அருமை மாணவச் சிங்கங்களே !
இளைஞரணி ஏறுகளே!
பதவிப்பக்கம் போகாத பாசறையின் சொந்தங்களே!
தமிழர்களுக்கு பதவிகளும் பட்டங்களும் கிடைத்தன என்றால் அதற்குக் காரணம்
நாம் பதவிப் பக்கம் தலைவைத்து படுக்காததால்தான். தந்தை பெரியார்
நினைத்திருந்தால் எவ்வளவு பெரிய உயர்ந்த பதவிக்கும் சென்றிருக்கலாமே
இருமுறை.
தேடி வந்த முதலமைச்சர் பதவியை கூட முகவரி
தெரியாமல் வந்து விட்டீர்களே! என்று விரட்டியடித்த விவேகத்திற்கும்
வீரத்திற்கும் சொந்தக்காரர் நமது வெண்தாடி வேந்தர். அவர் வழியில், அம்மா
காட்டிய பாதையில், தமிழர் தலைவர் கைநீட்டிய திசையில் எவ்வித சபலத்திற்கும்
ஆளாகாத தொண்டர்களாக இருப்பது பெருமை! பெருமை!! பெருமைக்கு மேலும் அணிகலன்.
இத்தகைய பட்டாளத்தில் தான் சமுதாயத்
தொடர்புடைய சாதனைகளை நிகழ்த்திக் காட்ட முடியும். முதற்கட்டமாக சகல
பரித்தியாகத்திற்கும் தயார் என்னும் ஆயிரம் இளைஞர்களை என் முன்
நிறுத்துங்கள் என்று கட்டளையிட்டுள்ளார் நமது தமிழர் தலைவர் - தானைத்
தலைவர்.
நமது மாணவரணி பொறுப்பாளர்களும், இளைஞரணி
பொறுப்பாளர்களும், ஈட்டியாய் பாய்ந்து கொண்டுள்ளனர். நாம் பட்டியலிடும்
பணியின் பக்கம் மற்றவர்கள் பராக்குக் கூட பார்க்கமாட்டார்கள்.
இன்னும்
ஜாதி இழிவு இன்னும் வருணாசிரம பாதுகாப்பு
இன்னும் இடஒதுக்கீட்டில் ஏகப்பட்ட குளறுபடிகள்
இன்னும் மூடநம்பிக்கையின் முடைநாற்றம்
இன்னும் பக்தியின் பெயரால் பகற் கொள்ளைகள்
பகுத்தறிவு என்ஜினை பூட்டிப்பார்த்து
பயணம் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை முன்னேறும். புதிய அத்தியாயம் பூக்கும்
என்றார் உலகத் தலைவர் பெரியார்.
மதவாதம் மக்களை மாசுபடுத்துகிறது. அறிவை
நாசப்படுத்துகிறது. வெறியை விசிறி விடுகிறது. உலகம் பூராவும் மதச்சண்டைகள் -
கலவரங்கள்! ஆம். மதமற்ற உலகே ஒரேத் தீர்வு!! அதனைக் கொடுக்கவல்லம்
தத்துவத் தந்தை பெரியார் இயலே! வாருங்கள், தோழர்களே வரும் 4ஆம் தேதி காலை
திருச்சி பெரியார் மாளிகையில் நடக்க இருக்கும் கழக மாணவரணி, இளைஞரணி,
கலந்துரை யாடலுக்கு. கூடிப் பேசுவோம்!
குவலயம் விளக்க குன்றெனத் திட்டங்கள் வகுப்போம்.
ஃ உறுப்பினர் சேர்க்கை
ஃ இதழ்களுக்கு சந்தா சேர்க்கை
ஃ தமிழர் தலைவர் தம் 80ஆண்டு பிறந்தநாள்
இவை அடிப்படையானவை. இந்த கட்டமைப்பின் மீது தான் நமது சவாரியே இருக்கிறது. வாருங்கள் - திருச்சியில் சந்திப்போம்.
குறிப்பு: நமது தமிழர் தலைவர் கருத்துரை வழங்க வாய்ப்பும் உள்ளது.
No comments:
Post a Comment