Sunday, October 28, 2012

மைல் ஈசுவரர்!


வண்டியில் ஏற்றிச் செல்லப்படும் செங்கல் ஒன்று கீழே விழுந்தால், அதனைநட்டு வைத்து குங்குமம், மஞ்சள் தடவி, ஒரு முழம் பூவையும் அணி வித்து செங்கலீசுவரர் ஆக்கி விடுவர் என்று திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் சொல்லுவ துண்டு.
மைல் கல்லுக்குக்கூட மாலை போட்டு மைலீஸ் வரர், பர்லாங் ஈஸ்வரர் என்று விழுந்து விழுந்து கும்பிடுவோர்கள் என்று கேலி செய்வதுண்டு திரா விடர் கழகத் தோழர்கள்.
அது ஏதோ வேடிக்கை யல்ல; பக்தி வந்தால்  புத்தி போகும் என்று தந்தை பெரியார் சொன்னதும்  வெற்றுச் சொற்களல்ல - என்பதற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு.
கும்மிடிப்பூண்டி வட்டம், சூரப்பூண்டியில் ஆயுதப் பூஜை என்ற பெயரால் நடைபெற்றுள்ள ஆபாச அறிவை நினைத்தால் ஒரு பக்கத்தில் பரிதாப உணர் வும், இன்னொரு பக்கத்தில் வாயால் சிரிக்க முடியாத அவலமும் மேலிடுகின்றன.
மைல் கல்லுக்கு மாலை போட்டு ஆத்தா பூஜை நடத்தியிருக்கிறார்கள்.
மனிதனின் பகுத்தறிவு - அறிவியல் அறிவாகி, செவ்வாய் மண்டலத்தைப் பற்றி ஆய்வு செய்து கொண்டு இருக்கிறது. நிலாவில் குடியேறுவது குறித்து மும்முரமான ஏற் பாடுகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. முதற்கட் டமாக சுற்றுலா செல்ல முன் பதிவுகள் ஒரு பக்கத் தில் நடந்து கொண்டும் இருக்கின்றன. இத்தகைய கால கட்டத்தில் மைல் கல்லுக்கு மஞ்சள் தடவி மைல் ஈஸ்வரர் என்று தண்டனிட்டுக் கும்பிடு கிறார்கள் என்றால் மனிதன் புத்தியை - எவ் வளவு நாசப்படுத்தி - ஒன் றுக்கும் உதவாத மண் ணாங்கட்டியாக ஆக்கி வைத்திருக்கிறது. இந்தப் பாழாய்ப் போன பார்ப் பனீயம்! இதனைப் பரிகசிக்கும் நிலையில், இன்னொன்றை யும் நினைக்காமலும் இருக்க முடியவில்லை. மணல் திட்டை இராமன் பாலம் என்று சொல்லி, அதனை நினைவுச் சின்ன மாக ஆக்க வேண்டும் என்று ஒரு முதல் அமைச் சரே உச்சநீதிமன்றத்தில் மனு போடவில்லையா? அந்தப் பட்டியலில்தானே இதனையும் சேர்க்க வேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் ஒரு நீதிபதி நாக்கைப் பிடுங்குமாறு கேட்டார். வழிபாட்டுச் சின்னம் இத்தனைக் கிலோ மீட்டர் இருக்க முடியுமா - எப்படி வழிபடுவீர்கள் என்று கேட்கவில்லையா? இன் னொரு கேள்வியையும் அவர் கேட்டு இருக்கலாம்; ராமன் பாலத்தை நீரில் மூழ்கிச் சென்று கும்பிடு வீர்களா என்று கேட்டால் அதற்கென்ன பதில் சொல்வார்களாம்? - மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...