Friday, November 30, 2012

துக்ளக் துடுக்கர் சுப்புக்கு இதோ ஓர் ஆப்பு!


திராவிடர் இயக்கத்தினை கொச்சைப்படுத்திடும் திருப் பணியை கொயபெல்ஸ் பாணி பிரச்சாரத்தினை, துக்ளக் பார்ப்பன ஏடு தொடர்ந்து செய்து வருகிறது.
வெறுக்கத்தக்கதா பிராமணியம்? என்ற சோவின் தொடருக்கு விடுதலையில் ஆசிரி யர் வீரமணி வெறுக்கத்தக்கதே பிராமணீயம்! எனும் தலைப்பில் மறுப்புக் கட்டுரைகள் எழுதி, அந்நூலும் வெளிவந்தது.
அதுபோலவே வேறு ஒரு பார்ப் பனர் பழைய கருப்பையா லட்சுமி நாராயணன் என்ற உண்மை பெய ரில் ஏதோ மிகப் பெரிய ஆய்வா ளரைப் போல் எழுதியதை, விடுதலை யில் அதன் நிருவாக ஆசிரியர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் பல்வகை ஆதாரங்களுடன் - உண்மைகளை சான்றுகளுடன் அடுக்கி, பார்ப்பனப் புரட்டுக்கு தக்க பதிலடி கொடுத்து அது ஒரு நூலாகி நூல்களின் சாயத்தை வெளுக்கும்படிச் செய்துள்ளது!
இந்நிலையில் பழைய கருப்பையர்கள் கிட்டாததால் புதிய சுப்புகளை விட்டு திராவிட மாயை என்ற தலைப்பில் - அத்தலைப்புகூட ஒரி ஜினல் அல்ல; கம்யூனிஸ்ட் பி. இராம மூர்த்தி முன்பு எழுதிய திராவிட மாயையா? என்ற நூல் தலைப்பே ஆகும்!
திராவிடம் மாயை அல்ல; உண்மை இல்லாவிட்டால் இந்திய தேச வாழ்த்துப் பாடலில் வங்கத்து கவிஞர் தாகூர், திராவிட உத்சல வங்கா... என்ற பாடியிருப்பாரா? புண்ணாக்குகளே புரிந்து கொள் ளுங்கள்! (புண் - நாக்குப் படைத்தோர் என்றும் கொள்க)
5.12.2012 துக்ளக் இதழில்  சுப்பு ஒரு பெரிய கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்து எழுதிவிட்டார்!
இறைவனை வேண்டி ஈ.வெ.ரா. என்று எழுதுகிறார்.
...ஈ.வெ.ரா.வை என்ன சொல்வது என்ற கேள்வி மிஞ்சுகிறது. அவரை புளுகு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் என்றே சொல்லிவிட லாம் என்று பொருத்தமில்லாமல் புளுகியிருக்கிறார்.
அட பொய்யில் புழுத்த புழுக் களே, இந்தப் புளுகு கந்தபுராணத் திலும் இல்லை என்ற பழமொழிக்குப் பொருள் என்னப்பா?
நியாயமாக கந்தபுராணம் அல்ல புளுகு ஊற்று, புளுகு பல்கலைக் கழகம்  என்று பொருள் அல்லவா?
மகா பாரதத்தில் பொய் சொல்லி அல்லவா எதிரியை வீழ்த்துகின்ற (அசுவத்தாமா எதா குஞ்சரா) அதை விட பெரிய இடத்துப் பெரும் புளுகுக்கு வேறு சான்று வேண் டுமா?
மரத்தின் பழம் மீண்டும் ஒட்டாத போது மனதில் மறைத்ததைச் சொல் லும்படி செய்ய அதுவரை மறைத் திருந்த அய்வர் (பஞ்சபாண்டவர் போதாது என்று ஆறாவது கர்ணன் மீதும், ஆசைப்பட்ட துரவுபதை கதை காரர்களா புளுகு பற்றிப் பேசுவது!) அட அப்புவே! குடிஅரசுக்கு துவக்கக் காலத்தில் இரண்டு ஆசிரியர்கள் (காங்கிரஸ்காரரான தங்கப் பெருமாள் பிள்ளை ஈரோடு வக்கீல் அவர் எழுதிய தலையங்கம் அது பெரியார் எழுதியதல்ல)
இதை ஆசிரியர் வீரமணி முன்பே பல முறை விளக்கியுள்ளார்!
பேராசிரியர் சுப. வீரபாண்டியன்
சதுர்வர்ணம் மயா ஸ்ருஷ்டம் என்ற கீதைசுலோகத்தில் கடவுளான கிருஷ்ணன் நாலு வர்ணத்தை நானே படைத்தேன் - என்று கூறி யதை மறைமலை நகரில் பேசினா ராம்; இந்த அப்புவுக்கு பொத்துக் கொண்டு கோபம் வந்து, அதன் பின்பகுதியில் குணகர்மபாக என்று உள்ளதை வைத்து திசை திருப்பிடும் வேலை.
அது குணங்களையும் செய லையும் அடிப்படையில் வைத்து நான்கு வர்ணங்களை நான் உண்டாக்கினேன் என்றுதான் கீதையில் கூறப்பட்டுள்ளது. இது பிறவி அடிப்படையில் செய்யப்படும் ஏற்ற தாழ்வுகளுக்கு இடமே இல்லை என்று ஒரு புளுகு - புரட்டு வியாக்யானம் எழுதி புலம்புகிறார்!
இந்த பூணூல் வரியிலுள்ள காஞ்சிகாமகோடி ஸ்ரீ சந்திசேக ரேந்திர சுவாமிகளின் தெய்வத்தின் குரல் நூலில் இப்படி விளக்கம் சிலர் கீதைக்குச் சொல்வது தவறு என்று அவரால் ஓங்கி அடித்துச் சொல் லப்பட்டுள்ளதே! படிக்கவில்லையா?
பகவான் கிருஷ்ணன் - பிறவி அடிப்படையில் தான் அதைக் கூறினார். குணம், தோஷம் அது, இது என்பதெல்லாம் கிடையாது என்று தெளிவாக, திட்டவட்டமாக அவர் சொல்லி விட்டாரே!
இவரது இந்த மறுப்பு பழைய (ஜெயில் பெயில் தலைக்காவிரி புகழ் இன்றைய சங்கராச்சாரிகள் அல்ல) பெரியவாளுக்கா? அல்லது சு.ப.வீக்கா!
அட அபிஷ்டுகளே (அவாள் பாஷையிலேயே) அதே கீதையில் 18வது அத்தியாயத்தை நன்னா படியுங்கோ.
பகவான் சொல்லிண்டு இருக் காரே!
வர்ணக் கலப்பு கூடவே கூடாது அது வருங்கால சந்ததிகளே அழித் திடும்ன்னு சொல்லியிருக்காளே!
அந்த ச்லோகத்தில் உள்ளபடி, பிறவி சுபாவப் படி வர்ணம் பிறவி அடிப்படைதான் என்பதை குணம் என்பது இன்னின்ன ஜாதி வர்ணப் பிரிவுக்கு இன்ன குணம் என்பதை வைத்தே சொல்லப்படுகிறது - மறுக்கவே முடியாதே!
இதோ அந்தச் சுலோகம்.
ப்ராமண - க்ஷத்திரிய - விசாம் - சூத்ராணாந்
கர்மாணி ப்ரவி பக்தானி ஸ்பாவ
- ப்ரபவைர் - குண
(அத்தியாயம் 18 - சுலோகம் 41)
இதன் பொருள்: பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்பவர்களுக்கு சுபாவமாக உண் டான குணங்களைக் கொண்டே தர்மங்கள் வகுக்கப்பட்டன.
இதன் பொருள் இப்போது விளங்குகிறதா? இந்த குணம் என்பதே அந்த வர்ண ஜாதிக்கே உரியது, கலந்து விடக் கூடாது என்றும் ஒருபடி மேலே போய் - நான் ஜாதியை உண்டாக்கியது மட்டுமல்ல; அவை ஒன்றோடு ஒன்று கலக்காமலும் பார்ப்பதே (வருண) தருமம் என்பதில் வேறு வியாக் யானத்திற்கு இடமே இல்லாமல்  கீதை சொல்லுகிறதே!
கெட்டிக்காரன் புளுகுக்கே உச்சவரம்பு எட்டு நாள்கள்தான்
துக்ளக் சுப்புகளின் புளுகு ஒருநாள், ஒரு மணி கூட நிற்காதே!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...