Saturday, October 27, 2012

ராம் லீலாவா?


ஆண்டுதோறும் இந்தியாவின் தலைநகர மான டில்லியில் ராம்லீலா மைதானத்தில் நவராத்திரி -எனும் இந்துப் பண்டிகையின் கடைசி நாளாகிய விஜயதசமியன்று - இராவணன் - இந்திரஜித் - கும்பகர்ணன் உருவங்களைச் செய்து தீ மூட்டிக் குதூகலிக் கும் நிகழ்ச்சி - விழா என்ற பெயரில் கொண் டாடப்பட்டு வருகிறது.
இதில் இந்தியாவின் குடியரசு தலைவர், பிரதமர் உட்பட குடும்பத்தினருடன் உட்கார்ந்து குதூகலிப்பது என்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
நேற்று நடைபெற்ற ராம்லீலாவில் கூட இந்தியாவின் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவரும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி, அவரின் மகன் ராகுல்காந்தி ஆகியோர் கலந்து கொண்டு மகிழ்ந்திருக்கின்றனர்.
இது சட்டப்படியும் தவறு; நியாயப்படியும் குற்றமாகும். இந்தியா மதச் சார்பற்ற நாடு - அப்படி இருக்கும் பொழுது ஆட்சிப் பொறுப்பில் இருக்கக் கூடியவர்கள் ராமன் எனப்படும் இந்து மதக் கடவுளின் அவதாரத்தை முன்னி றுத்திக் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வில்  கலந்து கொள்வது - குறிப்பிட்ட மதத்தின்மீது ஈர்ப்பை ஏற்படுத்தக் கூடியதாக இல்லையா?
இந்த உருவங்களை எரிப்பதற்கு என்ன காரணம் சொல்லப்படுகிறது? தீயவை அகன்று நல்லவை மலரப் போகிறதாம்.
எது தீயது? எது நல்லது? என்பதுதான் இதில் உள்ள பிரச்சினையே! ராமன் அவதாரம் எடுத்ததற்குச் சொல்லப்படும் காரணம் என்ன?
திருமால் பிருகு முனிவருடைய மனைவி யைக் கொன்று விட்டார். அதனால் அம்முனிவர் திருமாலை நோக்கி மனிதனாகப் பிறந்து மனைவியை இழந்து வருந்தும்படி சபித்து விட்டார் என்பது உட்பட பல காரணங்கள் ராமன் அவதாரத்துக்குக் கூறப்பட்டுள்ள நிலையில், ராமனை எப்படி யோக்கிய தாம்சம் உள்ள ஒருவனாகப் பாவிக்க முடியும்?
ஏதோ ஒரு காட்டில் தவம் இருந்த சம்புகனை - சூத்திரன் என்று கூறி, பட்டப் பகலில் படுகொலை செய்த கொலைகாரன் ராமன் அல்லவா?
வாலியை மரத்தில் மறைந்திருந்து கொலை செய்த ராமன் எப்படி வீரன்  ஆவான்? நிறை மாதக் கர்ப்பிணியான சீதையை காட்டில் கொண்டு போய் விடச் செய்தவன் எப்படி காருண்யமூர்த்தி ஆவான்?
நியாயமாக ராம்லீலா விழாவில் எரிக்கப்பட வேண்டியவன் ராமன் அல்லவா!
மேலும் இராமாயணம் என்பது ஆரியர் - திராவிடப் போராட்டத்தை சித்திரிக்கும் கதை என்று நேரு அவர்களே எழுதிடவில்லையா? உண்மை இவ்வாறு இருக்க, நேரு குடும் பத்தைச் சேர்ந்த சோனியாவும், அவரின் மகனும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது எப்படி சரியாகும்?
அப்படியானால் திராவிடர் மீதான ஆரியர் மேற்கொண்ட யுத்தத்தை நியாயப்படுத்து கிறார்களா? இந்தப் பிரச்சினையை இந்தக் கோணத்தில் திராவிடர்கள் உணர்ந்து கிளர்ந்து எழுந்தால் நிலைமை என்ன ஆகும்?
மீண்டும் ஆரியர் - திராவிடர் யுத்தத்தைத் தொடங்குவதற்கும் மிகப் பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் தூபம் போடலாமா?
இராவணன் பொம்மை கொளுத்தப்பட் டுள்ளதே இராவணனை தங்கள் குல தெய்வ மாக வழிபடுபவர்கள் வட மாநிலங்களில் இருக்கிறார்களே, அவர்களின் உணர்வை மட்டும் புண்படுத்தலாமா?
இந்த உண்மைகளை எல்லாம் எடுத்துக் கூறி, அன்றைய பிரதமர் இந்திராகாந்திக்கு திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் கடிதம் எழுதியதுண்டே! நியாயமான முறையில் அவர் பதில் எழுதாத காரணத்தால், தந்தை பெரியார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவையொட்டி (25.12.1974) இராவண லீலா நடத்தி, ராமன், சீதை, இலக்குவன் உருவங்களைக் கொளுத்த வில்லையா?
அப்படிக் கொளுத்தியது தவறல்ல என்று நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளதே - மீண்டும் இராவண லீலாவை நடத்த வேண் டுமா?
பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டாமா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...