குடந்தையில் 11 அய்ம்பொன் கோயில் சிலைகள் கோவிந்தா!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பெருமாள் கோவிலில் 11 அய்ம்பொன் சிலைகள் புதன்கிழமை திருட்டு போயின.
கும்பகோணம் அருகேயுள்ள பாபுராஜபுரம் ஊராட்சிக்குள்பட்ட புளியஞ்சேரி அக்ரஹாரத்தில் ருக்மணி சத்யபாமா சமேத வேணு கோபாலசுவாமி (பெருமாள்) கோவில் உள்ளது. தனியாருக்குச் சொந்த மான இந்தக் கோவிலை ஒரு பிரிவைச் சேர்ந்த பரம்பரையினர் மட்டும் வழிபட்டு வருகின்றனர்.
ஏறத்தாழ நூறு ஆண்டுகள் பழைமையான இந்தக் கோவிலில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு அர்த்த மண்டபத்தின் தென்மேற்கு மூலையில் சுவரும், மண்டபமும் இடிந்து உள்ளே விழுந்தன.
இந்தக் கோவிலை திருப்பணி செய்ய அறங்காவலர்கள் முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தக் கோவிலை திருப்பணி செய்ய அறங்காவலர்கள் முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அக்டோபர் 22-ஆம் தேதி கும்பகோணத்தைச் சேர்ந்த ரவிச்சந்திர குருக்கள் இந்தக் கோவிலில் பூஜை செய்து, பின்னர் பூட்டிவிட்டுச் சென்றார். செவ்வாய்க்கிழமை பகல் முழுவதும் மழை பெய்து கொண்டிருந்ததால், குருக்கள் கோவிலுக்கு வரவில்லை.
புதன்கிழமை காலை 10 மணிக்கு கோவிலுக்கு வந்த குருக்கள் அர்த்த மண்டபத்துக்கும் கருவறைக்கும் இடையே உள்ள கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததுடன், பூட்டும் காணாமல் போனது தெரியவந்தது.
மேலும், கோவில் கதவு உடைக்கப் பட்டு, கருவறையில் இருந்த 5 ஆழ் வார்கள் சிலைகள், வேணுகோ பாலன், ருக்மணி, சத்யபாமா, கிருஷ் ணன், நரசிம்மன், ஆஞ்சநேயர் ஆகிய 11 சிலைகள் திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 10 லட்சம் இருக்கும் எனக் கூறப் படுகிறது.
காளஹஸ்தி கோவில் கோபுரம் கற்கள் இடிந்து விழுந்தன நகரி: காளஹஸ்தி சிவன் கோவி லில், விமான கோபுரத்திலிருந்து கற்கள் இடிந்து விழுந்தன.
சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி வாயுலிங் கேஸ்வர சுவாமி கோவிலில், ஞான பிரசூனாம்பிகை தாயார் சன்னதி விமான கோபுரத்தில், மூன்று கலசம் அமைந்து உள்ளது. இந்த கலசம் அருகே, கற்கள் திடீரென இடிந்து கீழே சரிந்தது. கடந்த நான்கு தினங்களாக காளஹஸ்தி பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் விமான கோபுரத்தின் மீது தண்ணீர் இறங்கியதால், கலசத்தின் அடிப்பகுதி சேதமடைந்து, கற்கள் இடிந்து விழுந்துள்ளன. அப்போது, பக்தர்கள் யாரும் அருகில் இல்லாத தால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை.
நேற்று முன்தினம் கோவிலுக்கு வந்த பக்தர்கள், இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தாயார் சன்னதி விமான கோபுரத்தின் மீது உள்ள கலசங்கள் அருகே செடிகள் முளைத்துள்ளன. இதை அகற்றி, பராமரிக்க தவறியதால் கற்கள் பெயர்ந்து விழுந்துள்ளன. விமான கோபுரத்தை உடனடியாக பழுது பார்க்க நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என, கோவில் அதிகாரி தெரிவித்தார். கடந்த ஆண்டும், கோவில் முகத் துவார கோபுரத்தில் கலசம் ஒன்று சரிந்து விழுந்தது.
அதற்கு முன்பு ராஜகோபுரமே தலைகுப்புறக் கவிழ்ந்ததே!
திருவாரூர் தியாகராஜர் கோயில் தெப்பக்குளம் சுவர் இடிந்தது
திருவாரூர்: திருவாரூர் தியாக ராஜர் கோயில் கமலாலய தெப்பக் குளத்தின் 66 அடி நீள சுவர் மழையால் இடிந்து விழுந்தது.
திருவாரூரில் தியாகராஜர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான கமலாலயம் தெப்பக் குளம் பிரமாண்டமானது. தொடர்ந்து 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. கன மழையால் கமலாலய தெப்பக் குளத்தில், துர்காலயா சாலை வடக்கு பகுதியில் 66 அடி நீள சுற்றுச்சுவர் நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் திடீரென இடிந்து குளத்துக்குள் விழுந்தது. எப்போதும் பரபரப்பான துர்காலயா சாலையில் தெப்பக்குளத்தின் சுவர் இடிந்ததால் தடுப்பு வைத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தெப்பக்குளத்தில் நடைபெற்று வந்த படகு போக்கு வரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தகவலறிந்த இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் ஆர்டிஓ, தாசில்தார், நகராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். சாட்டையால் அடித்து பேய் விரட்டலாம்!
என்று ஒழியும் இந்த மூடப் பேய்?
நாமக்கல்: நாமக்கல் அருகே நடந்த, அச்சப்பன் கோவில் திரு விழாவில், பக்தர்களை சாட்டையால் அடித்து, பேய் விரட்டும், "வினோத' நிகழ்ச்சி நடந்து.
நாமக்கல் மாவட்டம், பவுத்திரம் கிராமத்தில், அச்சப்பன் கோவில் அமைந்துள்ளது. அக்கோவிலில், ஆண்டுதோறும், ஆயுதபூஜைக்கு மறுநாளான விஜயதசமியன்று, திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதில், குரும்பா இன மக்கள் மட்டும் பங்கேற்பர். விழாவின், முக்கிய
நிகழ்ச்சியாக, பக்தர்களைச் சாட்டை யால் அடித்து பேய் விரட்டுதல், சேவை நடனம் உள்ளிட்டவை நடக் கும். இதில், திருமணமாகாத பெண்கள், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் மற்றும் துஷ்ட ஆவி பிடித்தோர் பங்கேற்பார்களாம். அவர்கள், தரையில் மண்டியிட்டபடி, கைகளை மேலே தூக்கியிருப்பர். கை தூக்கியுள்ள பக்தர்களை, அச்சப்பன் கோவில் பூசாரி மற்றும் கோமாளி வேடம் தரித்த நபர், பிரம்மாண்ட சாட்டையைச் சுழற்றி, நடனமாடியபடி அடிப்பது வழக்கம்.
அதன் மூலம், தங்களைப் பிடித்த துஷ்ட ஆவி உள்ளிட்டவை நீங்கும் என்பது, விழாவில் பங்கேற்கும் பக்தர் களின் நம்பிக்கையும் இந்தாண்டுக்கான, அச்சப்பன் கோவில் திருவிழா, விஜய தசமியான, நேற்று நடந்தது. சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குரும்பா இன மக்கள், கோவிலில் குவிந்தனர். மாலை, 3 மணியளவில், பிரசித்தி பெற்ற பேய் விரட்டுதல் நிகழ்ச்சி துவங்கியது. அதில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் ஈர ஆடையுடன் வரிசையாக மண்டியிட்டு, கைகளை மேலே உயர்த்தியவாறு காத்திருந்தனர்.
கோவில் பூசாரி மற்றும் கோமாளி வேடம் தரித்த நபரும் மேள தாளம் முழங்க சாட்டையை சுழற்றியபடி வந்தனர். பின், கைகளை மேலே உயர்த்தி மண்டி யிட்டிருந்த பக்தர்களை சாட்டையை சுழற்றி அடித்தனர். ஒரே அடியில் சிலர் எழுந்து சென்றனர். ஒரு சில பக்தர்கள் இரண்டு, மூன்று அடிகளுக்கு பின் எழுந்து சென்றனர்.அச்சன் கோவில் திருவிழாவையொட்டி, 40-க்கும் மேற் பட்டோர் நேர்த்திக் கடனாக, தங்களது தலையில் தேங்காய் உடைத்துக் கொண்டனராம்.
உடலில் ரத்தம் பீறிட கத்திபோடும் விழாவாம்!
பொள்ளாச்சி: நவராத்திரியை ஒட்டி, பொள்ளாச்சி அருகே அம்மன் கோவிலில், உடலில், "கத்தி போடும்' நிகழ்ச்சி, நேற்று நடைபெற்றது.
இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கோவை மாவட்டம், நெகமத்தில், ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில் உள்ளது.
இங்கு, நவராத்திரி விழா, அக்., 15இல் துவங்கியது. கடந்த, 19ஆம் தேதி மாலை, திருவிளக்கு வழிபாடும், நேற்று முன்தினம் இரவு, 8 மணிக்கு சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையும் நடந்தது.
விஜயதசமி தினமான நேற்று காலை, 9 மணிக்கு, விநாயகர் கோவிலில் அலகு சேவை செய்து, சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.
அங்கிருந்து, சக்தி அழைத்து வரப்பட்டது; உடன், மாவிளக்கு மற்றும் முளைப்பாரி ஏந்தி பக்தர்கள் வந்தனர்.
இதன் பிறகு, பக்தர்கள், "கத்தி போடும்' நிகழ்ச்சி, காலை 11:30 மணியளவில் துவங்கியது. இதில் பங்கேற்றவர்கள், "வேசுக்கோ தீசுக்கோ' என்ற முழக்கமிட்டவாறு, இரு கத்திகளை கொண்டு கைகளை கீறிக்கொண்டனர். இந்நிகழ்ச்சியை சுற்றுவட்டார கிராம மக்கள் கண்டு களித்தனராம்.
துர்க்கா சிலை கரைப்பில் இளைஞர் சாவு
சென்னை: தசரா திருவிழா வையொட்டி சென்னையில் துர்க்கை அம்மன் சிலைகளை வைத்து வழி பாடு செய்தனர். வழிபாடு செய்த சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நேற்று மாலை கடலில் கரைத்த போது இளைஞர் ஒருவர் பெரும் அலையில் சிக்கி பரிதாபமாக இறந்துபோனார்.
விநாயகர் சதுர்த்தி திருவிழாவை யொட்டி, விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து, பின்னர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைத்ததுபோல, தசரா திருவிழாவை யொட்டி சென்னையில் சவுகார்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் 80 துர்க்கை அம்மன் சிலைகளை வைத்து வழிபாடு செய்தனர்.
வழிபாடு செய்த துர்க்கை அம்மன் சிலைகளை நேற்று மாலை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் மற்றும் நீலாங்கரை பல்கலைநகர் கடற்கரைப் பகுதிகளில் துர்க்கை அம்மன் சிலைகளை கடலில் கரைத்தனர். நீலாங்கரை பல்கலை. நகர் கடலில் சிலைகளைக் கரைத்தபோது, மணி கண்டன் (வயது 27) என்ற இளைஞர் கடலில் மூழ்கினார்.
அவரை மிகப் பெரிய அலை இழுத்துச் சென்றது. அவரோடு மேலும் ஒரு இளைஞரும் கடலில் மூழ்கி னார். ஆனால், அவரை அங்கிருந் தவர்கள் காப்பாற்றிவிட்டனர். இறந்த மணிகண்டன் கிழக்கு தாம் பரத்தை சேர்ந்தவர். திருமணமாகாதவர். சென்னை விமான நிலையத்தில் சரக்கு பொருட்களை ஏற்றி, இறக்கும் பிரிவில் ஊழியராக வேலை பார்த் தார். இவரது உடல் நேற்று இரவு அதே பகுதியில் கரை ஒதுங்கியது.
நீலாங்கரை காவல்துறையினர் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத் தினார்கள்.
No comments:
Post a Comment