த ஓர் உணவு விடுதியில் திடீரென்று பிரா மணாள் முளைப்பது ஏன்? இது வருணாசிரம ரீதியாக பார்ப்பனர் அல்லாதாரை சூத்திரர்கள் என்று இழிவுபடுத்துவதாகும். சூத்திரர்கள் என்றால் இந்துமதத்தின் மனுதர்ம சாஸ்திரப்படி - ஏழு வகைப்படுவர் - அதில் ஒன்று விபசாரி மகன் என்பதாகும் (மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415).

இந்த இழிவைச் சுட்டிக்காட்டி பிராமணாள் பெயரை நீக்கி விடுமாறு திருச்சி மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் நேரில் சென்று வேண்டுகோள் விடுத்த போது முரட்டுத்தனமாக நீக்கவே முடி யாது - உங்களால் ஆனதைப் பார்த்துக் கொள்ளுங்கள்! என்று கூறிவிட்டார்.

திராவிடர் கழகத் தலைவரின் அறிக்கை

இந்தநிலையில் இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விடுதலை வாயிலாக (19.10.2012) அறிக்கை ஒன்றையும் வெளி யிட்டார்.

சிறீரெங்கம் முதல் அமைச்சரின் சட்டப் பேரவைத் தொகுதி என்பதாலும் - முதல் அமைச்சரின் பெயரை இந்தப் பிரச் சினையில் பயன்படுத்துவதாலும், முதல் அமைச்சர் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு வருணாசிரமப் பெயரான பிராமணாளை  நீக்குவதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று அவ்வறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

பொதுக் கூட்டத்திற்குக் காவல்துறை மறுப்பு!

ஆனால் அதற்கான செயல் இல்லாத நிலையில், திராவிடர் கழகத்தின் நிலைப்பாட்டை பொது மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் 23.10.2012 அன்று சிறீரங்கத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் விளக்கப் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றுவதாக இருந் தது. இதற்கான அனுமதி சீறிரங்கம் காவல் துறையினரால் மறுக்கப்பட்டது.

அடுத்து 28.10.2012 அன்று பொதுக் கூட்டம் நடத்திட விண்ணப்பிக்கப்பட்டது. அதற்கும் காவல்துறையின் அனுமதி கிடைக்கவில்லை. மீண்டும் நவம்பர் 4ஆம் தேதி சிறீரெங்கத்தில் கூட்டம் நடத்திட முறைப்படி திராவிடர் கழகத்தின் சார்பில் காவல்துறைக்கு விண்ணப்பிக்கப்பட்டது.

அந்தக் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், திராவிடர் கழகத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் (மதுரை) திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அவர்களால் வழக்குத் தொடுக்கப்பட்டது. மூத்த வழக்கறிஞர் த. வீரசேகரன் மற்றும் என். இளங்கோ மனுதாரர் சார்பில் வாதிட்டனர்.

நீதிபதி தீர்ப்பு

வழக்கினை விசாரித்த மாண்பமை நீதிபதி ஆர். சுதாகர் அவர்கள் நவம்பர் 4ஆம் தேதி சிறீரங்கத்தைச் சேர்ந்த திருவானைக்காவலில் திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தை நடத்திட அனுமதி அளித்து ஆணை பிறப்பித்தார். 


பார்ப்பனர்கள் உண்ணாவிரதமாம்

தொடர்ந்து பிராமண சமூகத்தை இழிவுபடுத்தி பேசி வருவதோடு பிராமண சமூகத்தவரின் வியாபார நிறுவனங் களுக்கு தொல்லை கொடுத்து வரும் திராவிடர் கழகத்தைத் தடை செய்யக் கோரி சிறீரெங்கத்தில் வரும் 4ஆம் தேதி பார்ப்பனர் சங்கத்தின் சார்பில் உண்ணா விரதம் என்று பார்ப்பன சங்கத்தின் சார்பில் துண்டறிக்கை வெளியிட் டுள்ளனர்.

நவம்பர் 4ஆம் தேதி மாபெரும் பொதுக் கூட்டம்

இந்தச் சூழ்நிலையில் பொது மக்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்து இருக்கக் கூடிய திராவிடர் கழகப் பொதுக் கூட்டம் நவம்பர் 4ஆம் தேதி மாலை சிறீரங் கத்தைச் சேர்ந்த திருவானைக்காவலில் எழுச்சியுடன் நடைபெறவிருக்கிறது.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் எழுச்சியுரை - கருத்துரை - மனிதநேய உரை ஆற்றிட உள்ளார்.

திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் எம். சேகர் தலைமையில் நடைபெறும் அப்பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத்துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் மற்றும் கழகப் பொறுப் பாளர்கள் உரையாற்றிட உள்ளனர்.

பல்லாயிரக்கணக்கில் கழகக் குடும்பத்தினரும் பொது மக்களும் பங்கேற் பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் திராவிடர் கழகத்திற்கே உரிய கட்டுப்பாட்டுடனும், பண்பாட்டுடனும் பொதுக் கூட்டம் நடைபெறும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...