Saturday, October 27, 2012

செய்திச் சிதறல்கள்!


சூர சம்ஹாரம்!
தூத்துக்குடி மாவட்டக் குலசேக ரன் பட்டினத்தில் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவில் சூரசம் ஹாரம் நடந்தது.
அது என்ன சூரன்? அது என்ன சம்ஹாரம்? புராணங்களில் சூரன், அசுரன், ராட்சதன், அரக்கன் என்று கூறப்படுபவர்கள் எல்லாம் யார்? வரலாற்று ஆசிரியர்கள் (பார்ப்பனர் கள் உட்பட) என்ன சொல்லு கிறார்கள்?
ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் எதிரிகளான திராவிடர்களைத் தான் இவ்வாறு அழைத்தார்கள், எழுதினார்கள் என்று எழுதியுள்ளார் களே - நரகாசூரன், இரண்யாட் சதன் சூரபத்மன், கோமுகாசுரன் என்பதெல்லாம் இந்த அடிப்படையில் தானே?
மகாவிஷ்ணு அவதாரம் எடுத்து இந்த அசுரர்களை அழித்ததாக அல்லவா எழுதி வைத்துள்ளனர் -
இந்த நிலையில் ஆரியப் பார்ப் பனர்கள் திராவிடர்களாகிய அசுரர் களை அழித்ததைத் தமிழ்நாட்டில் விழாவாகக் கொண்டாடலாமா? சிந்தித்துப் பாரீர்!
இரணியன் - யாகம் நடத்தும் பார்ப்பனர்களை அந்தத் தீயில் போட்டே பொசுக்குங்கள் என்று கூறியதாகப் பாகவதம் கூறுகிறதே - அப்படியானால் அந்த இரணி யனுக்காக நாம் விழா எடுக்கலாமா? எடுக்க வேண்டுமா என்பது இன மான தன்மான கேள்வியல்லவா!
******
50 சதவிகிதம் தேவையா?
எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத் துவப் படிப்புகளில் ஒவ்வொரு தேர் விலும் 50 விழுக்காடு மதிப்பெண்கள் எடுத்தால்தான் தேர்ச்சியாம்.
பெரும்பாலும் முதல் தலை முறையாக மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த - தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட - கிராமப்புறங்களைச் சேர்ந் தவர்கள்தான் இதில் பாதிக்கப்படு வார்கள்.
பரீட்சையில் வாங்கும் மார்க் தான் தகுதியை நிர்ணயிக்கக் கூடியதா? இல்லை என்று கல்வி நிபுணர்களே கூறியதுண்டு. கணித மேதை என்ற சொல்லுகிறார்களே அந்த ராமானுஜம் ஆங்கிலத் தேர்வில் பல முறை தோல்வி காணவில்லையா? அதற்காக அவரின் கணித அறிவைக் குறைத்து மதிப்பிட முடியுமா?
மருத்துவக் கல்லூரியில் தங்கப் பதக்கம் வாங்கியவர்கள், தேர்வுக் கும் பிறகு தொழிலில் முதன்மை யானவராக ஜொலிக்கிறார் என்ப தற்குப் புள்ளி விவரம் உண்டா? இந்தக் கேள்வியை தந்தை பெரியார் எழுப்பியதுண்டே!
எட்டாம் வகுப்பில் பல முறை தோல்வி கண்டவர் கள்கூட பிற்காலத் தில் துணைவேந்தர் ஆகிடவில்லையா?
சென்ற ஆண்டே இந்தப் பிரச்சினை வந்த போது மருத் துவக் கல்லூரி மாண வர்கள் போராட்டத் தில் குதித்தனர். மீண்டும் மாணவர் கள் அந்த நிலைக் குத் தள்ளப்பட்டால் அதற்குப் பொறுப்பு 50 விழுக்காடு என்ற நிபந்தனையை ஏற்படுத்தியவர்களே!
டில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்களாக இருக்கக் கூடிய பார்ப்பனர்கள், தாழ்த்தப்பட்ட மாணவர்கள் என்றால் வேறுபாடாக நடத்துகிறார்கள் என்று 54 எம்.பி.களே பிரதமரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இத்தகைய ஜாதிய மனப்பான்மை படித்த பார்ப்பனர்களிடத்திலேயே இருக்கும் பொழுது  - அங்கு படிக்கும் தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர்களின் கதி என்னாவது?
சமூக நீதிக் கண்ணோட்டத்தில் இது எதிர்க்கப்பட்டே தீர வேண்டும்.
போராடி போராடிப் பெற்ற சமூகநீதி உரிமைகளை இப்படி கொல்லைப்புறம் மற்றும் தந்திர ரீதியாக தட்டிப் பறிக்கும் பார்ப்பனர் சூழ்ச்சியை முறியடிக்க முயலுவோம்!
******
பெட்ரோல் - டீசல் விலை உயர்வு
பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 30 பைசா என்றும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 18 பைசா என்றும் மீண்டும் உயர்கிறது. இப்படி விலையை நிர்ண யிக்கும் உரிமையை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கே வழங்கப்பட்டால் இந்தநிலை தொடர்ந்து கொண்டே தானிருக்கும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்றால் இதன் பொருள் அனைத் துப் பொருள்களும் விலை உயர்வு என்பதாகும். கத்தரிக் காயிலிருந்து கார் விலைவரை உயரும் இன் றைக்கு மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு - பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயராலே வெகு மக்களின் கடும் எதிர்ப்பை வலிய சென்று சம்பாதித் துக் கொண்டு இருக்கிறது என்பது வெளிப்படை.
வறுமைக்கோட்டுக்குக் கீழ் 60 விழுக்காடு மக்கள் வாழும் ஒரு நாட்டில் வாக்குகளை விலை வாசியைப் பொறுத்தே வழங்குவார் கள் என்று அரிச்சுவடி கூடத் (பொருளாதாரப் பு(ளி)லி களாக இருந்து என்ன பயன்?) தெரியாத வர்களாக இருக்கிறார் களே என்பதை நினைத் தால் பரிதாபகரமாக இருக்கிறது.
மதவாத சக்திகளிடம் மடிப்பிச்சை ஏந்தியாவது ஆட்சியை ஒப்படைத்து விடு வார்கள் போல் இருக்கிறது.
******
கோயில் இடிப்பு
மதுரை ரேஸ்கோர்ஸ் சாலை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அத்துமீறிக் கட்டப்பட்ட கோயிலை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தர விட்டதன் பேரில் அதிகாரிகள் கோயிலை இடிக்கச் சென்றபோது இருவர் தீக்குளிக்க முயன்றதால் இடிப்பு கைவிடப்பட்டதாம்.
இதில் வெட்கக்கேடு என்ன வென்றால், அத்துமீறி அரசு இடத் தில் கோயிலை எழுப்பியவர்களே காவல்துறையினர்தாம் ஆம், வேலியே பயிரை மேய்கிறது.
அந்தக் கோயிலை இடிக்கா விட்டால் அது நீதிமன்ற அவமதிப்பே! சட்டத்தின்முன் எல்லாம் சமம் என்றால் கோயிலுக்குமட்டும் விதி விலக்கா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...