Thursday, October 25, 2012

நவராத்திரி கொண்டாடும் சூத்திர, பஞ்சம மக்களே!


இந்துமதம் என்ற அமைப்பு - அதன் அடிப் படையை அறிவுப் பூர்வமாக ஆய்வு செய்பவர் களுக்குச் சில உண்மைகள் அப்பட்டமாகவே புரியும்.
வருணாசிரமம் கூடாது; ஜாதி கூடாது என்பவன் ஓர் இந்துவாக இருக்க முடியாது. இவற்றை மறுத்தால் இந்து மதத்தின் கடவுளையே மறுப்பதாகும். காரணம் இந்து மதத்தின் படைத்தல் கடவுளாகக் கூறப்படும்  பிர்மா தன் நெற்றி யிலிருந்து பிராமணனையும், தோளிலிருந்து சத்திரியனையும், இடுப்பிலிருந்து வைசியனையும், பாதங்களிலிருந்து சூத்திரனையும் படைத்ததாகக் கூறப்படுகிறது.
இப்படி பிர்மா படைத்ததோடு  நிற்கவில்லை யாம்; இம்மைக்கும், மறுமைக்கும் உரிய உபயோக மான கருமங்களைத் தனித்தனியே படைத்தார் என்கிறது மனுதர்ம சாஸ்திரம் (அத்தியாயம் 1 சுலோகம் 87).
இதன் சுருக்கம் என்னவென்றால் பிராமணர், சத்திரிய, வைசிய, சூத்திரர் என்ற பேதங்களை பிறப்பிலேயே உண்டாக்கினான் இந்து மதத்தின் படைப்புக் கடவுள் என்பதாகும்.
உலகம் பூராவுக்கும் ஒரு கடவுள் என்றால் இத்தகைய பிறவிப் பேதங்கள்  உலகம் முழுவதும் இருக்க வேண்டுமே, ஏன் இல்லை?
அவ்வாறு இல்லை என்பதிலிருந்தே ஒவ்வொரு ஊரிலும், நாட்டில் வலுத்தவன் தன் வசதிக்கும், ஆதிக்கத்திற்கும் ஏற்ப உருவாக்கிக் கொண்ட சூழ்ச்சிப் படலங்கள்தான் இவை!
அதிலும் இம்மைக்கும், மறுமைக்கும் உரிய கருமங்களைப் படைத்து விட்டாராம். இந்தப் பிறவியில்  மட்டுமல்ல - மறுபிறவிக்கும் சேர்த்து கருமங்களைப் படைத்தாராம்.
அது எப்படிப்பட்ட ஏற்பாடு? பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும் பிர்மாவின் உயர்ந்த இடத்தில் (முகத்தில்) பிறந்ததினாலும், இந்த உலகத்தில் உண்டாகி இருக்கிற சகல வருணத் தாருடைய பொருள்களையும் தானம் வாங்க அவனே பிரபு வாகிறான்.
(மனுதர்மம் அத்தியாயம் - 1 சுலோகம் 100)
எவ்வளவுப் பெரிய தந்திரம்! பார்ப்பான் உழைக்க வேண்டியதில்லை; தானம் வாங்கி பிரபு ஆகக் கூடிய ஒன்றைக் கடவுள் பெயரால் உருவாக்கி வைத்திருப்பதைக் காணத் தவறக் கூடாது.
இந்த நிலையில் பிறவி அடிமைத்தன்மையில் உள்ள சூத்திரன் தன் வளர்ச்சிக்கு, முன்னேற்றத் திற்கு விடுதலைக்கு மேற்கொள்ளும் எந்த முயற்சி யும் இந்து மதத்தின் கடவுள் மறுப்பாகி விடுகிறது.
தந்தை பெரியார் அவர்களின் கடவுள் மறுப்பை இந்த அடிப்படையில் நோக்கினால் அதன் அருமையும், சிறப்பும், முற்போக்கும் விளங்காமற் போகாது.
கல்விக்கு ஒரு கடவுள் உண்டு என்று வைத்து விட்டு, சூத்திரனுக்கு அந்தக் கல்வி கிடையாது என்பது எவ்வளவுப் பெரிய சூழ்ச்சி!
சரஸ்வதி பூஜை கொண்டாடும் சூத்திர மக்கள் இதனைப் புரிந்து கொள்ளாமல், அன்று ஏடு களையும், புத்தகங்களையும் பூசைக்கு வைப்பது பொருத்தமானதாக எப்படி இருக்க முடியும்?
அப்படியே சூத்திரன் படிக்க வேண்டும் என்று விரும்பினால் இந்த சரஸ்வதியை எச்சில் தொட்டி யில் தூக்கி எறிய வேண்டாமா? இதனை ஒப்புக் கொள்ளும் பக்குவம் இல்லை என்றாலும், கல்வி கற்கும் ஒவ்வொரு சூத்திரனும் சரஸ்வதியை எச்சில் தொட்டியில் தூக்கி எறிந்ததாகவே பொருள்!
செல்வத்துக்கு ஒரு கடவுள் லட்சுமி என்று சொல்லப்படுகிறது. சூத்திரன் பொருளைப் பார்ப்பான் கொள்ளை அடிக்கலாம் என்கிறது மனுதர்மம் (அத்தியாயம் 11 சுலோகம் 13).
இந்த நிலையில் பொருளீட்ட வேண்டும்; அது தனக்காக இருக்க வேண்டும் என்று நினைக்கிற சூத்திரன் லட்சுமிக்குப் பூஜை நடத்த முடியுமா? நடத்தலாமா?
இந்து மத அடிப்படைக் கட்டமைப்பை உடைப் பதன் மூலம்தான் பார்ப்பனர் அல்லாத சூத்திர மக்களும், பஞ்சம மக்களும் கல்வி பெறவும், பொருளீட்டவும், சுயமரியாதை பெறவும், ஏன் மனிதனாகவும் முடியும் என்பது கல்லின்மேல் எழுத்தாகும் என்பதுதான் தந்தை பெரியார் அவர்களின் மகத்தான தத்துவமும், சாரமும் ஆகும்.
நவராத்திரி கொண்டாடும் நம் மக்கள் கொஞ்சம் சிந்தனைக் கண்களை விரித்துப் பார்ப்பார்களாக!


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...