Friday, November 2, 2012

ஆபாசம்!


சசிதரூருக்கு மனித வள மேம்பாட்டுத்துறை யின் இணை அமைச்சர் என்பதற்குப் பதிலாக காதல் விவகாரத்துறை என்று ஒரு புதிதாக ஒரு துறையை உருவாக்கி அதற்கு இணை அமைச்ச ராக ஆக்கி இருக்கலாம் என்று திருவாய் மலர்ந் தருளியுள்ளார்.

பி.ஜே.பி. யின் மூத்த தலைவர் களுள் ஒருவராகக் கருதப் படும் முக்தர் அப்பாஸ்.

இதே போல குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியும் சசி தரூரைக் கிண்டல் அடித்துள்ளார். 50 கோடி ரூபாய் பெண் தோழி சுனந்தாவுக்காக பேரம் பேசியவர் சசிதரூர் என்று விமர்சித்துள்ளார்.

என் மனைவி சுனந்தா 50 கோடி ரூபாய் மதிப்புடையவர்  அல்லர். அதைவிட அதிக மதிப் புடையவர். அவருக்கு விலையே கிடையாது. அதைவிட அதிக மதிப் புடையவர் இதைப் புரிந்து கொள்ள அவளைப் போன்ற யாராவது ஒரு வரை நீங்கள் காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்று பதிலடி கொடுத் துள்ளார்.

நம் நாட்டு அரசிய லின் தரம் தனி மனிதர் வாழ்க்கைப் பிரச்சி னையை எல்லாம் சுற்றி சிரிப்பாய் சிரிப்பதை நினைத்து வெட்கப்படத் தான் வேண்டும்.
பி.ஜே.பி. அமைச்சர் களின் யோக்கியதாம்சம் என்ன? கருநாடக மாநி லத்தில் சட்டப் பேரவை நடந்து கொண்டு இருந்த போது பி.ஜே.பி. அமைச் சர்கள் (லட்சுமணன் சாவடி உட்பட) எத்தகைய முக்கியமான வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந் தனராம்?

சகல வசதிகளையும் உடைய கைப்பேசியில் ஆபாசப் படங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டு இருக்கவில் லையா? பிரச்சினை பெரிதாகி வெடித்த காரணத்தால் அமைச்சர் பதவியை விட்டே மூவர் விலக நேர்ந்ததல்லவா!
அடுத்தவர் மனை வியை தன் மனைவி என்று கூறி பொய் பாஸ் போர்ட் தயாரித்துப் பயணம் செய்தபோது பிடிபட்டவர் பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் அல்லவா! (பாபுலால் சுதாரா)

இவர்கள் எல்லாம் மனிதர்கள் - ஆசாபாசம் உள்ளவர்கள் - விட்டுத் தள்ளுங்கள்.

பி.ஜே.பி. சங்பரிவார் போற்றும் கிருஷ்ண பகவானின் யோக்கியதைதான் என்ன?

அறுபதாயிரம் கோபிகாஸ்திரீகளுடன் கும்மாளம் அடித்தவன் அல்லவா?
குளிக்கப் போன பெண்களின் ஆடைகளைத் திருடிச் சென்று மரத்தில் ஒளிந்து கொண்டு பெண்களின் நிர்வாணத்தை ரசித்த வக்கிரப் புத்தி கொண்ட வன் அல்லவா!
கடவுள் செய்தால் லீலை - மனிதன் செய் தால் ஆபாசமா?
தனி ஒழுக்கம், பொது ஒழுக்கம்பற்றி எல்லாம் பி.ஜே.பி.யினரோ சங்பரி வார்க் கும்பலோ பேச யோக்கியதை உண்டா?
- மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...